பூச்சி சீனிவாச அய்யங்கார்
பூச்சி சீனிவாச அய்யங்கார். (Poochi Srinivasa Iyengar) (பிறப்பு:1860 -இறப்பு:1919), இவரது இயற்பெயர் இராமநாதபுரம் சீனிவாச அய்யங்கார் என்பதாகும். கர்நாடக இசைப் பாடகர் மற்றும் இசை அமைப்பாளர் ஆவார். இராமநாதபுரத்தில் அனந்தநாராயண அய்யங்கார்- இலக்குமி தம்பதியருக்கு 16 ஆகஸ்டு 1860 அன்று பிறந்தவர் சீனிவாச அய்யங்கார். தமிழ் புரவலர் பாண்டித்துரைத் தேவர், சீனிவாசனின் பள்ளிப் பருவத் தோழர் ஆவார்.[1]
தியாகராஜரின் குரு-சீடர் பரம்பரையில் வந்த பட்டணம் சுப்பிரமணிய ஐயரிடம் சீடராக சேர்ந்து கர்நாடக இசைப் பயின்றவர். இவரது பல சீடர்களில் பிரபலமானவர் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் ஆவார். நூற்றுக்கும் மேற்பட்ட கீர்த்தனைகள் இயற்றிய பூச்சி சினிவாசய்யங்கார,[2]அக்கீர்த்தனைகளில் குறிப்பிட்ட முத்திரைகளைப் பயன்படுத்தியுள்ளார். இவர் 20 சூலை 1919 அன்று மறைந்தார்.
இவரது கீர்த்தனைகள் வண்டுகள் ரீங்காரம் செய்வது போன்று இனிமையாக இருக்கும் என்பதால், இவரை பூச்சி சீனிவாச அய்யங்கார் என்பர்.