உள்ளடக்கத்துக்குச் செல்

பூசாட் பண்டார் டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்

ஆள்கூறுகள்: 3°8′36.28″N 101°39′44.07″E / 3.1434111°N 101.6622417°E / 3.1434111; 101.6622417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 KG13  பூசாட் பண்டார் டாமன்சாரா
| எம்ஆர்டி
பூசாட் பண்டார் டாமன்சாரா நிலையம்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்Pusat Bandar Damansara
Stesen Pavilion Damansara Heights
白沙罗市中心
அமைவிடம்டாமன்சாரா நகர மையம்
கோலாலம்பூர் மலேசியா
ஆள்கூறுகள்3°8′36.28″N 101°39′44.07″E / 3.1434111°N 101.6622417°E / 3.1434111; 101.6622417
உரிமம் எம்ஆர்டி நிறுவனம்
இயக்குபவர்Rapid_KL_Logo ரேபிட் ரெயில்
தடங்கள்9  காஜாங் 
நடைமேடை2 பக்க நடை மேடைகள்
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்த்தப்பட்ட நிலை
நடைமேடை அளவுகள்3
தரிப்பிடம்Parking 580; Motorbike 30
துவிச்சக்கர வண்டி வசதிகள் 30
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KG13 
வரலாறு
திறக்கப்பட்டது KG13  (MRT) 16 திசம்பர் 2016
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
   
பிலியோ
குவாசா டாமன்சாரா
 
காஜாங் வழித்தடம்
 
செமாந்தான்
காஜாங் நிலையம்
புக்கிட் கியாரா
குவாசா டாமன்சாரா
 
காஜாங் வழித்தடம்
 
செமாந்தான்
காஜாங் (எதிர்கால சேவை)
அமைவிடம்
Map

பூசாட் பண்டார் டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Pusat Bandar Damansara MRT Station; அல்லது Pavilion Damansara Heights Station; மலாய்: Stesen MRT Pusat Bandar Damansara) என்பது மலேசியா, கோலாலம்பூர், டாமன்சாரா நகர மையம், டாமன்சாரா அயிட்ஸ் மற்றும் பங்சார் பகுதிகளுக்குச் சேவை வழங்கும் ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) நிலையம் ஆகும். இந்த நிலையம் காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தில் அமைந்துள்ளது.

இந்த நிலையம் சுங்கை பூலோ - காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தில் முதல் கட்ட நடவடிக்கைகளின் கீழ் திசம்பர் 16, 2016 அன்று திறக்கப்பட்டது.

நிலைய அமைவிடம்

[தொகு]

இந்த நிலையம் சுங்கை பூலோ - காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தில் இரண்டு பக்கவாட்டுத் தளங்களையும்; உயர்த்தப்பட்ட நிலைய வடிவமைப்பையும் கொண்டுள்ளது.

இசுபிரிண்ட் விரைவுச்சாலையின் மாரோப் மாற்றுச் சாலைக்கு (Maarof Interchange) மேலே அமைந்துள்ள இந்த நிலையம்; சுங்கை பூலோ - காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தில் தரை மட்டத்திலிருந்து மிக உயரமான நிலையில் கட்டப்பட்ட நிலையங்களில் ஒன்றாகும்.

இந்த நிலையம் பெவிலியன் டாமன்சாரா அயிட்ஸ் (Pavilion Damansara Heights) பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. மேலும் இந்த நிலையத்திற்கும் சில்லறை விற்பனைப் பகுதிகளுக்கும் இடையே ஒரு நேரடி இணைப்பை உருவாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.[1][2]

காஜாங் வழித்தடம்

[தொகு]

காஜாங் வழித்தடம் அல்லது காஜாங் எம்ஆர்டி வழித்தடம் (ஆங்கிலம்: Kajang Line அல்லது MRT Kajang Line அல்லது Kelana Jaya Komuter Line; என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் பெரும் விரைவு தொடருந்து வழித்தடம் (Mass Rapid Transit Line) (MRT) ஆகும்.

கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடத்திற்கு (LRT Kelana Jaya Line) (LRT) பிறகு கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உருவாக்கப்பட்ட இரண்டாவது முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பு ஆகும்.[3]

எம்ஆர்டி நிறுவனம்

[தொகு]

இந்த வழித்தடம் எம்ஆர்டி நிறுவனத்திற்கு சொந்தமானது; மற்றும் ரேபிட் ரெயில் நிறுவனத்தின் ரேபிட் கேஎல் சேவையின் ஒரு பகுதியாகவும்; ஒருங்கிணைந்த கிள்ளான் பள்ளத்தாக்கு போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும் இயக்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வமான போக்குவரத்து வரைபடங்களில் வழித்தடம் 9; வழித்தடத்தின் நிறம் பச்சை என பொறிக்கப்பட்டு உள்ளது. எம்ஆர்டி நிறுவனத்தின் கிள்ளான் பள்ளத்தாக்கு போக்குவரத்து திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட மூன்று தொடருந்து வழித்தடங்களில் இதுவும் ஒன்றாகும்.[4]

நிலைய அமைப்பு

[தொகு]
L2 நடைமேடை தளம் பக்க நடைமேடை
நடைமேடை 1 9  காஜாங்  (→) காஜாங்  KG35  (→)
நடைமேடை 2 9  காஜாங்  (←) குவாசா டாமன்சாரா  KG04  (←)
பக்க நடைமேடை
L1 இணைப்புவழி கட்டணப் பகுதிக்கான நுழைவாயில்கள், நடைமேடைகளுக்கான நகரும் படிக்கட்டுகள், கட்டண இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகம், நிலையக் கட்டுப்பாடு, கடைகள்
G தரை தளம் நுழைவாயில் A; நுழைவாயில் B; பேருந்து நிறுத்தம், வாடகை வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் தனியார் வாகன நிறுத்துமிடங்கள்

வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்

[தொகு]
 காஜாங்  வழித்தட நிலையம்
நுழைவாயில் இடம் இலக்கு தோற்றம்
A இசுபிரிண்ட் விரைவுச்சாலை - மேற்குப் பக்கம் பேருந்து நிறுத்தம், எல்ப் குடியிருப்பு, பங்சார் கோபுரம், பங்சார் கடைவள மையம், மாரோப் சாலை
B இசுபிரிண்ட் விரைவுச்சாலை - கிழக்குப் பக்கம் பெவிலியன் டாமன்சாரா அயிட்ஸ், டாமன்சாரா சிட்டி மால், டாமன்சாரா நகர மையம், டுவின்ஸ்@டாமன்சாரா அயிட்ஸ், விசுமா லென்சா, ஜோகார் சாலை, காசா சாலை, தாமான் லேலா சாலை

பேருந்து சேவைகள்

[தொகு]
பேருந்து தொடக்கம் இலக்கு பயணவழி குறிப்புகள்
T817 [5]  SBK13  பெவிலியன் டாமன்சாரா அயிட்ஸ்-பூசாட் பண்டார் டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்
நுழைவாயில் A
மிட்வெளி மெகாமால் தெற்கு வளாகம்
 KB01  மிட் வெளி கொமுட்டர் நிலையம்
ஜோகார் சாலை
மாரோப் சாலை
T818 [6]  SBK13  பெவிலியன் டாமன்சாரா அயிட்ஸ்-பூசாட் பண்டார் டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்
நுழைவாயில் B
செரி அர்த்தாமாஸ்
மாற்றுச் சாலை 190
 KA05  சிகாம்புட் கொமுட்டர் நிலையம்
ஜோகார் சாலை
பெர்சியாரான் புக்கிட் கியாரா
19/70A சாலை
T819 [7]  SBK13  பெவிலியன் டாமன்சாரா அயிட்ஸ்-பூசாட் பண்டார் டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்
நுழைவாயில் B
 KA05  சிகாம்புட் கொமுட்டர் நிலையம்
 KA01   KJ15   SBK15   MR1   ERL  கோலாலம்பூர் சென்ட்ரல்
ஜோகார் சாலை
செமாந்தான் சாலை
1/42 சாலை
சிகாம்புட்
அப்துல் ஆலிம் சாலை
சென்ட்ரல் நிலைய சாலை 5
T820 [8]  SBK13  பெவிலியன் டாமன்சாரா அயிட்ஸ்-பூசாட் பண்டார் டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்
நுழைவாயில் B
கோலாலம்பூர் மாநகராட்சி
 SP6  பண்டாராயா எல்ஆர்டி நிலையம்
 KA03  பேங்க் நெகாரா கொமுட்டர் நிலையம்
ஜோகார் சாலை
செமாந்தான் சாலை
அப்துல் ஆலிம் சாலை
நாடாளுமன்ற சாலை
துன் பேராக் சாலை
ராஜா லாவுட் சாலை
T852 [9]  SBK13  பெவிலியன் டாமன்சாரா அயிட்ஸ்-பூசாட் பண்டார் டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்
நுழைவாயில் B
மோன்ட் கியாரா
செரி அர்த்தாமாஸ்
இசுபிரிண்ட் விரைவுச்சாலை
செத்தியாபூடி சாலை
செத்தியா மூர்னி சாலை
மலேசிய தேசிய அறிவியல் மையம்
புக்கிட் கியாரா சாலை
செரி அர்த்தாமாஸ் சாலை 1

டூத்தாமாஸ் சாலை 1
டூத்தாமாஸ் சாலை
டூத்தா கியாரா சாலை
கியாரா சாலை

காட்சியகம்

[தொகு]

பூசாட் பண்டார் டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் - 2024

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pavilion Damansara Heights is ‘the address’" (in en). The Star (Malaysia). 7 October 2017. https://www.thestar.com.my/business/business-news/2017/10/07/pavilion-damansara-heights-is-the-address/. 
  2. "Pavilion Damansara Heights Mall Opens Its Doors To Shoppers". The Rakyat Post (in ஆங்கிலம்). 9 October 2023. Retrieved 9 October 2023.
  3. Ruban, A. (Dec 16, 2016). "A quiet start to Malaysia's first MRT, but commuters happy". The Malay Mail Online. http://www.themalaymailonline.com/malaysia/article/a-quiet-start-to-malaysias-first-mrt-but-commuters-happy. 
  4. "Phileo Damansara MRT station near Menara STAR, HQ of The Star newspaper". klia2.info. 29 January 2019. Retrieved 13 September 2025.
  5. RapidKL Bus Route T817
  6. RapidKL Bus Route T818
  7. RapidKL Bus Route T819
  8. RapidKL Bus Route T820
  9. RapidKL Bus Route T852

வெளி இணைப்புகள்

[தொகு]