பூங்குன்னம் சீதாராமசாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரள மாநிலத்திலுள்ள திருச்சூர் பட்டணத்துக்கு பக்கத்திலிறுக்கும் பூங்குன்னம் என்னும் ஊரில் உள்ள இக்கோயிலில் ஸ்ரீராமன், சீதை ஆகிய இருவரும் சேர்ந்து எழுந்தருளியுள்ளனர். இங்கு வடக்குப் பிரகாரத்தில் லட்சுமணனும், தெற்குப் பிரகாரத்தில் ஆஞ்சனேயரும் கோயில் கொண்டிருக்கின்றனர். இங்கு ராமர், லட்சுமணர், சீதை, ஆஞ்சநேயர், சந்திரசேகர் (சிவன்), கணபதி, சுப்பிரமண்ணியரும் முதலிய உற்சவ மூர்த்திகளும் உள்ளனர்.

சிவன் கோயில்[தொகு]

இக்கோயிலின் வடக்குப் பிரகாரத்தில் வசந்த மண்டபமும் தனியே ஒரு சிறிய சிவன் கோயில் உள்ளன. இங்கு ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கமும், மரத்தூண்கலூடன் கூடிய முன் மண்டபமும், சிறு நந்தி ஒன்றும் உள்ளது.

தமிழ் பிராமணர்கள்[தொகு]

இப்பகுதியில் அதிகமாகத் தமிழ் பிராமணர்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடியேறியவர்களின் சந்ததியினர் பாலக்காட்டுக்காரர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தமிழகத்திலிருக்கும் பிராமண சமுதாயத்தினருடன் இன்றும் திருமண உறவு வைத்துக் கொண்டுள்ளனர்.

ராம நவமி விழா[தொகு]

இக்கோயிலில் ராம நவமி விழாவைத் தமிழ்நாட்டில் கொண்டாடுவதைப் போல் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இக்கோயிலுக்காகத் தனித் தேர் ஒன்றும் செய்து வைக்கப்பட்டுள்ளது. தேர்த்திருவிழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.