பூங்காவனம் (இதழ்)
Appearance
பூங்காவனம் இலங்கை, கொழும்பிலிருந்து வெளிவரும் கலை இலக்கிய சமூக மாதாந்த இதழாகும். இதன் முதல் இதழ் மே 2010 இல் வெளிவந்தது. இதன் பதிவிலக்கம் ISSN 2012-6700 ஆகும்.
காலாண்டு சஞ்சிகையாக 2010 ஆய் ஆண்டிலிருந்து பூங்காவனம் சஞ்சிகை வெளிவருகிறது. இதன் முதலாவது இதழ் திருமதி. பவானி சிவகுமாரன் அவர்களது புகைப்படத்தை அட்டைப் படமாகத் தாங்கியதாக வெளிவந்தது.
உள்ளடக்கம்
[தொகு]ஒரு கலை இலக்கிய இதழ் என்றடிப்படையில் சிறுகதைகள், கவிதைகள், மகளிர் தொடர்பான ஆக்கங்களை இது உள்ளடக்கியிருந்தது. பூங்காவனம் இதழின் முகப்பட்டையில் இலங்கையில் பிரபல்யம் பெற்றிருந்த பெண்களின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டிருந்தன. பெண்கள் தொடர்பான பல்வேறுபட்ட ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தமையும் இவ்வதழில் குறிப்பிடத்தக்க விடயமாகும்.