பூங்காத்தே பூங்காத்தே போனவள பூங்குயில

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
"பூங்காத்தே பூங்காத்தே போனவள பூங்குயில"
பாடல் பாடலை பாடியவர்கள் கே. ஜே. யேசுதாஸ்

நாளெல்லாம் பௌர்ணமி திரைப்படத்திலிருந்து

வெளிவந்த ஆண்டு 1986
பாடலாசிரியர் வைரமுத்து
இசையமைப்பாளர் கங்கை அமரன்

பூங்காத்தே பூங்காத்தே என்பது 1986இல் வெளிவந்த நாளெல்லாம் பௌர்ணமி திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு தமிழ்ப் பாடல் ஆகும். இந்தப் பாடலை கவிஞர் வைரமுத்து எழுதினார். கே. ஜே. யேசுதாஸ் பாடினார். கங்கை அமரன் இப்பாடலுக்கு இசை அமைத்திருந்தார்.[1]

பாடல் வரிகள்[தொகு]

பூங்காத்தே பூங்காத்தே போனவள
பூங்குயில பாத்தியா
தாங்காம தவிச்சேனே சின்னவள
என்னிடத்தில் சேப்பியா
கண்ணால பாத்தது கனவாக தோணுது
கண்ணுக்குள்ள கண்ணீர் வற்றி போனது...

பூங்காத்தே பூங்காத்தே போனவள
பூங்குயில பாத்தியா
தாங்காம தவிச்சேனே சின்னவள
என்னிடத்தில் சேப்பியா

பள்ளி கூடம் போனாலும்
பாதையோரம் நான் பார்ப்பேன்
கண்ணம்மா சௌக்கியமா
யாரை பார்த்து நான் கேட்பேன்

பட்டம் போன நூலானேன்
பார்த்து சிரிக்க ஆளானேன்
அம்மாடி உன்னால அமாவசை போலானேன்
ஒரு தரம் கண்ணீர் விட ஓடைஞ்சதே கம்மாக்கர
உன்ன எண்ணி அனலாச்சு ஆத்தங்கர...

பூங்காத்தே பூங்காத்தே போனவள
பூங்குயில பாத்தியா
தாங்காம தவிச்சேனே சின்னவள
என்னிடத்தில் சேப்பியா

அள்ளி தேத்த ஆள் இல்ல
அழுது பாத்தும் பால் இல்ல
உன்ன நான் காங்காம நானும் கூட நான் இல்ல
கட்டுமானம் ஏம்புள்ள காவல் தண்டி வா புள்ள
என்னென்ன ஆனாலும்
மச்சான்தாண்டி மாப்புள்ள
உம் மேல குத்தமில்ல
உள்ளூரு சுத்தம் இல்ல
பாவி நெஞ்சு துடிச்சாலும் சத்தம் இல்ல

பூங்காத்தே பூங்காத்தே போனவள
பூங்குயில பாத்தியா
தாங்காம தவிச்சேனே சின்னவள
என்னிடத்தில் சேப்பியா
கண்ணால பாத்தது கனவாக தோணுது
கண்ணுக்குள்ள கண்ணீர் வற்றி போனது...

பூங்காத்தே பூங்காத்தே போனவள
பூங்குயில பாத்தியா
தாங்காம தவிச்சேனே சின்னவள
என்னிடத்தில் சேப்பியா

உசாத்துணை[தொகு]

  1. "Poongathe Poongathe". பார்த்த நாள் டிசம்பர் 13, 2020.

வெளி இணைப்புகள்[தொகு]