பூங்கண் உத்திரையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பூங்கண் உத்திரையார்[தொகு]

   உத்திரையார் என்ற இயற்பெயருடைய இவர் சோழநாட்டிலுள்ள பூங்கண் என்ற ஊரைச் சார்ந்தவர். இவர் உத்திரத்தில் பிறந்ததால் உத்திரை என்று அழைக்கப்பட்டது. இவருடைய பாடல்கள் குறுந்தொகையில் இரண்டும், புறநானுாற்றில் ஒன்றுமாக உள்ளது. (1)


           'தாதின் செய்த தண்பனிப் பாவை
            காலை வருந்தும் கையாறு ஓம்பு' என
            ஓரை ஆயம் கூறக்கேட்டும்,
            இன்ன பண்பின் நீங்க, அன்ன..........
                             குறுந்தொகை 48 : பாலை.
    பூக்களின் மகரந்தத்தால் செய்த விளையாட்டுப் பாவை, இரவு முழுக்கக் குளிர் பனியில் கிடந்து காலைப் பொழுதில் வருந்துவதால் பிறந்த செயலறுதலை ஒழிப்பாயாக என்று விளையாடிடும் மகளிர் கூட்டம் கூறியது. அதைக் கேட்டும் அளவற்ற துயரில் வருந்துகின்ற நலமான நெற்றியுடைய இவள் பசலை நீங்க, நமது விருப்பமாகிய 'வரைவேன்' எனும் ஒரு சொல்லைத் தலைவருக்குச் சொல்ல இயலாதோ?
            காண்இனி வாழி தோழி யாணர்க்
            கடும்புனல் அடைகரை நெடுங்கயத்து இட்ட
            மீன்வலை மாப்பட் டாஅங்கு,
            இது மற்றுஎவனோ, நொதுமலர் தலையே?
                            குறுந்தொகை 171 : மருதம்.
     அன்புத் தோழியே! நீ வாழ்வாயாக! புது வருவாயாகிய பெரும் வெள்ளம் அடைந்த கரையை உடைய பெரிய குளத்தில் வீசி மீன்வலையில், விலங்கொன்று தானே அகப்பட்டதுபோல, வரைவுக்குரிய அயலவரின் முயற்சியானது என்ன பயனைத் தரவல்லது?
           மீன் உணவு கொக்கின் துவி அன்ன
           வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
           களிறு எறிந்து பட்டனன்' என்னும் உவகை
           ஈன்ற ஞான்றினும் பெரிதே: கண்ணீர்

                            திணை - தும்பை: துறை - உவகைக் கலுழ்ச்சி.
     மீன் உண்ணும் கொக்கின் வெள்ளை இறகினைப் போல, நரைத்த கூந்தலை உடைய மூதாட்டியின் இளைய மகன் போர்க்களத்தில் ஆண் யானையைக் கொன்று வென்று தானும் இறந்தான். அதைக் கேட்டவள், அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்ந்தாள். அதனால் அவளுடைய கண்கள் சொறிந்த கண்ணீர்த் துளிகள், மூங்கிலில் மழை பெய்த போது தங்கித் துங்கித் தளிர்க்கும் நீர்த் துளியிலும் மிகுதியாகும்.
                                        புறநானுறு - 277.

மேற்கோள்கள்

1.[1]

 1. ந.முருகேசபாண்டியன்,அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், டிசம்பர் - 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூங்கண்_உத்திரையார்&oldid=2637023" இருந்து மீள்விக்கப்பட்டது