தீ மிதித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பூக்குழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இலங்கையில் தீ மிதித்தல்

தீ மிதித்தல் என்பது வெறும் காலில் தீயூட்டப்பட்ட எரிக்கரியின் மீதோ, சுடு கல்லின் மீதோ நடப்பதைக் குறிக்கும்.

உலகின் பலப்பகுதிகளிலும் இது நடைமுறையில் உள்ளது. இதன் மிகப் பழைய குறிப்புகள் இந்தியாவின் இரும்பு யுகம் அண். 1200 பொ.முஇல் கிடைக்கின்றன. இது பெரும்பாலும் ஒரு சமயம் சார்ந்த சடங்காகவோ, ஒரு நபரின் வலிமை மற்றும் வீரத்தின் சோதனையாகவோ அல்லது ஒருவரின் நம்பிக்கையின் சோதனையாகவோ பயன்படுத்தப்படுகிறது.[1][2]

யப்பானில் தீ மிதி திருவிழா, 2016

தீக்காயங்களைத் தூண்டுவதற்கு பாதங்கள் தரையில் தொடர்பு கொள்ளும் நேரம் போதுமானதாக இல்லை என்பதாலும், எரியும் கரி ஒரு நல்ல வெப்பக் கடத்தி அல்ல என்பதாலும் தீ மிதிப்பதால் காயங்கள் ஏற்படுவது மிகவும் குறைவு என தற்கால இயற்பியல் விளக்குகின்றார்கள்.[3]

இந்து சமயத்தில்[தொகு]

இது இந்து சமயத்தில் நேர்த்திக் கடன்களில் ஒன்றாகும். இதனை அக்னி குண்டம் இறங்குதல், பூமிதித்தல் என்ற பல பெயர்களில் அழைக்கின்றார்கள். இவ்வாறு தீ மிதிப்பவர்களை மருளாளிகள் என அழைக்கின்றார்கள். [4]

தீ மிதித்தலுக்காக காப்பு கட்டி பக்தர்கள் விரதம் இருக்கின்றார்கள். அம்மன் கோயில்களின் முன்பு தீ மிதித்தலுக்காக அக்னி குண்டம் தயார் செய்யப்படுகிறது. அம்மன் கோயில் திருவிழாக்களின் போது, சாமியாடிக் கொண்டு நீர்நிலைகளிலிருந்து நீராடி மாலையணிந்து பூக்குழிக்கு வருகின்றார்கள். பக்தியின் பரவசத்தில் இருந்துகொண்டு வரிசையாக பூக்குழிக்குள் இறங்குகிறார்கள்.

இவ்வாறு பூக்குழி இறங்குபவர்களுக்கு காயம் ஏற்பட்டாலோ, அதில் விழுந்தாலோ அவை அபசகுணமாக கருதப்படுகிறது.


ஆதாரங்கள்[தொகு]

  1. H2G2, Earth Edition. "Firewalking". H2G2. H2G2. பார்க்கப்பட்ட நாள் 2003-10-22.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  2. Pankratz, Loren (1988). "Fire Walking and the Persistence of Charlatans". Perspectives in Biology and Medicine 31 (2): 291–298. doi:10.1353/pbm.1988.0057. பன்னாட்டுத் தர தொடர் எண்:1529-8795. பப்மெட்:3281133. http://muse.jhu.edu/content/crossref/journals/perspectives_in_biology_and_medicine/v031/31.2.pankratz.html. 
  3. Willey, David. "Firewalking Myth vs Physics". University of Pittsburgh. பார்க்கப்பட்ட நாள் ஜூன் 29, 2010. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  4. http://temple.dinamalar.com/news_detail.php?id=21692
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீ_மிதித்தல்&oldid=3420356" இலிருந்து மீள்விக்கப்பட்டது