உள்ளடக்கத்துக்குச் செல்

பூக்கான் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூக்கான் மொழி
Bookan Language
Banggi
Baukan Murut
நாடு(கள்)மலேசியா
பிராந்தியம்போர்னியோ
இனம்2,400 (2017)[1]
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
?  (2006)[2]
இலத்தீன்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3bnb
மொழிக் குறிப்புbook1241[3]

பூக்கான் மொழி (ஆங்கிலம்: Bookan language, Baukan Murut) என்பது மலேசியாவின் சபா மாநிலத்தைச் சேர்ந்த மூருட்டு மக்கள் பேசும் ஒரு மொழியாகும். இந்த மொழி தற்போது அழியும் நிலையில் உள்ளது.[4] பூக்கான் மொழி ஆஸ்திரோனீசிய மொழிகள் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும்.[5] அதில் மலாய் மொழி மற்றும் இந்தோனேசிய மொழி போன்ற மொழிகளும் அடங்கும்.

மூருட்டு மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சபா பகுதிக்கு இடம் பெயர்ந்து, அங்கு குடியேறியபோது தங்களுக்கே உரிய தனித்துவமான மொழியையும் உடன் கொண்டு வந்ததாக நம்பப்படுகிறது. காலப்போக்கில், சுற்றியுள்ள மொழிகள் மற்றும் பண்பாடுகளின் தாக்கத்தால், பூக்கான் மொழி தனக்கென தனித்துவமான சிறப்புகளையும் வட்டார வழக்குகளையும் வளர்த்துக் கொண்டது.[5]

வரலாறு

[தொகு]

பூக்கான் மொழி மூருட்டு மக்களுக்கு அளப்பரிய முக்கியத்துவம் வாய்ந்தது; ஏனெனில் இது அவர்களின் பண்பாட்டுப் பாரம்பரியம் மற்றும் மரபுகளுடனான ஒரு முக்கிய இணைப்பாக விளங்குகிறது. இம்மொழியின் மூலமாகவே மூருட்டு மக்கள் தங்களின் வரலாறு, தொன்மங்கள்; மற்றும் மூதாதையரின் பாரம்பரிய அறிவையும் பகிர்ந்து கொள்கின்றனர்.[6]

இந்த மொழி அவர்களின் அடையாளத்துடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்து உள்ளது. அத்துடன், அவர்களின் பழக்கவழக்கங்கள், விழுமியங்கள் மற்றும் நம்பிக்கைகளின் களஞ்சியமாகவும் திகழ்கிறது. மேலும், இந்த மொழி அவர்களின் சமூக உணர்வை வலுப்படுத்துவதோடு, மூருட்டு மக்களிடையே இருக்கும் சமூக பிணைப்புகளையும்[6] மென்மேலும் உறுதி படுத்துகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Bookan Murut is an endangered indigenous language of Malaysia.
  2. ↑ பூக்கான் மொழி
    Bookan Language
    at Ethnologue (18th ed., 2015)
  3. ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Bookan". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  4. ↑ ""The Murut Bookan documentation project, funded by the Endangered Languages Documentation Programme (ELDP) from 2023 to 2024, is a collaborative initiative involving linguists, the local community, native-speaker consultants, and local researchers."". elararchive.org. Retrieved 15 August 2026.
  5. 1 2 ""The Bookan language is an endangered language spoken by the Murut people, an indigenous group residing in the state of Sabah, Malaysia. This unique language, which is rapidly declining in usage, holds immense cultural value and is an important part of the Murut identity. "". bookan.com. Retrieved 15 August 2026.
  6. 1 2 ""Sabah's Murut celebrate cultural heritage at inaugural festival"". thevibes.com. Retrieved 15 August 2026.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூக்கான்_மொழி&oldid=4639919" இலிருந்து மீள்விக்கப்பட்டது