பூகம்பமும் சுனாமியும் (நூல்)
Jump to navigation
Jump to search
பூகம்பமும் சுனாமியும் | |
---|---|
நூல் பெயர்: | பூகம்பமும் சுனாமியும் |
ஆசிரியர்(கள்): | ஏற்காடு இளங்கோ |
அசல் தலைப்பு: | பூகம்பமும் சுனாமியும் |
வகை: | அறிவியல் |
காலம்: | ஆகஸ்டு 2012 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 176 |
பதிப்பகர்: | சீதை பதிப்பகம் |
ஆக்க அனுமதி: | பதிப்பகத்திற்கு |
பூகம்பமும் சுனாமியும் ஏற்காடு இளங்கோ எழுதியுள்ள அறிவியல் தமிழ் நூலாகும். இந்நூலில் பிரபஞ்சத் தோற்றம், பூமியின் அமைப்பு, பூகம்பத்திற்கான காரணங்கள், பூகம்பத்தினை அளவிடும் முறைகள், சுனாமி ஏற்படக் காரணமானவை மற்றும் அதனை முன் உணர்தல் போன்றவை விளக்கப்பட்டுள்ளன.
உள்ளடக்கம்[தொகு]
பிரபஞ்சத் தோற்றம்[தொகு]
இப்பகுதியில் பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்தும், அறிவியலாளர்கள் அதனைக் கண்டுபிடித்ததைப் பற்றியும் ஆசிரியரால் விவரிக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தின் ஒரு பகுதியான பால்வெளி மண்டலம், அதன் பகுதியான சூரியக் குடும்பத்தின் அமைப்பு, சுழற்சி ஆகியவை குறித்து இப்பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது.
பூமி அமைப்பு[தொகு]
இப்பகுதியில் புவியின் தோற்றம், கட்டமைப்பு, வடிவம் ஆகியவை குறித்து விவரிக்கப்பட்டுள்ளன.