புஷ்பா பாவே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புஷ்பா பாவே (23 மார்ச் 1939 – 2 அக்டோபர் 2020) [[இந்தியா]]வின் மகாராஷ்டிரா மாநிலத்தின், மும்பையைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர் ஆவார். மராத்தி மற்றும் சமஸ்கிருதப் பேராசிரியையான புஷ்பா பாய் என்று அவரது மாணவர்களாலும் பொது சமூகத்திலும் அன்புடன் அழைக்கப்பட்ட இவர் ஒரு சமூக, அரசியல் விமர்சகராகவும், நாடகங்களை எழுதி இயக்கியும் உள்ளார். [1]

பாவே, தனது சமூக செயல்பாடுகளில் வெளிப்படையாகவும், எதற்கும் அச்சமற்றவராகவும் இருந்த காரணத்தால், மும்பையின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்டார். இந்தியாவின் மும்பை மாநகரத்தில் உள்ள தாதர் பகுதியிலேயே பிறந்து வளர்ந்த இவர், மும்பை எல்பின்ஸ்டோன் கல்லூரியில் மராத்தி மற்றும் சமஸ்கிருதத்தில் தனது முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். [2]

ராம்நரேன் ரூயா கல்லூரியில் சமஸ்கிருதம் கற்பித்த பேராசிரியரான இவர், 1999 ம் ஆண்டில் அதன் மராத்தி துறையின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றார். மஹாராஷ்டிர மாநிலம் உருவாவதற்கு வழிவகுத்த சம்யுக்தா மகாராஷ்டிரா இயக்கம், கோவா விடுதலை இயக்கம் உட்பட, பல்வேறு இயக்கங்களில்  ஆறு தசாப்தங்களாக மகாராஷ்டிராவில் சமூக இயக்கங்களுக்கு அவர் செய்த மகத்தான பங்களிப்பிற்காக அறியப்பட்டுள்ளார்.[3]

1975 ஆம் ஆண்டு நெருக்கடி நிலையின் போது மிருணாள் கோர் போன்ற பல அரசியல் தலைவர்களுக்கு  அவரது வீட்டிலேயே அடைக்கலம் கொடுத்துள்ளார்.. [4]

மராட்டிய எழுத்தாளராகவும், ஒளிபரப்பாளராகவும் இருக்கும் ஆனந்த் பாவேவை திருமணம் செய்துள்ளார். பாவே, சமூக சீர்திருத்தவாதியான டாக்டர் நரேந்திர தபோல்கருடன் செயல்பாட்டுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். மதவெறி மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தபோல்கர் முன்வைத்த மூடநம்பிக்கை எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்க அவர் உதவினார். [5] மேலும் 1970ம் ஆண்டுகளில் மராத்வாத்டா பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்றி,பாபாசாகேப் அம்பேத்கத்ரின் பெயரை வைக்கக்கோரிய இயக்கத்திற்கும் உதவியுள்ளார்.

மோசமான நீரிழிவு நோயால் இவரது கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சக்கர நாற்காலியில் தனது கடைசி நாட்களைக் கழித்தவாறு அவரது எண்பத்தியோராவது வயதில் 2020ம் ஆண்டு அக்டோபர் 2ம் நாள் இறப்பை சந்தித்தார்.[6] புஷ்பாபாய் உடனான  உழைப்பு மற்றும் பிரச்சனைகள் குறித்த உரையாடல் என்ற தலைப்பில் மேதா குல்கர்னியுடன் பாவே நிகழ்த்திய பரந்துபட்ட உரையாடல்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு உரையாடல் நினைவுக்குறிப்பு 2020 ம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Salil Tripathi (11 October 2020). "Pushpa Bhave (1939-2020): Cultural critic, social activist, the embodiment of middle-class Mumbai". scroll.in. பார்க்கப்பட்ட நாள் 11 October 2020.
  2. "Social activist Pushpa Bhave passes away at 81". indiatimes.com. 3 October 2020. பார்க்கப்பட்ட நாள் 11 October 2020.
  3. Veteran social activist Pushpa Bhave passes away, 3 October 2020, பார்க்கப்பட்ட நாள் 11 October 2020
  4. Mishra, Ambarish (4 October 2020). "Mumbai: Critic, teacher, theatre lover and activist Pushpa Bhave dead at81". Times of India. பார்க்கப்பட்ட நாள் 11 October 2020.
  5. Smruti Koppikar (6 October 2020). "Pushpa Bhave's indelible legacy Scholar, critic and activist was voice of Maharashtra's conscience". பார்க்கப்பட்ட நாள் 11 October 2020.
  6. "மூத்த ஆர்வலர், அறிஞர் புஷ்பா பாவே தனது 81வது வயதில் காலமானார்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=புஷ்பா_பாவே&oldid=3671439" இலிருந்து மீள்விக்கப்பட்டது