புஷ்பா தேவி சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புஷ்பா தேவி சிங் (Pushpa Devi Singh) (பிறப்பு 18 மே 1948) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவாா். இவா் ஏழாவது மக்களவையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றினார்.

சுயசரிதை[தொகு]

புஷ்பா தேவி சிங் சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூரில் ஒரு பழங்குடி குடும்பத்தில் பிறந்தார். மத்திய பிரதேச முதல்வராக இருந்த சாரன்கர் இராச்சியத்தைச் சேர்ந்த இராஜா நரேஷ் சந்திர சிங்கின் மகளாவார். சாகர் புனித ஜோசப் கான்வென்ட் பள்ளியிலும், போபாலின் மகாராணி இலட்சுமிபாய் கல்லூரியிலும், உஜ்ஜைனியின் விக்ரம் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார்.

இளைய மக்களவை உறுப்பினர்[தொகு]

1980ஆம் ஆண்டில், இவர் தனது 31 வயதில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு 53.76 சதவீத வாக்குகளைப் பெற்று, நாடாளுமன்றத்தின் இளைய உறுப்பினர்களில் ஒருவரானார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஜனதா கட்சியின் நர்ஹரி பிரசாத் சாய் 21.97 சதவீத வாக்குகளைப் பெற்றார்.[1]

எட்டாவது மக்களவை[தொகு]

1984ஆம் ஆண்டில் இவர் மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு எட்டாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலில் 62.51 சதவீத வாக்குகளைப் பெற்றாா். இவர இஎதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரான நந்தகுமார் சாய் என்பவர் 29.98 சதவீத வாக்குகளைப் பெற்றார். இது 2004 வரை இவரது தொகுதியில் ஒரு உடைக்கப்படாத சாதனையாகும்.

1989 பொதுத் தேர்தலில் ராஜீவ் காந்தியின் காங்கிரசுக்கு எதிராக அலை ஏற்பட்டபோது, நந்த்குமார் சாயால் இவர் தோற்கடிக்கப்பட்டார்.
1991இல் பத்தாவது மக்களவை தேர்தலில் இவர் 53.13 சதவீத வாக்குகளைப் பெற்று மீண்டும் வெற்றி பெற்று மீண்டும் அபோது பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த நந்த்குமார் சாயை தோற்கடித்தார்.[2] இந்த மூன்று தேர்தல்களிலும் அவர் பெற்ற வெற்றிகள்தான் காங்கிரஸ் கட்சி தொகுதியில் 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது.

1996 மக்களவைத் தேர்தலில் நந்த்குமார் சாய் புஷ்பா சிங்கை தோற்கடித்தார். இருவருக்கும் இடையிலான நான்கு போட்டிகளில், புஷ்பா சிங் இரண்டு முறையும் (1984, 1991), நந்த்குமார் சாய் இரண்டு முறையும் (1989, 1996) வென்றனர்.

தற்போது[தொகு]

இவர், தற்போது இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தீவிர உறுப்பினராக உள்ளார். சத்தீஸ்கரின் சார்ன்கரிலுள்ள கிரிவிலாஸ் அரண்மனையில் வசிக்கிறார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புஷ்பா_தேவி_சிங்&oldid=3194746" இருந்து மீள்விக்கப்பட்டது