புஷ்பகிரி விகாரம்
| புஷ்பகிரி | |
|---|---|
பாறை செதுக்குதல்கள் | |
| அடிப்படைத் தகவல்கள் | |
| அமைவிடம் | India |
| புவியியல் ஆள்கூறுகள் | 20°43′22″N 86°11′25″E / 20.722739°N 86.190338°E |
| சமயம் | பௌத்தம் |
| மண்டலம் | கிழக்கிந்தியா |
| மாநிலம் | ஒடிசா |
| மாவட்டம் | ஜாஜ்பூர் |
| செயற்பாட்டு நிலை | பாதுகாக்கப்பட்டப் பகுதி |
புஷ்பகிரி விகாரம் (Pushpagiri Vihara) என்பது இந்தியாவின் ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்திலுள்ள லங்கூடி மலையின் (அல்லது மலைகள்) மேல் அமைந்துள்ள ஒரு பண்டைய மகா விகாரம் அல்லது துறவற வளாகமாகும். சீனப் பயணி சுவான்சாங்கின் (கி. பி.602 -கி. பி 664 ) குறிப்பிலும், பிற பண்டைய ஆதாரங்களிலிலும் இந்த விகாரத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 1990கள் வரை, இது ஜாஜ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள லலித்கிரி-ரத்னகிரி-உதயகிரி துறவறத் தலங்களில் ஒன்று அல்லது அனைத்தும் என்று கருதப்பட்டது. இந்த தளங்களில் பல கட்டிடங்களின் இடிபாடுகள், பல்வேறு அளவிலான தாது கோபுரங்கள், சிற்பங்கள் (இப்போது இவற்றில் பல அருங்காட்சியகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன) உள்ளன.
இருப்பினும், 1996-2006 காலத்தில் லங்கூடி மலைகளில் நடத்தப்பட்ட தொல்லியல் அகழ்வாராய்ச்சியின் விளைவாக மற்றொரு தளம் கண்டுபிடிக்கப்பட்டது. உள்ளூர் மடாலயத்தை புஷ்ப சபார் கிரியா என்று விவரிக்கும் கல்வெட்டுகள் மற்றும் அகழ்வாராய்ச்சி செய்பவர்களால் புஷ்பகிரி என்று அடையாளம் காணப்பட்டது. இது இப்போது அறிஞர்களிடையே பொதுவான கருத்தாக மாறியுள்ளது. இந்த தளம் இப்போது சுற்றுலாவுக்கு அணுகக்கூடியதாக மாற்றப்பட்டுள்ளது.
பண்டைய இந்தியாவில் புஷ்பகிரி ஒரு முக்கியமான பௌத்த மதத் தளமாக இருந்தது என்பதை சுவான்சாங்கின் வருகை சுட்டிக்காட்டுகிறது. நாளந்தா, விக்கிரமசீலா, ஒடந்தபுரி, தக்சசீலா மற்றும் வல்லபி ஆகியவற்றுடன், இது ஒரு முக்கிய பண்டைய கற்றல் மையமாக இருந்ததாக நம்பப்படுகிறது. இது கிபி 3ஆம் மற்றும் 11ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் செழித்து இருந்தது.[1]
வரலாற்றுக் குறிப்புகள்
[தொகு]சீனப் பயணி சுவான்சாங் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பு-சே-போ-கி-லி என்றழைக்கப்படும் ஒரு சங்கராமத்தைப் பற்றி (மடாலயம்) விவரிக்கிறார். பு-சே-போ-கி-லி-ஐ இசுடானிஸ்லாஸ் ஜூலியன் மற்றும் சாமுவேல் பீல் போன்ற அறிஞர்கள் "புஷ்பகிரி" என்றும், நாட்டின் பெயரை ஓடா அல்லது "உத்ரா" என்றும் குறிப்பிட்டனர்.[2][3] அறிஞர்கள் இந்த நாட்டை இன்றைய ஒடிசாவில் இருந்த ஒட்டர நாடு என்று அடையாளம் காட்டுகிறார்கள். இந்த மடாலயத்தை சுவான்சாங் பின்வருமாறு விவரிக்கிறார்:[4]
நாட்டின் தென்மேற்கில் ஒரு மலையில் பு-சே-போ-கி-லி மடாலயம் இருந்தது; இந்த மடாலயத்தின் கல் உச்சி இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒளிகளையும் பிற அற்புதங்களையும் வெளிப்படுத்தியது, குவிமாடத்திற்கும் அதன் உச்சிக்கும் இடையில் வழிபாட்டாளர்களால் வைக்கப்பட்ட சூரிய நிழல்கள் காந்தத்தால் பிடிக்கப்பட்ட ஊசிகளைப் போல அங்கேயே இருந்தன.
இன்றைய ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நாகார்ஜுனகொண்டாவில் கண்டெடுக்கப்பட்ட ஆந்திர இசுவாகு மன்னர் வீர-புருஷ-தத்தரின் 3 ஆம் நூற்றாண்டின் கல்வெட்டு, போதிசிரி என்ற உபாசிகர் பௌத்த நிறுவனங்களுக்கு ஏராளமான நன்கொடைகளை வழங்கியதாகக் குறிப்பிடுகிறது. இவற்றில் ஒன்று "பூபகிரியில்" ஒரு கல் மண்டபத்தை அமைப்பதற்கான நிதியுதவியை குறிப்பிடுகிறது.[5] தாமஸ் ஈ. டொனால்ட்சனின் கூற்றுப்படி, இது சுவான்சாங்கின் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள புஷ்பகிரியைப் போலவே இருக்கலாம் (பூபகிரி என்பது சமஸ்கிருத புஷ்பகிரியின் பாலி வடிவம்). இது இன்றைய ஒடிசாவில் அமைந்துள்ளது. இந்த அடையாளம் உண்மையாக இருந்தால், ஒடிசாவில் உள்ள தளம் குறைந்தது 3 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டிருக்க வேண்டும் என்று பிரதாபாதித்ய பால் குறிப்பிடுகிறார்.[4][6][7]
9 ஆம் நூற்றாண்டின் புத்த துறவி பிரஜ்னா, நாளந்தா உட்பட பல்வேறு இடங்களில் 18 ஆண்டுகள் கழித்த பிறகு, சீனாவுக்குச் செல்வதற்கு முன்பு, வு-சா ( ஒட்டர நாட்டுடன் அடையாளம் காணப்பட்டது) என்ற பெயரிடப்படாத மடத்தில் குடியேறினார். பிரபாத் முகர்ஜி போன்ற ஒரு சில அறிஞர்கள் இந்த மடாலயத்தை புஷ்பகிரியுடன் அடையாளம் காட்டுகிறார்கள்.[8] சீன பௌத்த அறிஞரும் பயணியுமான சுவான்ஸாங் இந்த இடத்திற்குச் சென்று அதை "புஷ்பகிரி" என்று குறிப்பிட்டார். இங்கு அமைந்துள்ள பெரிய தாதுகோபுரம் பேரரசர் அசோகர் கட்டியதாகக் கூறப்படும் பத்து புகழ்பெற்றஅசோகரின் தூண்களில் ஒன்றாகும்.[9]
சுற்றுலா
[தொகு]2005 ஆம் ஆண்டில், ஒடிசா மாநில அரசு லங்குடி மலைப்பகுதியை சாலைகள் மற்றும் பிற வசதிகளை உருவாக்குவதன் மூலம் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தத் தொடங்கியது.[10]
லங்குடி மலைகளைச் சுற்றி பிற பௌத்தத் தளங்களும் உள்ளன. அதன் அருகாமையில் உள்ள கைமா மலையில், உருமாறிய பாறைகளாலான நான்கு ஒற்றைக்கல் தூண்களால் சூழப்பட்ட ஒரு தனித்துவமான பாறையில் வெட்டப்பட்ட யானையின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது; இது மௌரியர்கள் (கிமு 3 ஆம் நூற்றாண்டு) காலத்தைச் சேர்ந்தது. பிராம்மணி மற்றும் கிமிரியா ஆறுகளின் சங்கமத்தில் அமைந்துள்ள ஒரு மலையான தியூலி குகைகளுக்குள் ஐந்து பாறையில் வெட்டப்பட்ட பௌத்த அறைகள் உள்ளன. பஜ்ரகிரி,[11] சாராபூர் மற்றும் பைக்ராபூர் ஆகிய இடங்களில் கூடுதல் பௌத்தத் தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. லங்குடி தளங்கள் இந்தியாவின் மிகப்பெரிய வரலாற்று பௌத்த வளாகமாக இருக்கலாம்
தேசிய நெடுஞ்சாலை 5 -இல் உள்ள ஜராகா மற்றும் சாந்திகோல் ஆகிய இடங்களிலுருந்தும் லங்குடியை அணுகலாம். மேலும் கட்டாக் மற்றும் புவனேஸ்வர் போன்ற நகரத்திலிருந்தும் இப்பகுதிய எளிதில் அணுகலாம். அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் இந்த இடத்தைப் பார்வையிட சிறந்த மாதங்களாகும்.[12]
புகைப்படங்கள்
[தொகு]-
சதுர அடித்தளத்துடன் கூடிய பெரிய தூண்களின் இடிபாடுகள்
-
பாறை வெட்டு தூண்கள்
-
பாலி மொழியில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Scott L. Montgomery; Alok Kumar (2015). A History of Science in World Cultures: Voices of Knowledge. Routledge. p. 121. ISBN 9781317439066.
- ↑ Hiuen Tsang (1885). Buddhist records of the Western World. Translated by Samuel Beal. J. R. Osgood. p. 204.
- ↑ Thomas Watters (1905). Thomas William Rhys Davids; Stephen Wootton Bushell (eds.). On Yuan Chwang's travels in India, 629-645 A.D. London: Royal Asiatic Society. pp. 193–194.
- ↑ 4.0 4.1 Thomas E. Donaldson (2001). Iconography of the Buddhist Sculpture of Orissa. Abhinav. pp. 4–. ISBN 978-81-7017-406-6.
- ↑ Pratapaditya Pal (2001). Orissa Revisited. Marg. p. 29. ISBN 9788185026510.
- ↑ D. C. Sircar (1939). The Successors of the Sātavāhanas in Lower Deccan. University of Calcutta. p. 33.
- ↑ B. S. L. Hanumantha Rao (1993). Religion in Andhra. Department of Archaeology and Museums, Government of A.P. p. 87.
- ↑ Prabhat Mukherjee (1964). The Buddhist Remains of Orissa. Cuttack: Government of Orissa. p. 3.
- ↑ Information and Public Relations Department; Government of Odisha (2017). Odisha Review (November 2017). Government of Odisha Information and Public Relations Department. p. 82.
Xuan Zang, the Chinese Buddhist scholar and traveller had visited the place and mentioned its name as 'Puspagiri'. The Mahastupa at this place is one of the illustrious 10 stupas that emperor Ashoka had erected.
- ↑ "Discovery of Buddhist stupa may turn remote hamlet into tourist hotspot". Buddhist Channel TV. 19 May 2005.
- ↑ "Bajragiri or The Lightning Hill: Taking a step back in time". www.telegraphindia.com. Archived from the original on 2024-06-13. Retrieved 2025-11-23.
- ↑ "Langudi : A newly discovered Buddhist site in Orissa". Archived from the original on 24 September 2015. Retrieved 24 December 2015.
