புஷ்கலா கோபால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புஷ்கலா கோபால்
பிறப்புசெல்ம்ஸ்போர்ட்
தேசியம்இந்தியர்
பணிநடனக்கலைஞர், இசையமைப்பாளர், நாட்டிய ஆசிரியர்
Honoursபிரித்தானியப் பேரரசின் கவுரவ உறுப்பினர்

இந்திய வம்சாவளியை சேர்ந்த, ஐக்கிய ராச்சியத்தின் லண்டன் மாநகரில் பிறந்தவருமான புஷ்கலா கோபால், இந்தியப் பாரம்பரிய நடனமான பரதநாட்டிய கலைஞரும் விரிவுரையாளரும் ஆசிரியரும் நடன இயக்குனரும் எழுத்தாளரும் நடன ஆலோசகரும் இசையமைப்பாளருமாவார்.[1] இவர், பிரித்தானியப் பேரரசின் கவுரவ உறுப்பினராக 2020ம் ஆம் ஆண்டில் இங்கிலாந்து மகாராணியால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

புஷ்கலா கோபால், 1974 ஆம் ஆண்டு கணிதம் மற்றும் பொருளாதாரத்தில் தனது இளங்கலை ஆனர்ஸ் பட்டம் பெற்றவர். 1977 ஆம் ஆண்டில் இந்தியாவின் கல்வி அமைச்சகத்தால் பரதநாட்டியத்தில் முதுகலை பட்டய பட்டம் வழங்கப்பட்டுள்ளது. 1983 ஆம் ஆண்டில், புஷ்கலாவுக்கு பிரித்தானிய மன்றத்தின் நிதியுதவி வழங்கப்பட்டு நாடகம், நடனம் மற்றும் நாட்டியக் கல்வியின் மேற்கத்திய நுட்பங்களைப் படிப்பதற்காக ட்ரெண்ட் பார்க்கில் ஒரு வருட காலம் படித்துள்ளார். தேசிய, உலக அளவில் பல நாட்டிய கல்வித் திட்டங்களுக்கு முன்னோடியாக இருந்து வருகிறார். புஷ்கலா, இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் நாட்டிய வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்களித்து வருகிறார்.[2][3][4]

அங்கீகாரம் மற்றும் விருதுகள்[தொகு]

  • "தெற்காசிய நடனத்திற்கான சேவைகளுக்காக" 2020 பிரித்தானிய மகாராணியின் பிறந்தநாள் கௌரவத்தில், பிரித்தானியப் பேரரசின் கவுரவ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.[5]
  • பரதநாட்டியத்தில் மேம்பட்ட பயிற்சிக்கான தேசிய உதவித்தொகை, இந்திய கல்வி அமைச்சகம், 1975
  • சிங்கர் மணி, சூர் சிங்கர் சம்சாத், பாம்பே 1977 ஆம் ஆண்டில் இருந்து பட்டம்
  • பரதகலாஞ்சலி, சென்னை 1979 ஆம் ஆண்டில் நாட்டிய பூர்ணா விருது
  • பிரித்தானிய கவுன்சில் பெல்லோஷிப், 1983
  • டைம் அவுட் டான்ஸ் விருது, 1988
  • டிஜிட்டல் நடன விருது, 1988
  • இசை ஆய்வுகளுக்கான குல்பென்கின் விருது, 1992
  • 2015 ஆம் ஆண்டு பரதநாட்டியத் துறையில் சிறந்த சேவைகளுக்கான கலை மன்றம் மற்றும் மிலாப் ஃபெஸ்ட் விருது[6][7][8]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

புஷ்கலா கோபால் இங்கிலாந்தில் உள்ள செல்ம்ஸ்போர்டில் ராணுவ அதிகாரியின் மகளாக பிறந்துள்ளார், இந்திய குடிமைப்பணி அதிகாரியான இவரது கணவருடன் இந்தியாவின் டெல்லியில் வசித்து வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "She took Bharatanatyam to London society - Times of India". The Times of India.
  2. "MA/MFA Dance Leadership and Community Practice". Trinity Laban.
  3. "Coming of Age". Akademi.
  4. "Faculty Committees". www.istd.org.
  5. "Queens Birthday Honours List" (in ஆங்கிலம்). United Kingdom Government.
  6. "Pushkala Gopal". SanskritiUK, Indian Dance and Music.
  7. "The Adventures of Mowgli". Akademi.
  8. "The Return of Spring". Akademi.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புஷ்கலா_கோபால்&oldid=3925434" இலிருந்து மீள்விக்கப்பட்டது