புவி நிலாவின் நிலம் சார்ந்த வரலாற்றுக் காலஅளவுகோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிலா சார்ந்த நிலவியல் காலஅளவுகோல் (lunar geological timescale) என்பது புவியினுடைய நிலாவின் வரலாற்றை ஐந்து காலங்களாக பிரிப்பது ஆகும். அவை கோப்பர்நிக்கசு, ஏராதொச்தேணியம், இம்பிரியக் காலம் (ஆரம்ப கால இம்பிரியன் மற்றும் இறுதி கால இம்பிரியன்) நெக்டாரியன் மற்றும் நெக்டாரியனுக்கு முன்பான காலம் என ஐந்து காலங்கள் ஆகும். இந்தக் காலங்கள் புவியின் நிலவில், ஏற்பட்ட பெரிய மோதல்களின் விளைவால் நிலவின் தரைப்பகுதியில் தோன்றிய மாற்றங்களை வைத்து பிரிக்கப்பட்டுள்ளது.

இற்றைக்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு

நிலவின் பெரிய விண்கல் வீழ் பள்ளங்கள் போன்ற பள்ளங்களில் நிகழ்ந்த நிலப்பரப்பு மாற்றங்களை விளக்க இந்த காலங்கள் உதவுகிறது. இதன் கால கட்டத்தின் முழுமையான வயது நிலவில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் கதிரியக்கக் காலமதிப்பீடு செய்வதன் மூலம் அறியப்படுகிறது. ஆனால் இந்த மாதிரிகள் நிலவின் மேற்பரப்பில் உடையது என்பதால் அதிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் கதிரியக்கப் பகுப்பாய்வு செய்வது சரியாக இருக்காது எனவும், நிலவைத் தோண்டி ஆழ்பரப்பில் மாதிரிகளை எடுத்து அதில் பகுப்பாய்வு செய்ய வேண்டும் என விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உசாத்துணைகள்[தொகு]