புவி கதாநாயகர்கள் விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புவி கதாநாயகர்கள் விருதுகள் (Earth Heroes Award) என்பது ஸ்காட்லாந்தின் ராயல் வங்கியால் 2011-ல் உலக உயிரியல் பூங்காக்கள் மற்றும் மீன் காட்சியக சங்கத்துடன்[1] இணைந்து நிறுவப்பட்ட விருதாகும்.

இந்த விருதுகள் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கச் சேவையாற்றும் நபர்களை அங்கீகரிக்கும் விதமாக விருது வழங்கி கௌரவிக்கின்றன.[2]

விருது[தொகு]

பிரிவுகள்[தொகு]

இந்த விருது பல பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. அவை:

 • புவியின் கதாநாயகன் (பாராட்டு) தனிநபர்
 • புவி பாதுகாவலன் விருது (இந்திய ரூபாய் 1,50,000) - நிறுவனம்
 • சிற்றினப் பாதுகாப்பு விருது (இந்திய ரூபாய் 1,50,000)– 2 தனிநபர்கள்
 • ஊக்க விருது - (இந்திய ரூபாய் 1,50,000) தனிநபர் அல்லது நிறுவனம்
 • பசுமை காவலன் விருது - (ஒவ்வொரு இந்திய ரூபாய் 1,50,000) 2 நபர்கள்

தேர்வு முறை[தொகு]

ஒவ்வொரு விருதுக்கும் இறுதிப் போட்டியாளர் பாதுகாப்பு, உயிரியல் பன்முகத்தன்மை, அறிவியல், அரசு, ஊடகம், இசுக்கொட்லாந்து அரச வங்கி, தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம் மற்றும் பம்பாய் இயற்கை வரலாற்று சங்கம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்களின் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும்.

புவி கதாநாயகர்கள் விருதுகள்[தொகு]

2014[தொகு]

புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய கலை மையத்தில் நவம்பர் 4 2014 அன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் புவி கதாநாயகர்கள் விருதுகள் அறிவிக்கப்பட்டது.[3]

 • புவியின் கதாநாயகன் விருது - முனைவர் எராச் பருச்சா
 • புவி பாதுகாவலன் விருது - கென்னத் ஆண்டர்சன் இயற்கை சமூகம்
 • சிற்றினப் பாதுகாப்பு விருது - பங்டி கிராம சபை & முனைவர் கௌதம் நாராயண்
 • ஊக்க விருது - திரிதிமான் முகர்ஜி
 • பசுமை காவலன் விருது - சுஜோய் பானர்ஜி & சிறீ. பி. எஸ். சோமசேகர்

ஆகத்து 1958-ல் நிறுவப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய உயரமான இடத்தில் உள்ள பதமஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்கா அல்லது டார்ஜிலிங் உயிரியல் பூங்காவிற்கு 'புவியின் கதாநாயகன் விருது சிறப்புக் குறிப்புடன் வழங்கப்பட்டது.[4]

2020[5][தொகு]

 • புவி பாதுகாவலன் விருது - அலையாத்திகாடுகள் பிரிவு, மகாராட்டிரம்
 • சிற்றினப் பாதுகாப்பு விருது - மல்சிங் ஜமாரா & ரசிலா பி வாதெர்
 • ஊக்க விருது - கர்மா சோனம்
 • பசுமை காவலன் விருது - அன்சு பிராக்யன் தாசு & தாம்போர் லிங்தோ
 • வாழ்நாள் சாதனை விருது - அன்வர்தீன் செளத்ரி

2021[6][தொகு]

 • புவியின் கதாநாயகன் விருது - முனைவர் எராச் பருச்சா
 • புவி பாதுகாவலன் விருது - சத்புர புலிகள் காப்பகம் & பரம்பிகுளம் புலிகள் காப்பு அறக்கட்டளை
 • சிற்றினப் பாதுகாப்பு விருது - அருனிமா சிங் & அனில் பைசோனி
 • ஊக்க விருது - கர்மா சோனம்
 • பசுமை காவலன் விருது - நித்தீசு குமார் & எஸ். எல். சில்பா
 • வாழ்நாள் சாதனை விருது - பிரிஜ் மோகன் சிங், ரத்தோர்

மேற்கோள்கள்[தொகு]

 1. "West Bengal Zoo First to Win Earth Heroes Award". 2014-11-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-11-04 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Bengal zoo first to win Earth Heroes award". 2014-11-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-11-04 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Heroes of environment and wildlife conservation conferred with RBS Earth Heroes Awards for 2014". 2016-03-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-11-04 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Darjeeling Zoo to receive The Earth Heroes Award 2014". 2014-11-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-11-04 அன்று பார்க்கப்பட்டது.
 5. https://www.moneycontrol.com/news/trends/features/natwest-group-announces-winners-of-the-10th-natwest-group-earth-heroes-awards-2020-6053681.html
 6. "Earth Heroes Awards 2021: Parambikulam Tiger Conservation Foundation wins Earth Guardian Award; Check winners". Jagranjosh.com. 2021-10-22. 2022-06-20 அன்று பார்க்கப்பட்டது.