புவியுரு வரைபடம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

புவியுரு வரைபடம் அல்லது புவியுரு நிலப்படம் என்பது புவியின் நிலவியல் அம்சங்களைக் காட்டுவதற்காக வரையப்படும் சிறப்பு நிலப்படம் ஆகும். புவி மேற்பரப்பில் பாறைகளும், நிலவியல் அடுக்குகளும் வெளித்தெரியும் இடங்களில் அவை நிறங்களினால் அல்லது குறியீடுகளினால் காட்டப்படுகின்றன. பாறைப் படிமானங்களினதும், பிளவுகள், மடிப்புக்கள், நெடுக்கு அமைப்புகள் போன்ற அமைப்பு அம்சங்களினதும், முப்பரிமாண அமைப்பு ஏற்ற இறக்கக் குறியீடுகளைப் பயன்படுத்துவதன் மூலம், காட்டப்படுகின்றன.
மேற்பரப்புக்குக் கீழ் உள்ள நிலக்கிடப்புப் போக்குகளையும் அடுக்குகளையும் விளக்குமுகமாகக் குறித்த அடுக்கின் மேற்பரப்பைப் பாறையடுக்கியல் சமவுயரக் கோடுகளைப் பயன்படுத்தி விளக்கலாம். பாறையடுக்குத் தொகுதிகளின் தடிப்பு வேறுபாடுகள் சமதடிம வரைப்படங்களில் விவரிக்கப்படுகின்றன. இவ்வடுக்குகள் பெருமளவுக்குத் துண்டுதுண்டாகவோ, கலந்தோ, தொடர்பற்றோ இருக்கும்போது மேற்படி முறையைப் பயன்படுத்துவது எல்லா நேரங்களிலும் சாத்தியமாவதில்லை.
குறியீடுகள்[தொகு]
பாறையமைப்புக்கள்[தொகு]
பாறை அமைவுகள் பொதுவாக நிறங்களினால் குறித்துக் காட்டப்படுகின்றன. நிறத்துக்குப் பதிலாகக் குறியீடுகளையும் பயன்படுத்தலாம். வெவ்வேறு நிலவியல் வரைபட நிறுவனங்கள், பல வகையானதும், பல்வேறு காலப்பகுதிகளைச் சேர்ந்தனவுமான பாறைகளைக் காட்டுவதற்கு வெவ்வேறு நியமங்களைப் பயன்படுத்துகின்றன.
திசையமைவுகள்[தொகு]
நிலவியலாளர்கள் இரண்டு விதமான திசையமைவு அளவுகளை எடுக்கின்றனர். ஒன்று தளங்களின் திசையமைவு. மற்றது கோடுகளின் திசையமைவு.