புவிப்பட எழுத்துக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்டைக்காலத்தில் மக்களிடையே பயன்படுத்தப் பட்ட புவிப்படங்களில் எழுத்துக்கள் பயன்படுத்தப்படவில்லை. நேரடியிகக் கூற இயலாத விளக்கங்களை எழுத்துக்கள் மூலமே புரிந்து கொள்ள முடியும் என்ற காரணத்தால் புவிப்படத்தில் எழுத்துக்களைப் பயன்பத்தும் முறை தோன்றியது. பாபிலோனிய, சீன, கிரேக்க, அரேபிய எழுத்துக்களைப் பயன்படுத்தி எழுதும் முறை தோன்றியது.

முக்கியத்துவம்[தொகு]

புவிப்படங்களின் தரம் என்பது பயன்படுத்தப்படும் எழுதக்களாலும் அவை எழுதப்பட்டிருக்கும் முறைகளாலும் நிர்ணயிக்கப்படுகின்றது. எழுத்துக்கள் புவிப்படங்களின் தலைப்பு, இடங்கள், குறிப்பு போன்றவற்றைத் தெளிவாக்க உதவும் குறியீடுகள் எனலாம். புவிப்படத்தில் எழுதுதல் என்பது புவிப்படங்களை எழுதுவதில் முதன்மை மூலமாகத் திகழ்கிறது.

ஓரிடத்தின் பரப்பையும் அதன் அமைப்பையும் குறிப்பிட்டுக் காட்டுவதற்கு எழுத்துக்கள் பயன்படுகின்றன.

ஐரோப்பாவின் அச்சுக்கலை வளர்ச்சிக்கு முன் புவிப்பட எழுத்துக்களை எழுத பேனா, தூரிகை அல்லது கையால் எழுதும் முறைகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் அச்சுக்கலை வளர்ச்சியடைந்த பிறகு டச்சு தேசத்தில் எழுத்துக்களோடு படங்களையும் பயன்படுத்தினர். இம்முறை புவிப்படங்களின் பரப்பை ஆக்கிரமித்தன.

அலங்கார எழுத்துக்கள் (Ornate Lettering) படித்துப் புரிந்து கொள்ள எளிமையாக இல்லாததால் விக்டோரியா காலத்தில் எளிய எழுத்துக்கள் எழுதும் முறை பின்பற்றப்பட்டது. பிறகு அச்சிட்டு ஒட்டக்கூடிய எழுத்துமுறை பிரசித்து பெற்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புவிப்பட_எழுத்துக்கள்&oldid=3602168" இலிருந்து மீள்விக்கப்பட்டது