புவிக்கு சமமான கோள்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புவிக்கு சமமான கோள்கள் பூமி , வெள்ளி, செவ்வாய் ,புதன் அதன் உண்மையான வடிவம் மற்றும் வண்ணத்தில்

புவிக்கு சமமான கோள்கள் (terrestrial planet) என்பது சிலிக்கேட்டு பாறைகள் மற்றும் உலோகங்களால் ஆன கோள்கள் ஆகும். இவை சூரியக் குடும்பத்தில் சூரியனுக்கு மிக அருகிலுள்ள கோள்கள் ஆகும். இந்த பெயர் இலத்தீன் மொழியிலிருந்து வந்தது, அதாவது இலத்தீன் மொழியில் டெர மற்றும் டெள்லுஸ் (Terra மற்றும் Tellus), என்பது புவியினைக் குறிக்கும். எனவே terrestrial planet (புவிக்கு சமமான கோள்கள்) என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.
இந்த கோள்களின் மேற்பரப்பு நீரியம், ஈலியம் போன்ற வாயுக்கள் மற்றும் பனிக்கட்டியால் அமையாமல் ஒரு திடமான பகுதியாக புவியின் புவியோடு போன்று அமைய வேண்டும்.
கெப்லர் விண்கலம் அனுப்பிய தகவல்களின் படி, 40 பில்லியன், புவிக்கு சமமான அளவுடைய கோள்கள் மற்றும் செங்குறுமீன்கள் பால் வழி நாள்மீன்பேரடையில் (Milky way galaxy) உயிரினங்களின் வாழ தகுதியான பிரதேசத்தில் இருக்கின்றன என 4 நவம்பர் 2013 அன்று வானியலாளர்கள் தகவல் தந்துள்ளனர். இதில் 11 பில்லியன் கோள்கள் சூரியன் போன்ற விண்மீன்களை சுற்றி வருகின்றன. இதில் புவிக்கு அருகிலுள்ள கோள்களை புவியிலிருந்து ஒளியின் வேகமான 299 792 458 மீ / விநாடியில் பயனித்தால் 12 வருடங்களில் அந்த கோள்களை அடைய முடியும் என கருதப்படுகிறது.

அமைப்பு[தொகு]

இதன் அமைப்பு தோரயமாக புவியின் அமைப்பை பெற்றிருக்கும், அதற்கும் ஒரு உலோக உட் கருவம் (பெரும்பான்மையாக இரும்பு தனிமங்கள் நிறைந்தது) , கருவம் மூடகத்தினால் சூழப்பட்டு இருக்கும். புவிக்கு சமமான கோள்களில் பள்ளத்தாக்குகள் , விண்கல் வீழ் பள்ளம், மலைகள், எரிமலைகள் இருக்கும்.

சூரிய குடும்பத்திலுள்ள புவிக்கு சமமான கோள்கள்[தொகு]

சூரிய குடும்பத்தில், நான்கு புவிக்கு சமமான கோள்கள் உள்ளன அவை பூமி , வெள்ளி, செவ்வாய் , புதன். இதில் பூமியில் மட்டும் தான் நீர்க்கோளம்(Hydrosphere) உள்ளது. சூரியக் குடும்பம் உருவான காலகட்டங்களில் நிறைய புவிக்கு சமமான கோள்கள் இருந்திருக்கும், ஆனால் கோள்களின் ஈர்ப்பு விசை காரணமாக நிகழ்ந்த தொடர்ச்சியான மோதல்களின் விளைவாக இவை இணைந்து இப்போது 4 கோள்கள் மட்டுமே உள்ளது. சிரிஸ், புளூட்டோ போன்ற குறுங்கோள்(Dwarf planets) மற்றும் பெரிய வின்கற்கள் போன்றவை திடமான தரைப்பகுதியை உடையவை. ஆனால் அதில் பெருமளவு பனியினால் ஆனவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புவிக்கு_சமமான_கோள்கள்&oldid=3847475" இலிருந்து மீள்விக்கப்பட்டது