புவிகீழ் வளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மடிப்பு மலைகளாக மாறும் படிவுப்பாறைகள் ஆழம்கறைந்த கடலில் தோன்றும். இத்தகைய படிவுப்பாறைகள் யாவும் நிலத்தில் ஆறுகள் அரிக்கப்பட்ட பொருட்கள் படிவதால் தோன்றுபவை ஆகும். அருகிலுள்ள கண்டங்களிலிருந்து அரிக்கப்பட்ட பாறைப் பொருட்கள் கடலின் நீண்டு குறுகிய பள்ளங்களில் படிகின்றன. இந்த நீண்ட பள்ளமே புவிகீழ் வளைவு (Geosyncline) எனப்படுகிறது. 1873ம் ஆண்டில் டானா என்ற புவியியல் அறிஞர் பயன்படுத்தினார்.

டெர்ஷியரி கால தொடக்கத்தில் காணப்பட்ட டெதில் கடல் ஒரு ஜீயோசின்கிளைனாக விளங்கியது.

புவிகீழ் வளைவிலுள்ள படிவுகள் அழுக்க விசையினால் பக்கங்களில் நெருக்கப்படுவதால் மடித்து மேலெழுந்து மடிப்பு மலைகளாகின்றன. ஆல்ப்ஸ் மற்றும் இமயமலைகள் புவிகீழ் வளைவு படிவுகள் நெருக்கப்பட்டதால்தான் தோன்றியுள்ளன.

புவிகீழ் வளைவிலுள்ள படிவுகள் கீழ்நோக்கி அழுத்தப்பட்டு படிவுகள் கனமாகவும் காணப்படும்போது மடிப்பு மலைகளின் வேர்கள் என்று அழைக்கப்படுகின்றன.

புவி அசைவினால் புவிகீழ் வளைவு பள்ளங்கள் ஏற்படுகின்றன. புவிகீழ் வளைவு ஆழமாவதற்க புவி போர்வையிலுள்ள வெப்பச் சலன ஓட்டங்களே காரணம் என்பது ஹோம்ஸ் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. புவிகீழ் வளைவு காணப்படும் பகுதியில் புவி ஓடு கீழ்நோக்கி வளைவதால் அதில் விரிசல்களும் பிளவுகளும் ஏற்படுகின்றன. இவ்விரிசல்களின் வழியே சில சமயம் மாக்மா கற்குழம்பு வெளியேறுவதால் புவிகீழ் வளைவு படிவுகளில் மணற்பாறை களிமண்பாறை இவற்றோடு லாவா பாறை அடுக்கும் காணப்படுகிறது. அசாதாரணமான தடிப்பு கொண்டவையாக புவிகீழ் வளைவு உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புவிகீழ்_வளைவு&oldid=3596860" இலிருந்து மீள்விக்கப்பட்டது