புழுப்பாம்பு
புழுப்பாம்பு | |
---|---|
Not evaluated (IUCN 3.1)
| |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | Typhlopidae
|
பேரினம்: | Ramphotyphlops
|
இனம்: | R. braminus
|
இருசொற் பெயரீடு | |
Ramphotyphlops braminus (Daudin, 1803) | |
வேறு பெயர்கள் | |
|
புழுப்பாம்பு (Ramphotyphlops braminus) என்பது ஒரு நஞ்சற்ற பாம்பு ஆகும். இப்பாம்புகள் பெரும்பாலும் ஆப்பிரிக்கா, ஆசியாவில் காணப்பட்டாலும், உலகின் பல பகுதிகளில் பரவிவிட்டது. அந்தமான் உட்பட இந்தியா முழுவதும் உள்ளது. இலட்சத்தீவுகளில் காணப்படும் ஒரே பாம்பு இதுதான்.[3] இதை மேலோட்டமாக கண்டு மண்புழு என்று ஏமாறுபவர்கள் உண்டு.
விளக்கம்
[தொகு]இவற்றில் பெரிய பாம்புகளே சிறியதாகவும், மெல்லியதாகவும் நீளம் தோராயமாக 6.35-16.5 செமீ (2½ 6 ½ அங்குளம்) இருக்கும். இவை செம்பழுப்பு அல்லது கருமை நிறம் கொண்ட பாம்புகளாகும். இவற்றின் உடலில் வழவழப்பான செதில்கள் ஒன்றின் மேல் ஒன்றாக இருக்கும். இதன் வால் மொட்டையாக இருக்கும், ஆனால் அதில் கூரிய முள் இருக்கும்.இதன் கண்கள் சாதாரணமாக புலப்படாது செதில்களுக்கு இடையில் புள்ளிபோல இருக்கும். இவற்றின் குஞ்சுகள் பெரிய பாம்புகளைப்போல அதே நிறத்தில் இருக்கும்.[4]
வாழ்விடம்
[தொகு]பொதுவாக நகர்ப்புற தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களிலும் இவை காணப்படுகின்றன.[4] இந்த பாம்புகள் நிலத்தடியில் உள்ள எறும்பு, கரையான் புற்றுகளில் வாழும். ஈரமான காடுகள், உலர் காடுகள் ஆகிய இடங்களில் உள்ள ஈரமான இலைகள், மட்கிய மண்ணின்கீழ் காணப்படும்.
உணவு
[தொகு]இவற்றின் உணவு புற்றுக்களில் உள்ள குடம்பிகள், கரையான்களின் முட்டைகள், ஆகியவற்றை உண்டு வாழும்.[4]
இனப்பெருக்கம்
[தொகு]இந்த வகை இனம் சார்ந்தவை அனைத்தும் பெண் பாம்புகளாக இருப்பதால், ஆண் துணையின்றி இனப்பெருக்கம் செய்பவையாக உள்ளன. இவை எட்டு முட்டைகள்வரை இடுகின்றன [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ McDiarmid RW, Campbell JA, Touré T. 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, Volume 1. Washington, District of Columbia: Herpetologists' League. 511 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-00-6 (series). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-01-4 (volume).
- ↑ The Reptile Database. www.reptile-database.org.
- ↑ Whitaker R. 1978. Common Indian Snakes: A Field Guide. சென்னை: Macmillan India Limited. 154 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0333901984.
- ↑ 4.0 4.1 4.2 4.3 Brahminy Blind Snake at the Florida State Museum of Natural History. Accessed 30 August 2007.