புழல் சிறைச்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புழல் மத்திய சிறைச்சாலை சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது சென்னை நகரில் இருந்து சுமார் 45 கிமீ தொலைவில் உள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறை வளாகம் என்ற பெயரை புழல் சிறை பெற்றுள்ளது. இது 2006ஆம் ஆண்டிலிருந்து துவங்கப்பட்டது. இந்தச் சிறையில் 3000 கைதிகளை சிறை வைக்கும் வசதி உள்ளது. இந்தச் சிறை வளாகம் சுமார் 212 ஏக்கர் (0.86 கிமீ 2) பரப்பளவில் அமைந்துள்ளது. இது 77.09 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இது 26 நவம்பர் 2006 அன்று தமிழ்நாட்டின் அன்றைய முதல்வர் மு. கருணாநிதியால் தொடக்கி வைக்கப்பட்டது.[1][2]

கைதிகள்[தொகு]

இந்த சிறை 26 செப்டம்பர் 2006 முதல் செயல்படத் தொடங்கியது. சென்னை மத்திய சிறைச்சாலையில் இருந்து முதல் தொகுதி கைதிகள் திசம்பர் 14 2006 அன்று மாற்றப்பட்டனர். இந்த சிறை 1,250 சிறை கைதிகள், 1250 தண்டனை கைதிகள் மற்றும் 500 பெண் கைதிகளை இருத்துவதர்க்கான வசதிகளை கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புழல்_சிறைச்சாலை&oldid=3564352" இருந்து மீள்விக்கப்பட்டது