புள்ளி இலத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Scatophagus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
புள்ளி இலத்தி
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Scatophagus
இனம்:
இருசொற் பெயரீடு
Scatophagus argus
(லின்னேயஸ், 1766)
வேறு பெயர்கள் [2]
  • Ephippus argus (Linnaeus, 1766)
  • Chaetodon pairatalis Hamilton, 1822
  • Chaetodon atromaculatus Bennett, 1830
  • Scatophagus bougainvillii Cuvier, 1831
  • Scatophagus ornatus Cuvier, 1831
  • Scatophagus purpurascens Cuvier, 1831
  • Sargus maculatus Gronow, 1854
  • Scatophagus maculatus (Gronow, 1854)
  • Scatophagus quadratus De Vis, 1882
  • Scatophagus aetatevarians De Vis, 1884

புள்ளி இலத்தி[3] அல்லது இலத்தி (Scatophagus argus) என்பது ஸ்கேடோபாகிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கண்கவர் மீன் வகையாகும். இந்த வகை மீன்கள் மின்னும் சிவப்பு, மிளிரும் பச்சை என இரு வகை வண்ணத் தோற்றங்களில் காணப்படுகின்றன. இந்த மீன் இனம் பொதுவாக இந்தோ-பசிபிக் பகுதியில், யப்பான், நியூ கினியா, தென்கிழக்கு ஆஸ்திரேலியா வரை பரவியுள்ளது. இவை கடலோரமாகவும் ஆறுகள் கடலில் சேரும் கழிமுகப் பகுதிகள், சதுப்புநிலங்களில் வாழக்கூடியன. இவை பிரபலமான மீன் காட்சியக மீன்களாகும்.

விளக்கம்[தொகு]

இலத்தி மீன்கள் செவ்வக வடிவத்தில் தட்டையான உடலைக் கொண்டுள்ளன. இதன் தலையின் மேல் ஒரு பெரிய சரிவைக் காணலாம். இது பெரிய கண்ணையும், சிறிய கிடைமட்ட வாயையும் கொண்டுள்ளது. இதன் வட்ட வடிவ தாடையில் பல வரிசைகளில் சிறிய முட்கள் போன்ற பல வரிசைகளைக் கொண்டுள்ளது. இலத்தி மீன்களின் முதுகுத் துடுப்பில் 10-11 முட்களும் 16-18 மென் கதிர்களும் இருக்கின்றன. குத துடுப்பில் 4 முட்களும் 13-15 மென் கதிர்களும் உள்ளன. [2] முதுகு துடுப்பில் உள்ள முட்களும், கதிர்கள் சிறிய காடிப்பள்ளத்தால் பிரிக்கப்படுகின்றன. முதுகுத் துடுப்பின் முதல் முள்ளானது தட்டையாக உள்ளது. [4] இதன் உடல் முழுவதும் சீப்புப் பற்களைப் போன்ற மெல்லிய செதில்களால் மூடப்பட்டிருக்கின்றன. இளம் இலத்தி மீன்களின் உடலில் மிளிரும் சிவப்பு அல்லது செம்பழுப்பு நிறம் துலங்கும். உடல் முழுவதும் கருப்பு நிற வட்டப்புள்ளிகள் காணப்படும். சிறு மீன்களில் ஐந்து அல்லது ஆறு கருத்த, செங்குத்து பட்டைகள் காணப்படும். [5] முதிர்ந்த மீன்கள் நிறத்தில் குன்றி அழகை இழந்துவிடும். இந்த இனம் அதிகபட்சமாக 38 செமீ (15 இல்) வரை வளர்கின்றன. [2]

பரவல்வி மற்றும் வாழ்விடம்[தொகு]

இலத்தி மீன்கள் பரந்த இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் வாழ்கின்றன. இது பாரசீக வளைகுடாவிலிருந்து தெற்காசிய கடற்கரை, மேற்கு பசிபிக் வரை காணப்படுகிறது. இது யப்பானின் தெற்கிலிருந்து நியூ சவுத் வேல்ஸ், நியூ கலிடோனியா மற்றும் பிஜி வரை காணப்படுகிறது. இது பிரெஞ்சு பாலினேசியாவிலிருப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. [1] இது கடற்கரைகள், துறைமுகங்கள், சதுப்புநிலப் பகுதிகள், ஆற்றின் கழிமுகப்பகுதிகள், குறிப்பாக அதிக கனிம செறிவுகள் உள்ள ஆழமற்ற கடற்கரையோர நீர்ப் பகுதியில் காணப்படும் இனமாகும். நீரின் மேற்பரப்பில் மிக சிறிய மீன்கள் நீந்துகின்றன. [1] நிறு மீன்கள் நன்னீரில்கூட காணப்படுகின்றன. இலத்தி மீன்களின் உணவுப் பழக்கம் பற்றி சற்று குழப்பம் உள்ளது. இவை அனைத்துண்ணி என்று கூறப்பட்டாலும் இவை தாவர உண்ணிகளே என்று சிலர் கூறுகின்றனர். இவை பாசிகளுடன் கழிவுகளையும் உண்பதாக தெரிகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Collen, B.; Richman, N.; Beresford, A.; Chenery, A.; Ram, M. (Sampled Red List Index Coordinating Team) (2010). "Scatophagus argus". IUCN Red List of Threatened Species 2010: e.T155268A4761779. doi:10.2305/IUCN.UK.2010-4.RLTS.T155268A4761779.en. https://www.iucnredlist.org/species/155268/4761779. பார்த்த நாள்: 19 August 2021. 
  2. 2.0 2.1 2.2 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2021). "Scatophagus argus" in FishBase. June 2021 version.
  3. "மீன்களுக்குள் மறைந்திருக்கும் தமிழ்!". Hindu Tamil Thisai. 2023-06-04. பார்க்கப்பட்ட நாள் 2023-06-28.
  4. Gomon, M.F.; Bray, D.J. (2021). "Scatophagus argus". Fishes of Australia. Museums Voictoria. பார்க்கப்பட்ட நாள் 20 August 2021.
  5. Schofield, P.J. (2021). "Scatophagus argus (Linnaeus, 1766)". Nonindigenous Aquatic Species Database, Gainesville, FL. U.S. Geological Survey. பார்க்கப்பட்ட நாள் 18 August 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புள்ளி_இலத்தி&oldid=3779771" இலிருந்து மீள்விக்கப்பட்டது