புள்ளிச் செங்கால் உள்ளான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புள்ளிச் செங்கால் உள்ளான்
புள்ளி செங்கால் உள்ளான், இனப்பெருக்கமில்லா காலத்தில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இசுகோலோபாசிடே
பேரினம்:
திரிங்கா
இனம்:
தி. எரித்ரோபசு
இருசொற் பெயரீடு
திரிங்கா எரித்ரோபசு
(பாலசு, 1764)

புள்ளிச் செங்கால் உள்ளான் (Spotted red shank)(திரிங்கா எரித்ரோபசு) என்பது இசுகோலோபாசிடே என்ற பறவை குடும்பத்தில் உள்ள ஒரு கரையோரப் பறவை சிற்றினம் ஆகும். இப்பறவையின் பேரினப் பெயர் திரிங்கா என்பது ஆற்று உள்ளானுக்கு கொடுக்கப்பட்ட பெயராகும்; சிற்றினப்பெயரான  எரித்ரோபசு என்பது பண்டைய கிரேக்கச் சொல்லான எருத்ரோசு, என்பதிலிருந்து பெறப்பட்டதாகும். இதற்கு, "சிவப்பு", என்றும் போசு, என்பது"கால்" என்றும் மொத்தத்தில் செங்கால் எனப் பொருள்படும்.[2]

பரவல்[தொகு]

புள்ளிச் செங்கால் உள்ளான் வட ஸ்காண்டிநேவியா, வட ஆசியப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்து குளிர் காலத்தில் பிரித்தானியத் தீவுகளின் தென் பகுதி, பிரான்சு, மெடிட்டரினியன் பகுதி, வெப்ப மண்டல ஆப்பிரிக்கா மற்றும் ஆசியப் பகுதிகளுக்கு வலசை போகிறது.[3] இந்தியாவிற்கு, குறிப்பாக தமிழகத்திற்கு வலசை வரும் இப்பறவை, தமிழகத்தின் வட பகுதிகளில் அவதானிக்கப்பட்டுள்ளது.[4]

களக்குறிப்புகள்[தொகு]

ஜப்பானில் புள்ளிச் செங்கால் உள்ளான் (முழுமையாக வளர்ந்தது)

இது 29 முதல் 32 செ.மீ. நீளமுடையது. இதனுடைய எடை 121 முதல் 250 கிராம் வரை இருக்கும்.[5] அலகு முடியும் இடமும் கால்களும் சிகப்பாக இருக்கும். இதன் அலகு பவளக்காலியின் அலகை விட நீளமாக இருக்கும். இனப்பெருக்கம் இல்லாத காலத்தில் இறக்கையின் மேல் புறம் வெளுத்த சாம்பல் நிறத்திலும் கீழ் புறம் பவளக்காலியை விட சற்று வெண்மையாகவும் காணப்படும். ஆனால் இனப்பெருக்க காலத்தில் (முக்கியமாக) கீழ்ப்பாகங்கள் கருப்பாக இருக்கும். டூ யிக் என்ற வேறுபட்ட சத்தத்துடன் பறந்து போகும்.[6]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tringa erythropus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: