புள்ளகுட்டிக்காரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புள்ளகுட்டிக்காரன்
இயக்கம்பார்த்திபன்
தயாரிப்புசீதா பார்த்திபன்
கதைபார்த்திபன்
இசைதேவா
நடிப்புபார்த்திபன்
சங்கீதா
ஊர்வசி
பிரகாஷ் ராஜ்
ஒளிப்பதிவுஎம். வி. பன்னீர்செல்வம்
கலையகம்அம்மு மூவிஸ்
வெளியீடுசூலை 14, 1995 (1995-07-14)
ஓட்டம்145 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புள்ளக்குட்டிக்காரன் (Pullakuttikaran) என்பது 1995 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். பார்த்திபன் எழுதி இயக்கிய. இப்படத்தில் சங்கீதாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்தார். மேலும் பிரகாஷ் ராஜ், ஊர்வசி, மலையாள நடிகர் சிறீனிவாசன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.[2] இந்த படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். திரைப்படம் கலவையான விமர்சனங்களுடன் 1995 சூலையில் வெளியானது.[3][4]

கதை[தொகு]

மூடுந்தில் அனாதைக் குழந்தைகளைப் பராமரித்துவரும் பார்த்திபன் பணத்தை திருடி தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார். ஒரு நாடகத்தில் ஜோப்படி செய்வது போல் நடித்தபோது பணம் எடுப்பதில் அவரது சாமர்த்தியத்தைக் கண்டு சங்கீதா அவரை காதலிக்கிறார். சங்கீதா புனித நூலை கட்டிக்கொண்டு, பார்த்திபனின் மனைவியாக தன் வாழ்க்கையை நடத்தத் தொடங்குகிறார். பார்த்திபன் அவளை மனைவியாக ஏற்றுக்கொள்ள தயங்கினாலும் பின்னர் மனம் தளர்கிறார்.

இருவருக்கும் தீய அமைச்சருடன் (சந்திரசேகர்) தங்கள் கடந்தகாலத்தில் தொடர்பு கொண்டவர்களாக உள்ளனர். கடந்த காலத்தில் சங்கீதாவை அமைச்சரின் மனவளர்ச்சி குன்றிய தம்பிக்கு (பிரகாஷ் ராஜ்) கட்டாயத் திருமணம் செய்விக்க முயன்றபோது அவர் தப்பிச் சென்றுவிடுகிறார். அதேபோல கடந்த காலத்தில் பார்த்திபன் தேர்தலில் சந்திரசேகருக்கு உதவுவதாக பாசாங்கு செய்து, அவர் கொடுத்த பணத்தை வேறு அரசியல் கட்சிக்கு மாற்றி செலவிடுகிறார். இதனால் அவர் வாக்குகளையும் ஆதரவையும் இழக்கிறார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சந்திரசேகர் எதிர் கட்சியுடன் கைகோர்த்து பார்த்திபனின் அப்பாவி மனைவியை (ஊர்வசி) கொன்றுவிடுகிறார்.

இறுதியில், சந்திரசேகர் பார்த்திபனையும், சங்கீதாவையும் தேடி வருகிறார். பார்த்திபன் சந்திரசேகரைக் கொன்றுவிட்டு, தொடருந்தில் தனது குடும்பத்துடன் தப்பிச்செல்கிறார்.

நடிப்பு[தொகு]

தயாரிப்பு[தொகு]

இப்படத்தின் வழியாக கரு பழனியப்பன் உதவி இயக்குனராக அறிமுகமானார்.[5]

இசை[தொகு]

இப்படத்திற்கு தேவா இசையமைத்ததுள்ளார் பாடல் வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார்.[6][7]

எண். பாடல் பாடகர்கள் பாடல் வரிகள்
1 "டெய்லி டெய்லி" சண்முகசுந்தரி, சுரேஷ் பீட்டர்ஸ் வைரமுத்து
2 "மெட்டி மெட்டி" எஸ். ஜானகி, பார்த்திபன், அருண் மொழி
3 "முகலணா" சுவர்ணலதா, தேவா
4 "ஒரு ராஜகுமாரி" சிந்து, மனோரமா
5 "போதும் எடுத்த" உமா ரமணன், அருண் மொழி

வெளியீடு[தொகு]

இந்தப் படம் 1995 சூலையில் கலவையான விமர்சனங்களுடன் வெளியானது. மேலும் வணிக ரீதியாக சிறப்பான வெற்றியை ஈட்டவில்லை. எம். பிரபாகரன் இந்த படத்தில் பணிபுரிந்ததற்காக நடித்ததற்காக சிறந்த கலை இயக்குனருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதை பெற்றார்.[8][9]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புள்ளகுட்டிக்காரன்&oldid=3660510" இருந்து மீள்விக்கப்பட்டது