புளோரோகந்தக அமிலம்
|
| |||
| பெயர்கள் | |||
|---|---|---|---|
| ஐயூபிஏசி பெயர்
சல்பியூரோபுளோரிடிக் அமிலம்
| |||
| முறையான ஐயூபிஏசி பெயர்
புளோரோகந்தக அமிலம் | |||
| வேறு பெயர்கள்
புளோரோசல்போனிக் அமிலம்
புளோரின் சல்போனிக் அமிலம் புளோரிடோசல்போனிக் அமிலம் சல்பியூரிக் புளோரோ ஐதரின் எப்பாக்சிசல்போனைல் புளோரைடு | |||
| இனங்காட்டிகள் | |||
| 7789-21-1 | |||
| ChemSpider | 23005 | ||
| EC number | 232-149-4 | ||
| யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
| ம.பா.த | Fluorosulfonic+acid | ||
| பப்கெம் | 24603 | ||
| வே.ந.வி.ப எண் | LP0715000 | ||
| |||
| UNII | PPX0648643 | ||
| UN number | 1777 | ||
| பண்புகள் | |||
| FHO3S | |||
| வாய்ப்பாட்டு எடை | 100.06 g·mol−1 | ||
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
| அடர்த்தி | 1.726 கி செ.மீ−3 | ||
| உருகுநிலை | −87.5 °C; −125.4 °F; 185.7 K | ||
| கொதிநிலை | 165.4 °C; 329.6 °F; 438.5 K | ||
| காடித்தன்மை எண் (pKa) | −10 | ||
| கட்டமைப்பு | |||
| ஒருங்கிணைவு வடிவியல் |
நான்முகி, கந்தகத்தில் | ||
| மூலக்கூறு வடிவம் | |||
| தீங்குகள் | |||
| பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 0996 | ||
| GHS pictograms | |||
| GHS signal word | அபாயம் | ||
| H314, H332[1] | |||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
புளோரோகந்தக அமிலம் (Fluorosulfuric acid) என்பது HSO3F என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சல்பியூரோபுளோரிடிக் அமிலம் என்பது பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் வழங்கும் பெயராகும். வணிக ரீதியாகக் கிடைக்கும் வலிமையான அமிலங்களில் இதுவும் ஒன்றாகும். ஒரு நான்முகி மூலக்கூறு வடிவத்தில் இச்சேர்மம் காணப்படுகிறது. கந்தக அமிலத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. கட்டமைப்பில் ஐதராக்சில் குழு ஒன்றுக்கு பதிலாக புளோரின் அணு இடம்பெற்றுள்ளது. நிறமற்ற நீர்மம் என்றாலும் வணிக மாதிரிகள் பெரும்பாலும் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.[2]
பண்புகள்
[தொகு]புளோரோகந்தக அமிலம் எளிமையாகப் பாயும் நிறமற்ற திரவமாகும். முனைவு கரிமக் கரைப்பான்களில் (எ.கா. நைட்ரோபென்சீன், அசிட்டிக் அமிலம் மற்றும் எத்தில் அசிடேட்டு) கரையும். ஆனால் ஆல்க்கேன்கள் போன்ற முனைவற்ற கரைப்பான்களில் குறைவாகக் கரையும்.
அறியப்பட்ட எளிய பிரான்சுடெட்டு அமிலங்களில் புளோரோகந்தக அமிலமும் ஒன்றாகும்.[3] கந்தக அமிலத்திற்கான −12 உடன் ஒப்பிடும்போது இது −15.1 என்ற H0 மதிப்பைக் கொண்டுள்ளது. புளோரோகந்தக அமிலமும் இலூயிசு அமிலமான ஆண்டிமனி பென்டாபுளோரைடும் சேர்ந்த கலவையானது மந்திர அமிலத்தை உருவாக்குகிறது. இந்த மந்திர அமிலம் மிகவும் வலிமையான புரோட்டானேற்றும் முகவராகும். இந்த அமிலங்கள் "மீஅமிலங்கள்" என வகைப்படுத்தப்படுகின்றன. 100% கந்தக அமிலத்தை விட வலிமையான அமிலங்களாக உள்ளன.
வலுவான அமிலத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில், புளோரோகந்தக அமிலம் பலவீனமான புரோட்டான் ஏற்பிகளாக இருக்கும் கிட்டத்தட்ட அனைத்து கரிம சேர்மங்களையும் கரைக்கிறது.[4] மேலும் இந்த சேர்மம் மெதுவாக ஐதரசன் புளோரைடு (HF) மற்றும் கந்தக அமிலமாக நீராற்பகுப்பு அடைகிறது. தொடர்புடைய திரிப்ளிக் அமிலம் (CF3SO3H) புளோரோகந்தக அமிலத்தின் அதிக அமிலத்தன்மையைத் தக்க வைத்துக் கொள்கிறது. ஆனால் நீராற்பகுப்பு ரீதியாக மிகவும் நிலையானதாகக் காணப்படுகிறது. புளோரோசல்போனிக் அமிலத்தின் சுய-அயனியாக்கம் மேலும் நிகழ்கிறது:
- 2 HSO3F ⇌ [H2SO3F]+ + [SO3F]− K = 4.0 × 10−8 (298 கெல்வின் வெப்பநிலையில்)
புளோரோகந்தக அமிலம் ஆல்கேன்களுக்கு மாற்றியமாக உள்ளது. ஐதரோகார்பன்களை ஆல்க்கீன்களுடன் சேர்த்து ஆல்கைலேற்றம் செய்வதை வினையூக்குகிறது.[5] இருப்பினும் இதுபோன்ற பயன்பாடுகள் வணிக முக்கியத்துவம் வாய்ந்தவையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது ஒரு ஆய்வக புளோரினேற்றும் முகவராகவும் பயன்படுத்தப்படுகிறது.[6]
தயாரிப்பு
[தொகு]ஐதரசன் புளோரைடும் கந்தக மூவாக்சைடும் வினைபுரிந்தால் புளோரோகந்தக அமிலம் உருவாகும்.
- SO3 + HF → HSO3F
மாற்றாக, KHF2 அல்லது CaF2 சேர்மத்தை 250 °செல்சியசு வெப்பநிலையில் ஓலியத்துடன் சேர்த்து சூடுபடுத்தலாம். ஒரு மந்த வாயுவை பயன்படுத்தி HF சேர்மத்திலிருந்து விடுவித்து , புளோரோகந்தக அமிலத்தை ஒரு கண்ணாடி கருவியில் வடிகட்டலாம்.
பாதுகாப்பு
[தொகு]புளோரோகந்தக அமிலம் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாகவும் மிகவும் அரிக்கும் தன்மை கொண்டதாகவும் கருதப்படுகிறது. இது நீராற்பகுப்பு அடைந்து ஐதரசன் புளோரைடை வெளியிடுகிறது. உடன் தண்ணீரைச் சேர்ப்பது கந்தக அமிலத்துடன் தண்ணீரைச் சேர்ப்பதற்கு ஒத்ததாகவும், அதை விடவும் வன்முறையாகவும் இருக்கிறது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sigma-Aldrich Co., Fluorosulfonic acid. Retrieved on 2024-01-27.
- ↑ Erhardt Tabel, Eberhard Zirngiebl, Joachim Maas "Fluorosulfuric Acid" in "Ullmann's Encyclopedia of Industrial Chemistry" 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a11_431
- ↑ Christopher A. Reed "Myths about the Proton. The Nature of H+ in Condensed Media" Acc. Chem. Res., 2013, 46 (11), pp 2567–2575. எஆசு:10.1021/ar400064q
- ↑ "Encyclopedia of Reagents for Organic Synthesis". Encyclopedia of Reagents for Synthesis. (2001). John Wiley & Sons. DOI:10.1002/047084289X.rf014. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0471936235.
- ↑ Olah, G.; Farooq, O.; Husain, A.; Ding, N.; Trivedi, N.; Olah, J. (1991). "Superacid HSO3F/HF-Catalyzed Butane Isomerisation". Catalysis Letters 10 (3–4): 239–247. doi:10.1007/BF00772077.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;ref3என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

