உள்ளடக்கத்துக்குச் செல்

புளோரின் புளோரோசல்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புளோரின் புளோரோசல்பேட்டு
Fluorine fluorosulfate
இனங்காட்டிகள்
13536-85-1
ChemSpider 10329038
InChI
  • InChI=1S/F2O3S/c1-5-6(2,3)4
    Key: NTZQXTIIJGXIMQ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 19971358
  • FS(=O)(=O)OF
பண்புகள்
F2O3S
வாய்ப்பாட்டு எடை 118.05 g·mol−1
தோற்றம் நிறமற்ற வாயு
அடர்த்தி 1.7844 கி/செ.மீ3
உருகுநிலை −158.5 °செல்சியசு
கொதிநிலை −31.3 °செல்சியசு
நீருடன் வினைபுரியும்
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

புளோரின் புளோரோசல்பேட்டு (Fluorine fluorosulfate) என்பது F2O3S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புளோரின், கந்தகம், புரோமின், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் இச்சேர்மத்தின் உட்கூறுகளாக உள்ளன.

தயாரிப்பு

[தொகு]

கந்தக மூவாக்சைடுடன் புளோரினைச் சேர்த்து 200 °செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்வதன் மூலம் புளோரின் புளோரோசல்பேட்டைத் தயாரிக்கலாம்.[1]

SO3 + F[2] → FOSO2F

மேலும், பெராக்சிடைசல்பியூரைல் டைபுளோரைடுடன் புளோரினை வினைபுரியச் செய்தாலும் புளோரின் புளோரோசல்பேட்டு உருவாகும்.[3]

இயற்பியல் பண்புகள்

[தொகு]

புளோரின் புளோரோசல்பேட்டு சேர்மம் ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியாகும். வெடிக்கும் தன்மையுடையதாகவும் உள்ளது.[4]

200 °செல்சியசு வெப்பநிலையில், இந்தச் சேர்மம் வெடிப்பு இல்லாமல் சிதைவடைகிறது.[5]

வேதிப் பண்புகள்

[தொகு]

புளோரின் புளோரோசல்பேட்டு சேர்மம் காரங்களுடன் வினைபுரிந்து, புளோரோசல்போனேட்டு எதிர்மின் அயனி, புளோரைடு அயனி, நீர் மற்றும் ஆக்சிசன் ஆகியவற்றை உருவாக்குகிறது.[6]

FSO3F + 2 H- -> SO3F- + F- + H2O + 1/2O2

பொட்டாசியம் அயோடைடுடன் வினைபுரிந்து பொட்டாசியம் புளோரோசல்போனேட்டு, பொட்டாசியம் புளோரைடு மற்றும் அயோடின் ஆகியவற்றை உருவாக்குகிறது.[6]

FSO3F + 2 KI -> KSO3F + KF + I2

புளோரின் புளோரோசல்பேட்டானது SSF2, SeF4, AsF3, மற்றும் MoF5 ஆகியவற்றுடனும், மேலும் SF4, Br2, மற்றும் I2 ஆகியவற்றுடனும் வினைபுரிகிறது. இந்த அனைத்து சேர்மங்களும் 80–298 கெல்வின் வெப்பநிலையில் வெப்பத்தை வெளிவிட்டு, சில சமயங்களில் வெடிப்புடன் வினைபுரிகின்றன.[7]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3156. ISBN 978-0-412-30120-9. Retrieved 18 August 2025.
  2. 2
  3. Advances in Inorganic Chemistry and Radiochemistry (in ஆங்கிலம்). Academic Press. 28 June 1974. p. 194. ISBN 978-0-08-057865-1. Retrieved 18 August 2025.
  4. Mistry, F.; Willner, H.; Aubke, F. (1 September 1991). "Fluorine fluorosulfate revisited". Journal of Fluorine Chemistry 54 (1): 59. doi:10.1016/S0022-1139(00)83569-1. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1139. Bibcode: 1991JFluC..54...59M. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0022113900835691. பார்த்த நாள்: 18 August 2025. 
  5. Bretherick, L. (27 October 2016). Bretherick's Handbook of Reactive Chemical Hazards (in ஆங்கிலம்). Elsevier. p. 1112. ISBN 978-1-4831-6250-8. Retrieved 18 August 2025.
  6. 6.0 6.1 Dudley, Frank B.; Cady, George H.; Eggers, David F. Jr. (1 January 1956). "Fluorine Fluorosulfonate". Journal of the American Chemical Society 78 (2): 290–292. doi:10.1021/ja01583a011. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. Bibcode: 1956JAChS..78..290D. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja01583a011. பார்த்த நாள்: 18 August 2025. 
  7. Willner, H.; Mistry, F.; Aubke, F. (1 December 1992). "Selected reactions of fluorine-fluorosulfate, FOSO2F". Journal of Fluorine Chemistry 59 (3): 333–349. doi:10.1016/S0022-1139(00)80329-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1139. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0022113900803292. பார்த்த நாள்: 18 August 2025.