புளோரிடா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புளோரிடா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ( Florida Space Research Institute) 1999 ஆம் ஆண்டு புளோரிடாவின் ஆளுநர் மற்றும் சட்டமன்றத்தால் நிறுவப்பட்ட மாநிலம் தழுவிய விண்வெளி ஆராய்ச்சி மையமாகும். கல்வி, அரசு, மற்றும் தனியார் நிறுவனங்கள் இடையே விண்வெளி குறித்த ஒத்துழைப்பை அதிகரிக்கும் முயற்சியாக இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது. நாசாவின் நூற்றாண்டு நிறைவுவிழா திட்டத்தின் போட்டிகளுடன் புளோரிடா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தது[1]. 2001 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட கற்றல் சூழல் என்ற திட்டத்தின் முன்முயற்சியாக, இந்நிறுவனம் கென்னடி விண்வெளி மையத்துடன் ஒரு கூட்டுறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2003 ஆம் ஆண்டில் மாணவர்களுக்காக நாசா நடத்திய விண்வெளித்தளம் பொறியியல் வடிவமைப்பு போட்டியில், புளோரிடா விண்வெளி நல்கை கூட்டிணைப்புடன் புளோரிடா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து நிதியுதவியளித்தது[2].

புளோரிடா விண்வெளி வளர்ச்சிமைய இணைப்பாக்கம்[தொகு]

2006 ஆம் ஆண்டு மே மாதத்தில் இயற்றப்பட்ட புளோரிடா விண்வெளி சட்டத்தின்படி[3], புளோரிடா விண்வெளி வளர்ச்சி மையத்தை உருவாக்கும் பொருட்டு மேலும் இரண்டு நிறுவனங்களை புளோரிடா சட்டமன்றம் உருவாக்கியது[4].

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]