புளோரன்ஸ் பி. சீபர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புளோரன்ஸ் பி. சீபர்ட்
Florence Barbara Seibert (1897-1991).jpg
பிறப்புஅக்டோபர் 6, 1897
ஈஸ்டன், பென்சில்வேனியா
இறப்புஆகத்து 23, 1991(1991-08-23) (அகவை 93)
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், புளோரிடா[1]
தேசியம்அமெரிக்கர்
துறைஉயிர்வேதியியல்
பணியிடங்கள்பென்சில்வேனியா பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கௌச்சர் கல்லூரி
யேல் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்லபயேட் மெண்டல்
அறியப்படுவதுதூய்மைப்படுத்தப்பட்ட புரத வகைக்கெழுக்களில் புரதங்களைத் தனிமைப்படுத்தல்
விருதுகள்ஹோவார்ட் டெய்லர் ரிக்கெட்ஸ் பரிசு, சிகாகோ (1924)
துருடோ பதக்கம், தேசிய காசநோய்க்கழகம்(1938)
கார்வன் ஓலின் பதக்கம்(1942)
வாழ்நாள் சாதனையாளர் விருது, பல்கலைக்கழகப் பெண்களுக்கான அமெரிக்க சங்கம்(1943)

புளோரன்ஸ் பார்பரா சீபர்ட் (Florence Barbara Seibert, அக்டோபர் 6, 1897 - ஆகஸ்ட் 23, 1991)[2] ஒரு அமெரிக்க உயிர் வேதியியலாளர் ஆவார். ஆன்டிஜென்களில் புரதம் போலவே தூய்மைப்படுத்தப்பட்ட புரத வகைக் கெழுவை அடையாளம் காணுதல் மற்றும் தனிமைப்படுத்தவும் நம்பகமான காசநோய்ப் பரிசோதனையின் வளர்ச்சியைப் பயன்படுதியதுமான ஆய்வுகளால் இவர் அறியப்படுகிறார். புளோரிடாவின் தேசியப் பெண்கள் அவையிலும், மற்றும் அமெரிக்க தேசிய மகளிர் அவையிலும் இடம் பெற்றுள்ளவர் ஆவார்.

இளமையும் கல்வியும்[தொகு]

சீபர்ட், அக்டோபர் 6, 1897 அன்று, பென்சில்வேனியாவில் , ஜார்ஜ் பீட்டர் சீபீர்ட் மற்றும் பார்பரா (மெமர்மெட்) சீபர்ட் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.[3] மூன்று வயதில், புளோரன்ஸ் இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டார்.[4] அதனால் அவர் கால்களில் ப்ரேஸ் அணிந்திருந்தார் [5] அவரது வாழ்நாள் முழுவதிலும் நொண்டியபடியே நடக்க வேண்டியிருந்தது.[6] சீபர்ட் தனது இளம் வயதில் புகழ்பெற்ற, பல விஞ்ஞானிகளின் வரலாறுகளைப் படித்திருந்தார். இது அவரது அறிவியல் ஆர்வத்தை ஊக்கப்படுத்துவதாக இருந்தது.

சீபெர்ட், பால்டிமோரில் உள்ள கௌச்சர் கல்லூரியில் தனது இளங்கலை பட்டம் பெற்றார்.[5] 1918-ல் கலை மற்றும் அறிவியல் கல்விகளில் உயர் இடம்பெற்றிருந்த மதிப்பு மிகு கல்வியான பை பேட்டா கப்பா என்ற கல்வியை முடித்தார்.[3] சீபர்ட்டும் அவரது வேதியியல் ஆசிரியர்களில் ஒருவரான ஜெஸி ஈ. மைனர் என்பவரும், நியூ ஜெர்ஸியிலுள்ள கார்பீல்ட் என்ற இடத்தில் உள்ள ஹேமர்ஸ்லி பேப்பர் மில் என்ற வேதியியல் ஆய்வுக்கூடத்தில் போர்-நேர வேலை செய்தனர்.[3]

1923 இல் உயிர் வேதியியல் துறையில், சீபர்ட் தனது முனைவர் பட்டத்தை யேல் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[3] யேலில் அவர் லபயெட் மெண்டல் என்பவரின் கீழ் பால் புரதங்களின் நரம்பு ஊசி பற்றிய ஆய்வு மேற்கொண்டார்.[7] இந்த புரதங்களை பாக்டீரியா மாசுபட்டிருப்பதிலிருந்து தடுக்க ஒரு முறையை அவர் உருவாக்கியிருந்தார். 1921 - 1922 களில் யேல் பல்கலைக்கழகத்தில் வான் மீட்டர் உதவித் தொகையும்,1922 - 1923 ஆம் ஆண்டுகளில் ஒரு அமெரிக்கன் உடற்கூற்றியல் சங்கத்தின் போர்டர் உதவித்தொகையும் பெற்றார்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dr. Florence B. Seibert, Inventor Of Standard TB Test, Dies at 93". The New York Times Company. Archived from the original on 10 மார்ச் 2014. 15 ஜூலை 2012 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: BOT: original-url status unknown (link)
  2. "Florence B. Seibert". Social Security Death Index. New England Historic Genealogical Society. 27 ஏப்ரல் 2011 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 3.2 3.3 Encyclopedia of World Biography. http://www.encyclopedia.com/topic/Florence_B._Seibert.aspx. 
  4. American Women of Science. 
  5. 5.0 5.1 The biographical dictionary of women in science. https://books.google.com/books?id=LTSYePZvSXYC&pg=PA1173. பார்த்த நாள்: 26 அக்டோபர் 2015. 
  6. "Florence Seibert, American Biochemist, 1897–1991". 26 அக்டோபர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Florence Barbara Seibert papers, 1920-1977". 26 அக்டோபர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  8. Notable women in the physical sciences : a biographical dictionary. https://www.worldcat.org/oclc/34894324. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளோரன்ஸ்_பி._சீபர்ட்&oldid=3587671" இருந்து மீள்விக்கப்பட்டது