புளோரன்சு பார்த்தீனியா இலெவிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புளோரன்சு பார்த்தீனியா இலெவிசு (Florence Parthenia Lewis) (செப்டம்பர் 24, 1877 – கிடைக்கவில்லை) ஓர் அமெரிக்க கணிதவியலாளரும் வானியலாளரும் ஆவார்.[1]

இளமையும் கல்வியும்[தொகு]

இவர் கான்சாசைச் சேர்ந்த இசுகாட்டில் பிறந்தார். இவர் ஆசுட்டீனில் உள்ள டெக்சாசு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1897 இல் தன் இளவை பட்டத்தைப் பெற்றார். இராடுகிளிப் கல்லூரியில் த முதுவர் பட்டத்தை 1906 இல் பெற்றார். இவர் தன் முனைவர் பட்டத்தை வானியலிலும் கணிதவியலிலும் ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[1][2]

வாழ்க்கையும் ஆராய்ச்சியும்[தொகு]

இவர் தன் வாழ்க்கைப்பணி முழுவதும் தான் 1908 இல் பயிற்றுநராகச் சேர்ந்து பேராசிரியராகி கவுச்சர் கல்லூரியிலேயே 1938 இல் தகைமைப் பெராசிரியருமாகிப் பணிபுரிந்தார். இவர் இயற்கணித மாறிலிகளின் வடிவியல் விளக்கத்துக்காகப் பெயர்பெற்றவர் ஆவார்.[1]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

இவர் அமெரிக்கக் கணிதவியல் கழகத்தில் நீண்ட காலம் உறுப்பினராக இருந்துள்ளார். இவர் 1919 முதல் 1922 வரை நகரமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் அமெரிக்க வானியல் கழகத்திலும் பசிபிக் வானியல் கழகத்திலும் உறுப்பினராக இருந்துள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Ogilvie, Marilyn Bailey; Harvey, Joy Dorothy (2000-01-01). "Lewsis, Florence Parthania (1877–?)" (in en). The Biographical Dictionary of Women in Science: L–Z. Taylor & Francis. பக். 782–783. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780415920407. https://books.google.com/books?id=LTSYePZvSXYC&pg=PA782. 
  2. Judy Green (mathematician); Jeanne LaDuke (2008). Pioneering Women in American Mathematics — The Pre-1940 PhD's. History of Mathematics. 34 (1st ). American Mathematical Society, The London Mathematical Society. பக். 24–25. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8218-4376-5. https://books.google.de/books?id=IRbOAwAAQBAJ.  Biography on p.363-366 of the Supplementary Material at AMS