புளுட்டோனைல் குளோரைடு
| பெயர்கள் | |
|---|---|
வேறு பெயர்கள்
| |
| இனங்காட்டிகள் | |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image Image |
| |
| பண்புகள் | |
| PuO2Cl2 | |
| வாய்ப்பாட்டு எடை | 346.90 g·mol−1 |
| கரையும் | |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | புளுட்டோனைல் புளோரைடு |
| ஏனைய நேர் மின்அயனிகள் |
|
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
புளுட்டோனைல் குளோரைடு (Plutonyl chloride) என்பது PuO2Cl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புளுட்டோனியம், ஆக்சிசன் மற்றும் குளோரின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. புளுட்டோனியம் +6 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் ஒரு புளுட்டோனியம் அணு, இரண்டு ஆக்சிசன் அணுக்கள், இரண்டு குளோரின் அணுக்கள் இங்கு காணப்படுகின்றன. ஆரம்பத்தில் 1959 ஆம் ஆண்டில் அலெஞ்சிகோவா மற்றும் பலரால் தனிமைப்படுத்தப்பட்டது.[1]
தயாரிப்பு
[தொகு]நான்கிணைய புளுட்டோனியம் குளோரைடுடன் குளோரினைச் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்து புளுட்டோனைல் குளோரைடு கரைசலை தயாரிக்கலாம். பின்னர் அறை வெப்பநிலையில் வெற்றிடத்தில் கரைசலை ஆவியாக்குவதன் மூலம் புளுட்டோனைல் குளோரைடு தனிமைப்படுத்தப்படுகிறது.[2]
இயற்பியல் பண்புகள்
[தொகு]புளுட்டோனைல் குளோரைடு நீரில் கரையும்.[3] ஓர் அறுநீரேற்று PuO2Cl2·6H2O என அழைக்கப்படும் இச்சேர்மம் ஒரு நிலையற்ற திடப்பொருளாகும். புளுட்டோனியத்திலிருந்து ஆல்பா கதிர்வீச்சு மூலம் காலப்போக்கில் புளூட்டோனியம்(IV) சேர்மமாக சிதைவடைகிறது.[4][5]
பயன்கள்
[தொகு]அணு எரிபொருள் மறுசுழற்சியின் சூழலில் புளுட்டோனைல் குளோரைடு மற்றும் இதன் அணைவுச் சேர்மங்கள் முக்கியமானவையாகும்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Plutonium: A Bibliography of Selected Report Literature (in ஆங்கிலம்). U.S. Atomic Energy Commission, Division of Technical Information. 1961. Retrieved 2 October 2025.
- ↑ Scientific Information Report (in ஆங்கிலம்). United States Central Intelligence Agency. 1959. p. 20. Retrieved 2 October 2025.
- ↑ The Reactor Handbook: Engineering (in ஆங்கிலம்). Technical Information Service, U.S. Atomic Energy Commission. 1955. p. 621. Retrieved 2 October 2025.
- ↑ Morss, L. R.; Edelstein, Norman M.; Fuger, Jean (31 December 2007). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed., Volumes 1-5) (in ஆங்கிலம்). Springer Science & Business Media. ISBN 978-1-4020-3598-2. Retrieved 2 October 2025.
- ↑ Hodge, Harold C.; Stannard, J. N.; Hursh, J. B. (29 June 2013). Uranium · Plutonium Transplutonic Elements (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 328. ISBN 978-3-642-65551-7. Retrieved 2 October 2025.
- ↑ Berthon, Claude; Boubals, Nathalie; Charushnikova, Iraida A.; Collison, David; Cornet, Stéphanie M.; Den Auwer, Christophe; Gaunt, Andrew J.; Kaltsoyannis, Nikolas et al. (18 October 2010). "The Reaction Chemistry of Plutonyl(VI) Chloride Complexes with Triphenyl Phosphineoxide and Triphenyl Phosphinimine". Inorganic Chemistry (journal) 49 (20): 9554–9562. doi:10.1021/ic101251a. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:20839846. https://pubs.acs.org/doi/10.1021/ic101251a. பார்த்த நாள்: 2 October 2025.