புளுட்டோனியம் மூவாக்சைடு
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
புளுட்டோனியம்(VI) ஆக்சைடு
| |
| இனங்காட்டிகள் | |
| 12311-78-3 | |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| PuO3 | |
| வாய்ப்பாட்டு எடை | 536.00 g·mol−1 |
| தோற்றம் | தங்கநிற-சிவப்பு படிகங்கள் (நீரேற்றுகள்) |
| கரையாது (நீரேற்றுகள்) | |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் |
|
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
புளுட்டோனியம் மூவாக்சைடு (Plutonium trioxide) PuO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] புளுட்டானியம் டிரையாக்சைடு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். புளுட்டோனியமும் ஆக்சிசனும் சேர்ந்து புளுட்டோனியத்தின் உயர்-வரிசை ஆக்சைடாக இது உருவாகிறது. சேர்மத்தில் புளுட்டோனியம் உலோகம் +6 ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது. பொதுவான புளுட்டோனியம் டை ஆக்சைடு PuO2 சேர்மத்தை விட குறைவான நிலைத்தன்மை கொண்டது மற்றும் குறைவாகவே காணப்படுகிறது.
ஆக்டினைடுகளின் +6 ஆக்சிசனேற்ற நிலை பிரத்தியேகமாக புளுட்டோனியம் மூவாக்சைடில் அடையப்படுகிறது; அதே சமயம், கனமான ஆக்டினைடுகளில், T-வடிவ மூவாக்சைடு மூலக்கூறுகள் ஐந்திணைதிறன் ஆக்சிசனேற்ற நிலையைக் கொண்டவையாக விவரிக்கப்படுவது மிகவும் பொருத்தமானது.[2]
தயாரிப்பு
[தொகு]முதலில், புளுட்டோனியம்(III) ஐதராக்சைடு தயாரிக்க வேண்டும். அது பின்னர் காற்றில் புளுட்டோனியம்(IV) ஐதராக்சைடாக மாறும். அதன் பிறகு ஓசோன் கலந்த ஆக்சிசனை அந்த தொங்கல் கரைசலின் வழியாகச் செலுத்தவேண்டும்.[3]
- Pu(OH)4 + O3 → PuO3·H2O + O2 + H2O
இயற்பியல் பண்புகள்
[தொகு]புளுட்டோனியம் மூவாக்சைடு, PuO₃•xH₂O என்ற மாறுபட்ட இயைபு கொண்ட நீரேற்ருகளை உருவாக்குகிறது, இதில் x = 0.8–1 ஆகும். இவை பொன்னிற-சிவப்புப் படிகங்களாகக் காணப்படுகின்றன. நீரற்ற நிலையில் இது தனித்துப் பிரிக்கப்படவில்லை. நீரினைப் பிரித்தெடுக்க முயற்சிக்கும்போது இது சிதைவடைகிறது. காற்றில் சேமித்து வைக்கும்போது, இந்தச் சேர்மம் PuO₃•H₂O என்ற இயைபு வரை ஈரப்பதத்தை உறிஞ்சுகிறது. இச்சேர்மம் நீரில் கரையாது.[4]
வேதிப் பண்புகள்
[தொகு]சூடுபடுத்தினால் புளுட்டோனியம் மூவாக்சைடு சிதைவடையும்.
- 2PuO3·xH2O → 2PuO2 + O2 + 2xH2O
அமிலங்களில் கரைந்து உப்புகளை உருவாக்கும்.
- PuO3·xH2O + 2HNO3 → PuO2(NO3)2 + (x + 1)·H2O
மேற்கோள்கள்
[தொகு]- ↑ May, Iain; Bryan, N. D.; Alvares, Rebeca (31 October 2007). Recent Advances In Actinide Science (in ஆங்கிலம்). Royal Society of Chemistry. p. 275. ISBN 978-1-84755-536-6. Retrieved 11 January 2026.
- ↑ Zaitsevskii, Andréi (14 October 2015). "Plutonium and transplutonium element trioxides: molecular structures, chemical bonding, and isomers". Physical Chemistry Chemical Physics 17 (38): 24831–24836. doi:10.1039/c5cp02190a. பன்னாட்டுத் தர தொடர் எண்:1463-9084. பப்மெட்:26343514. Bibcode: 2015PCCP...1724831Z.
- ↑ Bagnall, K. W.; Laidler, J. B. (1 January 1964). "516. Neptunium and plutonium trioxide hydrates" (in en). Journal of the Chemical Society (Resumed): 2693–2696. doi:10.1039/JR9640002693. பன்னாட்டுத் தர தொடர் எண்:0368-1769. https://pubs.rsc.org/en/content/articlelanding/1964/jr/jr9640002693. பார்த்த நாள்: 11 January 2026.
- ↑ Lemire, Robert J. (26 August 2001). Chemical Thermodynamics of Neptunium and Plutonium (in ஆங்கிலம்). Elsevier. p. 339. ISBN 978-0-444-50379-4. Retrieved 11 January 2026.