உள்ளடக்கத்துக்குச் செல்

புளுட்டோனியம் டெட்ராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புளுட்டோனியம் டெட்ராக்சைடு
Plutonium tetraoxide
பெயர்கள்
வேறு பெயர்கள்
புளுட்டோனியம்(VIII) ஆக்சைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/O2.2O.Pu/c1-2;;;/q-1;;;+1
    Key: KOOAIBAKTCSZCC-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • O=[Pu+]=O.O=[O-]
பண்புகள்
PuO4
வாய்ப்பாட்டு எடை 308.00 g·mol−1
கரையாது (நீரேற்றுகள்)
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

புளுட்டோனியம் டெட்ராக்சைடு (Plutonium tetroxide) PuO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] புளுட்டோனியமும் ஆக்சிசனும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது. இது புளுட்டோனியம் உலோகம் அரிதான +8 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ள ஓர் அசாதாரணமான, உயர்-வரிசை ஆக்சைடு ஆகும்.[2][3] புளுட்டோனியம் டெட்ராக்சைடு எளிதில் ஆவியாகும். இதனைத் தனித்துப் பிரித்தெடுப்பது மிகவும் கடினம்.[4][5]

தயாரிப்பு

[தொகு]

புளுட்டோனியம்(IV) உப்பின் அமிலப்படுத்தப்பட்ட கரைசல்களில் அதிகப்படியான ஐதரசன் பெராக்சைடைச் சேர்ப்பதன் மூலம் புளுட்டோனியம் டெட்ராக்சைடு தயாரிக்கப்படுகிறது.

Pu(SO4)2 + 2H2O2 + xH2O → PuO4·xH2O + 2H2SO4

இயற்பியல் பண்புகள்

[தொகு]

புளுட்டோனியம் டெட்ராக்சைடு, வெளிர் பச்சை நிறப் படிக வீழ்படிவாக உருவாகிறது; வீழ்படிவின் போது சிக்கிக்கொள்ளும் எதிர்மின் அயனிகளின் மாசுகளைப் பொறுத்து இதன் நிறத்தின் சாயல்கள் மாறுபடுகின்றன. இந்த வீழ்படிவில் மற்ற புளுட்டோனியம் ஆக்சைடுகளின் மாசுகளும் உள்ளன. மேலும் இதன் உண்மையான அமைப்பு தோராயமாக PuO3.5 என்ற வாய்ப்பாட்டிற்கு ஒத்திருக்கிறது.

புளுட்டோனியம் டெட்ராக்சைடு தண்ணீரில் கரையாது. மேலும் மாறுபட்ட இயைபுடைய PuO4•xH2O என்ற படிக நீரேற்றுகளை உருவாக்குகிறது. கோட்பாட்டு கணக்கீடுகள் இந்த மூலக்கூறு (O=Pu=O)+(O2)- என்ற அமைப்பைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகின்றன.[2] அதாவது, புளுட்டோனியம் ஆறு இணைதிறன் கொண்டது மற்றும் அதன் ஆக்சிசனேற்ற நிலை +5 ஆகும்.

வேதிப் பண்புகள்

[தொகு]

சூடுபடுத்தினால் புளுட்டோனியம் டெட்ராக்சைடு சிதைவடையும்.

PuO4 → PuO2 + O2

மேற்கோள்கள்

[தொகு]
  1. May, Iain; Bryan, N. D.; Alvares, Rebeca (31 October 2007). Recent Advances In Actinide Science (in ஆங்கிலம்). Royal Society of Chemistry. p. 275. ISBN 978-1-84755-536-6. Retrieved 11 January 2026.
  2. 2.0 2.1 Huang, Wei; Xu, Wen-Hua; Su, Jing; Schwarz, W. H. E.; Li, Jun (16 December 2013). "Oxidation states, geometries, and electronic structures of plutonium tetroxide PuO4 isomers: is octavalent Pu viable?". Inorganic Chemistry (journal) 52 (24): 14237–14245. doi:10.1021/ic402170q. பன்னாட்டுத் தர தொடர் எண்:1520-510X. பப்மெட்:24274785. 
  3. Huang, Wei; Pyykkö, Pekka; Li, Jun (8 September 2015). "Is Octavalent Pu(VIII) Possible? Mapping the Plutonium Oxyfluoride Series PuO(n)F(8-2n) (n = 0-4)". Inorganic Chemistry 54 (17): 8825–8831. doi:10.1021/acs.inorgchem.5b01540. பன்னாட்டுத் தர தொடர் எண்:1520-510X. பப்மெட்:26309065. 
  4. Zaitsevskii, Andréi; Mosyagin, Nikolai S.; Titov, Anatoly V.; Kiselev, Yuri M. (21 July 2013). "Relativistic density functional theory modeling of plutonium and americium higher oxide molecules". The Journal of Chemical Physics 139 (3). doi:10.1063/1.4813284. பப்மெட்:23883027. Bibcode: 2013JChPh.139c4307Z. https://pubs.aip.org/aip/jcp/article-abstract/139/3/034307/351114/Relativistic-density-functional-theory-modeling-of?redirectedFrom=fulltext. பார்த்த நாள்: 11 January 2026. 
  5. Koordinat︠s︡ionnai︠a︡ khimii︠a︡ (in ரஷியன்). Nauka. 2002. p. 260. Retrieved 11 January 2026.