புளுட்டோனியம் ஆக்சிகுளோரைடு
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
புளுட்டோனியம் ஆக்சைடு குளோரைடு | |
| இனங்காட்டிகள் | |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| PuOCl | |
| வாய்ப்பாட்டு எடை | 295 கி/மோல் |
| தோற்றம் | பச்சை நிறப் படிகங்கள் |
| அடர்த்தி | 8.81 கி/செ.மீ3 |
| கரையாது | |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | நாற்கோணம் |
| புறவெளித் தொகுதி | P4/nmm |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | புளுட்டோனியம் ஆக்சிபுளோரைடு புளுட்டோனியம் ஆக்சிபுரோமைடு புளுட்டோனியம் ஆக்சியயோடைடு |
| ஏனைய நேர் மின்அயனிகள் | இலந்தனம் ஆக்சிகுளோரைடு நியோடிமியம் ஆக்சிகுளோரைடு அமெரிசியம்(III) ஆக்சிகுளோரைடு கியூரியம்(III) ஆக்சிகுளோரைடு]] ஆக்டினியம் ஆக்சிகுளோரைடு |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
புளுட்டோனியம் ஆக்சிகுளோரைடு (Plutonium oxychloride) என்பது PuOCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புளுட்டோனியம், ஆக்சிசன், குளோரின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1]
தயாரிப்பு
[தொகு]புளுட்டோனியம்(III) ஆக்சைடுடன் கால்சியம் குளோரைடைச் சேர்த்து வினை புரியச் செய்தால் புளூட்டோனியம் ஆக்சிகுளோரைடைத் தயாரிக்கலாம்.[2]
- Pu2O3 + CaCl2 -> 2PuOCl + CaO
புளுட்டோனியம் (III) குளோரைடுடன் கால்சியம் ஆக்சைடை சேர்த்து வினைபுரியச் செய்தாலும் சிறிய அளவில் புளுட்டோனியம் ஆக்சிகுளோரைடு உருவாகிறது. முக்கியமாக புளூட்டோனியம் மோனாக்சைடும் இவ்வினையில் உருவாகும்:[3]
- PuCl3 + CaO -> PuOCl + CaCl2
மூடப்பட்ட ஒரு குழாயில் PuCl3·6H2O நீரேற்றை சூடாக்குவதன் மூலமோ அல்லது நீர்த்த HCl வழியாக H2 வாயுவை செலுத்தி தயாரிக்கப்பட்ட நீராவி கலவையுடன் PuO2 அல்லது PuCl3 சேர்மத்தை 650 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்குவதன் மூலமோ இதை தயாரிக்க இயலும்.[4]
இயற்பியல் பண்புகள்
[தொகு]புளுட்டோனியம் ஆக்சிகுளோரைடு P4/nmm என்ற இடக்குழுவில் பச்சை அல்லது நீல-பச்சை படிகங்களாகத் தோன்றுகிறது.[5] தண்ணீரில் இது கரையாது ஆனால் நீர்த்த அமிலக் கரைசல்களில் கரையும். PuOCl சேர்மத்தின் எக்சு-கதிர் விளிம்பு பகுப்பாய்வு ஒரு நாற்கோண படிக அமைப்பை வெளிப்படுத்துகிறது. ஒவ்வோர் அலகு செல்லிலும் இரண்டு மூலக்கூறுகள் உள்ளன.[6]
வேதிப் பண்புகள்
[தொகு]PuOCl திரவ கால்சியம் குளோரைடில் கரைக்கப்பட்ட கால்சியம் அல்லது உயர் வெப்பநிலை பேரியம் நீராவியுடன் வினைபுரிந்து புளுட்டோனியம் மோனாக்சைடை உருவாக்குகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Axler, K. M.; Sheldon, R. I. (April 1992). "The effect of initial composition on PuOCl formation in the direct oxide reduction of PuO2" (in en). Journal of Nuclear Materials 187 (2): 183–185. doi:10.1016/0022-3115(92)90551-U. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3115. https://inis.iaea.org/records/mxzj6-30q40. பார்த்த நாள்: 11 July 2025.
- ↑ Saboungi, Marie-Louise; Kojima, Hiranao (1993). Proceedings of the International Symposium on Molten Salt Chemistry and Technology 1993 (in ஆங்கிலம்). Electrochemical Society. p. 205. ISBN 978-1-56677-028-6. Retrieved 11 July 2025.
- 1 2 Reshetnikov, Fedor G. (1 January 2003). "Identification and preparation of plutonium monoxide". Mendeleev Communications 13 (4): 155–156. doi:10.1070/MC2003v013n04ABEH001740. பன்னாட்டுத் தர தொடர் எண்:0959-9436. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0959943603705008. பார்த்த நாள்: 11 July 2025.
- ↑ Abstracts of Declassified Documents (in ஆங்கிலம்). Technical Information Service. 1955. p. 45. Retrieved 11 July 2025.
- ↑ Crystal Data: Inorganic compounds. National Bureau of Standards. 1972. p. 121. Retrieved 11 July 2025.
- ↑ Davidson, Norman R.; Katz, Joseph J. (23 February 1960). "Method for the preparation of plutonium halides and oxyhalides". Google Patents. Retrieved 11 July 2025.