புளுட்டோனியம்(IV) சல்பேட்டு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
புளுட்டோனியம்(IV) சல்பேட்டு
| |
இனங்காட்டிகள் | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
| |
பண்புகள் | |
Pu(SO4)2 | |
வாய்ப்பாட்டு எடை | 506.18 கி/மோல் |
தோற்றம் | சிவப்பு படிகத் திண்மம்[1] |
உருகுநிலை | ~800°செல்சியசு? (சிதைவடையும்)[2] |
சிறிதளவு கரையும்[3] | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நேர்ச்சாய்சதுரம் |
புறவெளித் தொகுதி | Fddd (α-Pu(SO4)2·4H2O)[1][4] Pnma (β-Pu(SO4)2·4H2O)[4] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | புளுட்டோனியம்(IV) ஆக்சைடு Plutonium(IV) fluoride |
ஏனைய நேர் மின்அயனிகள் | யுரேனியம்(IV) சல்பேட்டு யுரேனைல் சல்பேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
புளுட்டோனியம்(IV) சல்பேட்டு (Plutonium(IV) sulfate) என்பது Pu(SO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நீரேற்றாகவும் இச்சேர்மம் உருவாவதால் இதன் வாய்ப்பாட்டை Pu(SO4)2.xH2O என்றும் எழுதலாம். பெரும்பாலும் டெட்ரா ஐதரேட்டு எனப்படும் நான்கு நீரேற்றாக இச்சேர்மம் காணப்படுகிறது. x=4 ஆக இருக்கும்போது நான்கு நீரேற்றாகவும்[1][3] as well as an anhydrous form, where x=0.[2] x=0 ஆக இருக்கும்போது நீரிலியாகவும் புளுட்டோனியம்(IV) சல்பேட்டு காணப்படுகிறது. புளூட்டோனியத்திற்கான முதன்மை பகுப்பாய்வுத் தரமாக நான்குநீரேற்று பயன்படுத்தப்படுகிறது.[5]
தயாரிப்பு
[தொகு]புளுட்டோனியம்(IV) அயனிகள் நீரிய கரைசலில் உள்ள பைசல்பேட்டு அல்லது சல்பேட்டு அயனிகளுடன் வினைபுரியும் போது புளுட்டோனியம்(IV) சல்பேட்டு உருவாகிறது:[6]
- Pu4+(நீரிய) + 2 HSO4-(நீரிய) -> Pu(SO4)2(நீரிய) + 2 H+(நீரிய)
- Pu4+(நீரிய) + 2 SO42-(நீரிய) -> Pu(SO4)2(நீரிய)
வினைகள்
[தொகு]உயர் வெப்பநிலையில் (~800°செல்சியசு), புளுட்டோனியம்(IV) சல்பேட்டு நான்குநீரேற்று சிதைவடைகிறது. முதலில் அதன் நீரை வெளியிட்டு நீரற்ற புளுட்டோனியம்(IV) சல்பேட்டை உருவாக்குகிறது. பின்னர் கந்தக ஆக்சைடுகளை வெளியிட்டு புளுட்டோனியம்(IV) ஆக்சைடை உருவாக்குகிறது.[3][2]
இருப்பினும், சாதாரண வெப்பநிலையில், அதிக ஈரப்பதத்திலும் கூட, புளுட்டோனியம்(IV) சல்பேட்டு நான்குநீரேற்று காற்றில் நிலையாக இருக்கும்.[5][7]
கட்டமைப்பு
[தொகு]புளுட்டோனியம்(IV) சல்பேட்டு நான்குநீரேற்று ஈந்தணைவிகள் ஒற்றைப் பற்களுடையவையாகும். நீரில் உள்ள புளுட்டோனியம் அணுக்கள், ஆக்சிசன் அணுக்கள் மற்றும் சல்பேட்டு மூலக்கூறுகளுக்கு இடையே பிணைப்புகள் உள்ளன. ஒவ்வொரு புளுட்டோனியம் அணுவும் 8 என்ற ஒருங்கிணைப்பு எண்ணையும், சதுர எதிர்ப்பட்டக ஒருங்கிணைப்பு வடிவவியலையும் கொண்டுள்ளன. புளுட்டோனியம்(IV) சல்பேட்டு நான்குநீரேற்றுப் படிகங்கள் நேர்ச்சாய்சதுரப் படிக அமைப்பைக் கொண்டுள்ளன. நீர் மூலக்கூறுகளில் உள்ள ஐதரசன் அணுக்களுக்கும் புளுட்டோனியம் அணுவுடன் இணைக்கப்படாத சல்பேட்டு அயனிகளில் உள்ள ஆக்சிசன் அணுக்களுக்கும் இடையில் ஐதரசன் பிணைப்புகள் உள்ளன.[1][4]
புறவேற்றுமைகள்
[தொகு]புளுட்டோனியம்(IV) சல்பேட் நான்குநீரேற்று இரண்டு புறவேற்றுமை வடிவங்களைக் கொண்டுள்ளது. அவை – α-Pu(SO4)2·4H2O மற்றும் β-Pu(SO4)2·4H2O. இரண்டு வடிவங்களும் ஒரே மூலக்கூறு வடிவவியலைப் பகிர்ந்து கொள்கின்றன, ஆனால் ஐதரசன் பிணைப்புகளின் செயல்பாட்டுத் தன்மையில் வேறுபடுகின்றன. α-வடிவம் ~120° செல்சியசு வெப்பநிலையில் β-வடிவமாக மாறுகிறது.[4]
ஆல்பா-புளுட்டோனியம்(IV) சல்பேட் நான்குநீரேற்று என்பது a=26.53Å, b=12.00Å, மற்றும் c=5.69Å பரிமாணங்களைக் கொண்ட ஓர் அலகு செல்களைக் கொண்டுள்ளது. இங்கு ஓர் அலகு செல்லிற்கு 8 வாய்ப்பாட்டு அலகுகள் உள்ளன.
β-புளுட்டோனியம்(IV) சல்பேட் நான்குநீரேற்று என்பது a=14.54Å, b=10.98Å, மற்றும் c=5.67Å பரிமாணங்களைக் கொண்ட ஓர் அலகு செல்லைக் கொண்டுள்ளது. இங்கு ஓர் அலகு செல்லிற்கு நான்கு வாய்ப்பாட்டு அலகுகள் உள்ளன.
தீங்குகள்
[தொகு]புளுட்டோனியம்(IV) சல்பேட்டு மிகவும் ஆபத்தான சேர்மமாகும். ஏனெனில் இது கதிரியக்கமாகவும் புற்றுநோயை உண்டாக்கும் தன்மையுடனும் உள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Richard E. Wilson (18 May 2011). "Structural Periodicity in Plutonium(IV) Sulfates". Inorganic Chemistry 50 (12): 5663–5670. doi:10.1021/ic200384h. பப்மெட்:21591736.
- ↑ 2.0 2.1 2.2 Waterbury, Glenn R., Douglass, Robert M., Metz, Charles F. (1 July 1961). ""Thermogravimetric Behavior of Plutonium Metal, Nitrate, Sulfate, and Oxalate"". Analytical Chemistry 33 (8): 1018–1023. doi:10.1021/ac60176a047.
- ↑ 3.0 3.1 3.2 3.3 NBL Program Office, "Safety Data Sheet: Plutonium Sulfate Tetrahydrate", https://www.energy.gov/sites/prod/files/2020/11/f80/SDS-Plutonium_Sulfate_2020.pdf
- ↑ 4.0 4.1 4.2 4.3 Jayadevan, N.C., Mudher, K.D.S., Chackraburtty, D.M. (25 Aug 2010). "The crystal structures of α- and β-forms of plutonium(IV) sulphate tetrahydrate". Zeitschrift für Kristallographie - Crystalline Materials 161 (1–4): 7–14. doi:10.1524/zkri.1982.161.14.7.
- ↑ 5.0 5.1 C. E. Pietri, A. W. Wenzel (1 Nov 1962). "The stability of plutonium sulphate tetrahydrate, an analytical standard: a ten-year evaluation". Talanta 18 (8): 849–852. doi:10.1016/0039-9140(71)80138-8. பப்மெட்:18960954.
- ↑ Lemire, R. J. et al., Chemical Thermodynamics of Neptunium and Plutonium, Elsevier, Amsterdam, 2001.
- ↑ C. E. Pietri (1 Nov 1962). "Plutonium Sulfate Tetrahydrate, a Proposed Primary Analytical Standard for Plutonium". Analytical Chemistry 163 (12): 130–136. doi:10.1021/ac60192a027.