உள்ளடக்கத்துக்குச் செல்

புளுட்டோனியம்(III) ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புளுட்டோனியம்(III) ஆக்சைடு
Plutonium(III) oxide
பெயர்கள்
வேறு பெயர்கள்
டைபுளுட்டோனியம் டிரையாக்சைடு, இருபுளுட்டோனியம் மூவாக்சைடு
இனங்காட்டிகள்
12036-34-9 N[1]
InChI
  • InChI=1S/3O.2Pu/q3*-2;2*+3
    Key: KNXZYWXJSDQACR-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [O-2].[O-2].[O-2].[Pu+3].[Pu+3]
பண்புகள்
Pu2O3
வாய்ப்பாட்டு எடை 536.00 g·mol−1
அடர்த்தி 11 கி/செ/மீ3
உருகுநிலை 2,085 °C (3,785 °F; 2,358 K)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள்
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

புளுட்டோனியம்(III) ஆக்சைடு (Plutonium(III) oxide) என்பது Pu2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புளுட்டோனியமும் ஆக்சிசனும் சேர்ந்து இக்கனிமச் சேர்மம் உருவாகிறது. புளுட்டோனியத்தின் ஒரு செசுகியுவாக்சைடாக இது வகைப்படுத்தப்படுகிறது. பொதுவாகக் காணப்படும் புளுட்டோனியம் டை ஆக்சைடு (PuO2) சேர்மத்தை விட இது ஒரு குறைந்த ஆக்சைடு ஆகும்.[2]

தயாரிப்பு

[தொகு]

புளுட்டோனியம்(III) ஆக்சைடு சேர்மத்தின் கனசதுர வடிவமானது புளுட்டோனியம் டை ஆக்சைடின் வெப்பச் சிதைவின் மூலம் உருவாகிறது.

2PuO2 → Pu2O3 + O2

புளுட்டோனியம் டை ஆக்சைடை உலோகப் புளுட்டோனியத்துடன் சேர்த்து ஒடுக்கும் வினைக்கு உட்படுத்தினால் புளுட்டோனியம்(III) ஆக்சைடு சேர்மத்தின் அறுகோண வடிவம் உருவாகிறது:

2PuO2 + Pu → 2Pu2O3

இயற்பியல் பண்புகள்

[தொகு]

புளுட்டோனியம்(III) ஆக்சைடு சேர்மம் கனசதுர அமைப்புடைய, Ia3 என்ற இடக்குழுவில் உள்ள கருப்புப் படிகங்களை உருவாக்குகிறது.[3][4]

இந்தச் சேர்மம் அறுகோண அமைப்புடைய படிகங்களையும் உருவாக்குகிறது, அதன் இடக்குழு தொகுதி P 3m1 ஆகும்.[5]

வேதிப் பண்புகள்

[தொகு]

திறந்த வெளியில் சேமித்து வைக்கும்போது புளுட்டோனியம்(III) ஆக்சைடு சேர்மம் ஆக்சிசனேற்றம் அடைகிறது.:[5]

2Pu2O3 + O2 → 4PuO2

மேற்கோள்கள்

[தொகு]
  1. "WebElements Periodic Table » Plutonium » diplutonium trioxide". webelements.com. Retrieved 26 November 2025.
  2. Los Alamos Science (in ஆங்கிலம்). The Laboratory. 2000. p. 258. Retrieved 26 November 2025.
  3. "Pu2O3, ID: mp-637224". Materials Project. Retrieved 26 November 2025.
  4. Volʹskiĭ, Anton Nikolaevich; Sterlin, I︠A︡kov Moiseevich (1970). The Metallurgy of Plutonium (in ஆங்கிலம்). Israel Program for Scientific Translations; [available from the U.S. Department of Commerce, Clearinghouse for Federal Scientific and Technical Information, Springfield, Va.] p. 48. Retrieved 26 November 2025.
  5. 1 2 Yang, Yu; Lu, Yong; Zhang, Ping (1 September 2014). "Optical properties of PuO2 and α-Pu2O3". Journal of Nuclear Materials 452 (1): 414–418. doi:10.1016/j.jnucmat.2014.05.070. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3115. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S002231151400347X. பார்த்த நாள்: 26 November 2025.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளுட்டோனியம்(III)_ஆக்சைடு&oldid=4430716" இலிருந்து மீள்விக்கப்பட்டது