புளியம்பட்டி, காமநாயக்கன் பாளையம்
புளியம்பட்டி ஊராட்சி (ஆங்கிலம் : Puliampatti) தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் காமநாயக்கன் பாளையம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கும் கோயம்புத்தூர் மக்களவை தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சியிலிருந்து 7 உறுப்பினர்கள் ஊராட்சி மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கின்றனர்.
புளியம்பட்டி | |
— ஊராட்சி — | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருப்பூர் |
வட்டம் | பல்லடம் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | மருத்துவர் க. விஜயகார்த்திகேயன், இ. ஆ. ப [3] |
ஊராட்சித் தலைவர் | ராசு (அதிமுக) |
மக்களவைத் தொகுதி | கோயம்புத்தூர் |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | பல்லடம் |
சட்டமன்ற உறுப்பினர் |
அ. நடராஜன் (அதிமுக) |
மக்கள் தொகை | 2,098 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள்
|
மக்கள் தொகை[தொகு]
2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இங்கு 2,098 பேர் வசிக்கின்றனர். இவற்றில் 53.03%பேர் ஆண்களும் 46.93% பேர் இருக்கிறார்கள்.6% பேர் 18 வயதினருக்கும் கீழ் உள்ளவர்கள் ஆவர்.
சிற்றூர்கள்[தொகு]
- புளியம்பட்டி
- ஆதி திராவிடர் காலணி வடக்கு
- ஆதி திராவிடர் காலணி தெற்கு
- திருமாண்ட கவுண்டன் பாளையம்
- வேப்பங்குட்டை பாளையம்
போக்குவரத்து[தொகு]
பெரும்பாலும் போக்குவரத்து காமநாயக்கன் பாளையம் நகரை அணுக வேண்டும். இருப்பினும் புளியம்பட்டியில் இருந்து காமநாயக்கன் பாளையம், திருப்பூர்,பல்லடம்,மல்லேகவுண்டன் பாளையம்,கரடிவாவி,காரணம் பேட்டை ஆகிய பகுதிகளுக்கு காமநாயக்கன் பாளையம் நகரில் இருந்து பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த புளியம்பட்டி காமநாயக்கன் பாளையம் காவல் நிலைய எல்லைக்குள் இருக்கிறது.
தொழில் வளம்[தொகு]
- பெரும்பாலும் இந்த ஊராட்சியில் கோழிப்பண்ணைகள் அதிகம் காணப்படுகிறது.2018 மாநில கால்நடை கணக்கெடுப்பில் மொத்தம் 4,26,500 கோழிகள் வளர்ப்பில் உள்ளது. இது பல்லடம் கறிக்கோழி விலை நிர்ணயிக்கப் படுகிறது.
- பின் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கூலி வேலைக்கு செல்கின்றனர்.
- பெரும்பாலும் நாயக்கர் வம்சங்கள் அதிகமாக காணலாம்.
- கால்நடை வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.