புளியஞ்சோலை
Appearance
புளியஞ்சோலை தமிழ்நாட்டின், கிழக்குத் தொடர்ச்சி மலையின் கொல்லிமலை பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு சிறு வனக் கிராமம். சுமார் 30 குடும்பங்கள் வாழ்கின்றன. இது திருச்சிராப்பள்ளியிலிருந்து சுமார் 72 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அருகிலுள்ள நகரம் (சுமார் 30 கி.மீ) துறையூர் ஆகும். வடமாவட்டங்களில் இருந்து வருவோர் சேலம் மாவட்டம் ஆத்தூரிலிருந்து தம்மம்பட்டி (30கிமீ) வழியாக அடையலாம். புளியஞ்சோலையை நாமக்கல் மற்றும் துறையூர் வழியாகவும் அடையலாம்.
சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது[1]. சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் காட்டில் 12 கி.மீ. தொலைவில் உள்ள சிவன் கோயிலுக்கு மலையேற்றம் செய்கின்றனர். இங்கு வாழும் மக்களின் முக்கிய வாழ்வாதாரம் குறு விவசாயத் தொழில் ஆகும்.