உள்ளடக்கத்துக்குச் செல்

புளியங்கூடல் செருத்தனைப்பதி இராஜ மகாமாரியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


அறிமுகம்[தொகு]

புளியங்கூடல் செருத்தனைப்பதி ஸ்ரீ இராஜ மகாமாரியம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தின் தென்மேற்குப் புறமாக சப்த தீவுகளில் லைடன் தீவு என்று அழைக்கப்படும் வேலணைத்தீவில் வயல்கள் சூழ்ந்த மருத நிலமும், கடல் சூழ்ந்த நெய்தல் நிலமும் ஒன்று சேர்ந்த கிராமமாக விளங்கும் புளியங்கூடலில் அமைந்துள்ளது.

செருத்தி, குருந்து, கொன்றை, புளி போன்ற பயன்தரு மரங்களும் மல்லிகை, முல்லை போன்ற செடிகொடிகளும் நெல், மிளகாய், புகையிலை போன்ற விவசாயப் பயிர்களும் உடையதாக கழனிகளாக விளங்கும் செருத்தனைப்பதி எனும் திவ்யசேத்திரத்தில் இன்றைக்கு 350 ஆண்டுகளுக்கு முன்னரேயே மகாமாரியை வழிபட்டு வந்துள்ளனர்.


வரலாறு[தொகு]

இப்பகுதியில் வாழ்ந்த விநாசித்தம்பி அவரது மகன் வைரமுத்து ஆகிய இருவரும் சிறந்த அம்பிகையின் பக்தர்கள் ஒரு நாள் வலிகாமம் மேற்கு பண்டத்தரிப்பு பகுதியில் இருந்த ஓர் ஆலய பொங்கல் தினம் அன்று வழிபாட்டிற்காக வந்தவர்கள்.அக்காலத்தில் பொங்கல் பொங்கி மடைபரவி வழிபடுவதோடு அறியாமை காரணமாக ஆடு,கோழி போன்றவற்றை உயிர்ப்பலி செய்து கொள்வார்கள். இவ்வழிபாட்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விநாசித்தம்பி, பலியிடும் கத்தியைத் தாங்கியவாறு அன்னை மகாமாரியை நெஞ்சினிலே நிலைநிறுத்திக் கொண்டு அராலி கடல் நீர்ப்பகுதியால் கால்நடையாக நடந்து வந்து புளியங்கூடல் கீர்த்தனை எனும் பகுதியில் சொந்தமான ஓரிடத்தில் கத்தியை வைத்து முகமறியா வழிபட்டு வந்தார்கள். பொங்கல் பொங்கி படையல் செய்து தேவாரம் திருவாசகங்கள் படித்து கற்பூரம் வழிபாடுகள் பக்தியாக நடைபெறலாயிற்று. ஒரு நாள் வழிபாடுகள் முடிந்து படுத்துறங்கிய காலத்தில் அன்னை வைரமுத்துவின் கனவில் வந்து தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்தைக் காட்டி இவ்விடமே தனக்கு உகந்தது எனக்கூறி அவ்விடத்தே ஆலயம் அமைத்து பூசை வழிபாடுகளை நிகழ்த்தும்படி கட்டளையிட்டாள். அவ்வாணையின் பிரகாரம் இவ்விடத்தில் வழிபாடுகள் நடைபெறத்தொடங்கியது.

கோயிலின் வளர்ச்சி[தொகு]

இவ்வகையில் செருத்தனைப்பதியின் சிறு குடாவில் கிடுகுகளால் சிறு கொட்டில் அமைத்து வழிபாடுகள் இடம்பெறத்தொடங்கியது. அன்பர் விநாசித்தம்பி அவர்களே இவ்வாலயத்தை தாபிக்க காரணமானவர்.அவரை தொடர்ந்து வைரமுத்தர், கதிரேசர் ஆகியோரின் தலைமையில் ஆலய பரிபாலனம் நடத்தப்பட்டு வந்ததுடன் அவர்களே பக்தியில் மிகுந்த பூசாரியாகவும் செயற்பட்டார்கள். மூன்றாவது பரம்பரையில் வந்தவரே கதிரேசர் ஆவார். இக்காலத்திலேயே ஆலயம் சுண்ணாம்புக் கோவிலாக கட்டப்பட்டது.மண்டபங்கள் கிடுகுகளால் வேயப்பட்டது. கி.பி. 1882ம் ஆண்டு யாழ்ப்பாண கச்சேரியில் இவ்வாலயம் கற்கோவில் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டது. அதன் தர்மகத்தா திரு.வை.கதிரேசர் எனப் பதிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கதிரேசர் எடுத்த பெருமுயற்சியால் தென்னிந்தியாவில் இருந்து மஹாமாரி அம்பாளின் எழுந்தருளி மூர்த்தியை எடுத்து வந்து ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பூசைவழிபாடுகள் உன்னதமடைந்தது இதனைத் தொடர்ந்து, தம்பர் ஆலயப்பதவியை ஏற்றார். எவர் அக்காலத்தில் உடையார் பதவியை வகித்தார். இதனால் ஆலயம் அதிக, பிரபல்யம் அடைய தொடங்கியது. ஆலய மண்டபங்களை கிடுகுக் கொட்டகையால் வேய்ந்து கொண்டார். இவர்களைத் தொடர்ந்து சுப்பிரமணியம் ஆலயப்பொறுப்பைப் ஏற்றுக்கொண்டார்.

சுப்பிரமணியம் அன்னை மஹாமாரி மீது அன்பு கொண்டிருந்தார். ஆலய புனரமைப்பில் கூடிய கவனம் செலுத்தினார் அனைத்து மண்டபங்களையும் சுண்ணாம்புக்கல்லால் அமைத்து வரும் காலத்தில் அதற்குத் தேவையான பாலை மரங்களை வெட்டி வருவதற்கு உறவுமுறை இளைஞர்களுடன் மாட்டு வண்டில்களில் வன்னிக் காட்டிற்குச் சென்று மரங்களைச் சேகரித்தார்கள். இவ்வேளையில் திக்குத் திசை தெரியாது இரண்டு மூன்று தினங்கள் உண்ண உணவின்றித் தத்தளித்த வேளையில் அம்பிகையை மனதார வேண்டி வழிபட்டார்கள். அம்பிகையே வயோதிபப் பெண்போல தேற்றம் அளித்தாள். பாற்சோறு கொடுத்து பசி போக்கினாள்.வழிகாட்டியாக நின்றாள்.மரங்களை எடுத்து வந்தனர். இச்சம்பவத்தை மஹாமாரி ஆலய வைபவமாலை பாடலில் 1985ம் ஆண்டு தர்மகர்த்தா வழிதோன்றலில் வந்த வித்துவான் சுப்ரமணியம் சின்னத்தம்பி அவர்கள் கூறுகின்றார்கள்.

மேலும் சுப்பிரமணியம் காலத்திலேயே ஆலயம் பிரபல்யமடையத் தொடங்கியது. அக்கால மக்களால் நம்பப்பட்டு வந்த பேய், பிசாசு, பில்லி, சூனியம், காத்தான், கருப்பு, போன்ற பிணிகளை வெள்ளை பிரம்பும் வேப்பிலையும் கொண்டு நிக்கி விபூதி, நூல் என்பன கொண்டு சுகம் செய்தார் என உற்ற பெரியவர்கள் கூறியமை குறிப்பிடத்தக்கது. மேலும் சுப்பிரமணியம் காலத்தில் வேறு வேறு பிரதேசங்களில் இருந்தும் பலர் வருகை தரத் தொடங்கினார்கள். ஆலயத்தில் தங்கி இருந்து பல்வேறு நோய்களையும் மாற்றிக் கொண்டார்கள். முனி ஒன்றினால் தாக்கப்பட்ட இளைஞன் இக்காலத்தில் சுகம் செய்தமையும், யுவதி ஒருவர் பேய் பிசாசினால் பிடிக்கப்பட்ட காலத்தில் இவ்வாலயத்தில் தங்கியிருந்து பல நாட்கள் வழிபட்ட காலத்தில் இவ்வாலயத்தில் தங்கியிருந்த பல நாட்கள் வழிபட்ட காலத்தில் ஒரு நாள் சுப்பிரமணியம் பூசைகளை முடித்துக் கொண்டு  இப்பொண்ணுக்கு விபூதியணிந்து தனது கையை கத்தியால் கீறி இரத்தப்பழி கொடுத்தவேளை அப்பெண்ணுக்குள் இருந்த பூதம் விலக்கியது. அப் பெண் பனை மரத்தடியில் ஏறிக் கீழே குதித்தார். சுகம் பெற்றாள். என முன்னோர் வாயிலாக பல சம்பவங்கள் அறியக் கிடைக்கின்றது. குன்மம், மனநோய்  போன்ற கொடிய நோய்களையும் குணமாக்கினார்.

இவருடைய காலத்தில் [[ஆடு]],கோழி போன்றவற்றை வெட்டி பலியிடும் வழக்கம் இருந்து வந்தது.இப்பலியிடலை நீக்க வேண்டும். ஆகமங்களில் இவை பெரிய பாவம் எனக் கூறப்படுகிறது. இதனை நாம் கவனத்திற்கு  கொள்ள வேண்டும். என அவர் குறி 1900 ஆம் ஆண்டளவில் உயிர்ப்பலி நிறுத்தப்பட்டாலும் காலத்துக்குள் காலம் கோயிலுக்கு வருகை தருபவர்கள் ஆடு,கோழி என்பவற்றை கொண்டு வந்து காணிக்கையாகக் கொடுப்பதும் இருந்து வந்தது என முன்னோர்களின் வாய்மொழி மூலம் அறியமுடிகிறது.


உற்சவமூர்த்திகளின் ஸ்தாபனம்[தொகு]

இவருடைய காலத்திலேயே விநாயகர்,முருகன், மஹாமாரி அம்பாள், வைரவர், உற்சவமூர்த்திகள் ஸ்தாபிக்கப்பட்ட்து. நித்திய, நைமித்தியப் பூசைகள் நடைபெறத்தொடங்கியது. அலங்கார உற்சவம் ஆரம்பிக்கப்பட்டது. 1940ஆம் ஆண்டு தர்மகர்த்தா இந்தியாவிலிருந்து சிற்பக்காரர்களை அழைத்து வந்து அன்னை திருவீதி வருவதற்காக மூன்றுகண் சப்பறத்தை அமைத்தது மட்டுமன்றி புதிய சித்திரத்தேரையும் அமைத்து வெள்ளோட்டம் சிறப்பாக செய்து கொண்டார்.

தொடர்ந்து கைலாச வாகனமும் செய்யப்பட்டது.தீவுப்பகுதியிலேயே முதன் முதலில் சித்திரத்தேர் அமைக்கப்பட்டது மஹாமாரி அம்பாள் ஆலயத்திற்கேயாகும்.

இவரது காலத்திலேயே வருடாந்த பொங்கல் நடைபெற்று வைகாசி மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமையன்று ஆலயத்தின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. பல ஊர்களிலிருந்து அன்னை மஹாமாரியத் தரிசிக்க மாட்டு வண்டிகளில் பலர் கூடுவார்கள்.

1945ம் ஆண்டு தர்மத்தை பூசாரி சுப்ரமணியம் நோயுற்ற காரணத்தால் அவரது முத்த மகன் துரையப்பா ஆண்வழிச்ச சந்ததிக்கமைய ஆலய பொறுப்புகளை ஏற்று அலையை பரிபாலனம் செய்வதற்கு ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து நியமித்தனர். அன்பர் துரையப்பாவின் காலத்தில் ஆலய உட்பிறக்காத திருப்பணி,பல்வேறு வாகனங்களை  சேர்த்தமை, தீர்த்த தாடகம் அவசியம் என்பதால் தீர்த்தக்கேணி உருவாக்கியமை ,நந்தவனம் அமைத்தல், போன்ற திருப்பணிகளை நிறைவேற்றினார்கள். கோபுரதரிசனம் கோடி புனியம் என்பதற்கு அமைய தந்தையாரின் மனதில் இருந்த கருங்கல்லினால்  இராஜகோபுரம்  அமைக்க வேண்டும் என்ற சிந்தனையை ஊர்மக்களின் உதவியுடன் ஆரம்பித்தார். அராலி நாகமுத்து ஆசாரி குழுவினரை வரவழைத்து வேலைகள் நடைபெற்றது என்றாலும் அவரினால்  வியாழவரி மட்டுமே செய்ய முடிந்தது. கோபுர வாசலிலக்கிய பெரிய திருக்கதவும்  புதிதாகப் போடப்பட்டது. இதற்கு அக்காலத்தில் 3 லட்சம்  ரூபா செலவானது. மேலும் இக்காலத்தில் நவராத்திரி ,வெள்ளி உற்சவம் என்பன ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.

இவருடைய காலத்தில் இந்துப் பண்பாடுகளுக்குக்கமைய சமயக் கருத்துக்கள் வழிபாட்டு முறைகள், தத்துவங்கள் மக்கள் மத்தியில் செல்ல வேண்டும் என்பதற்கு அமைய ஆலயத்தில் பல கலைநிகழ்ச்சிகள் வருடாந்த திருவிழாவில் நடைபெறும். சைவ சமய சொற்பொழிவுகள், கதாப்பிரசாங்கம்,சங்கீத கச்சேரிகள் ,காரகாட்டம்,சமய நாடகங்கள் போன்றவற்றாலும் இசை ஆராதனை செய்தார்கள். தினமும் மாலை வேளை முதல் ஒலிபெருக்கி இசை, மின்னொளி விளக்குகள், கோபுரம் ஆலய வழக்கம் பூஞ்சசோலைகளோடு சிவலோகமாக காட்சியளிக்க வழிவைக் செய்தவர் அன்பர் துரையப்பா ஆவார். என சைவபூஷணம் எனும் சிவாதிரு பேரம்பலம் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

இராஜகோபுரத் திருப்பணிகள் நிறைவேற்ற வேண்டும். அத்தோடு கருவறையும் கருங்கல்லால் அமைக்க  வேண்டும் என்று ஆவலுடன் 14.10.1947 ஆம் ஆண்டு துரையப்பா அவர்கள் திருப்பாதக் கமலங்களை சென்று சேர்ந்தார்.

இவ்வாறு ஆலயம் தர்மகர்த்தா துரையப்பா காலத்தில் அடியார்களின் உதவியோடு பல பணிகளையும் ஆற்றிவந்ததாலும் சிலர் ஆலயத்தை பொதுவுடைமையாக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்கள். மகாமாரி மீது பக்தி கொண்ட  துரையப்பாவுக்கு சார்பாகவே வழக்கு தீர்ப்பு அமைத்தது. ரி.ஆர்.19 என்ற இலக்கத்தில் அவ்வறிக்கை த் தீர்ப்பு 88 பக்கங்களில் காணப்படுகிறது. இன்றும் அதை பத்திரமாக பேணிவருகின்றார்கள்.

அன்னையின் அரும்பணிகளற்ற மைந்தன் சிவஞானசெல்வத்தை வழங்கினார் என்பதற்கு அமைய 1945 ம் ஆண்டு மே மாதம் 6ம் திகதி நாகம்மாவின் மகனாக பிறந்தார்.துரையப்பாவின் பின்னர் ஏழாவது தலைமுறையாளர் சிவஞானச்செல்வம் நியமிக்கப்பட்டார். முன்னணியின் ஆலயத்தை மேலும் வளர்த்து எடுக்க வேண்டும் என அரும்பாடுபட்டார்.ஊர் மக்கள் மட்டுமன்றி மகாமாரியின் பக்தர்களின் பேருதவியால் இராஜகோபுரத் திருப்பணியை சிற்ப வல்லுநர்கள் யோகநாதன் ஆத்மநாதன் சகோதர்களின் மூலம் நிறைவேற்றினர். 1980ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகத்தைச் செய்வித்தார்.

இணுவில் சிவகாமசிரோரத்திமாக புகழ் விளங்கிய சிவஸ்ரீ.கு.இராமநாதன் குருக்கள் நைமித்திய சிவாச்சாரியராகவும் மகாகும்பாபிஷேக சிவாச்சாரியராகவும் விளங்கினார்.

1985,1986கலீல் ஆலயத்தின் மகாமண்டபம்,ஸ்நபன மண்டபம் ஆகியவற்றை புனருத்தாரணம்  செய்வித்து மணிமண்டபமாக்கி துர்க்காதேவியையும் ,பிள்ளையார்,முருகன் ஆகிய மூர்த்திகளையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 1987ம் ஆண்டு கோபுரத்தின் முன்னாள் 5 வளைவுகளைக் கொண்டமைந்த மணிமண்டபத்தை  அழகுற அமைத்து நிறைவு செய்தார்.

1989ம் ஆண்டளவில் லண்டனிலிருந்து பெரிய மணி கொண்டு வரப்பட்டாலும் நாட்டில ஏற்பட்ட யுத்த அனர்த்தத்தின் காரணமாக 1991ம் ஆண்டு விஜயதசமியன்று தீவுப்பகுதியிலிருந்து எல்லோரும் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணப் பகுதியிலும் தென்மராட்சிப் பகுதியிலும் வடமராட்சிப் பகுதியிலும் என நாட்டின் பல பக்கங்களில் வாழ்ந்தாலும் அன்னை மகாமாரியை உள்ளகோவிலில் இருத்தி வழிபட்டுவந்தனர்.எந்த அம்பாள் ஆலயத்திற்கு சென்றாலும் செருத்தனைப்பதி மகாமாரியை அகக்கண்ணில் தேன்றுவாள்.மீண்டும் 1997ம் ஆண்டு மீள்குடியமர அனுமத்தித்த பொது காலத்தில் சென்றபோது பல விலையுயர்ந்த பொருட்கள் சூறையாடப்பட்டாலும் சகடை .சப்பறம் எரியூட்டப்பட்ட நிலையிலும் காணப்படத்தைக் கண்டு மனம் வெதும்பினார்கள் . 1997ஆம் ஆண்டு தைப்பூசத்தன்று சம்புரோட்சண பிராயச்சித்த மகாகும்பாபிஷேகம் செய்வித்துத் பூசை வழிபாடுகள் ஆரம்பம் ஆகின.

கோபுரம் ஆலயத்துக்கு எவ்வளவு முக்கியமானதோ அதேபோல் மணிக்கோபுரமும் முக்கியமானது. இறைவன் நாகத்தத்துவம் உடையபவன். கோயில் மணி ஓசை எங்கும் கேட்க வேண்டும் என்னும் தன்மையில் லண்டனிலிருந்து கொண்டுவரப்பட்ட 1000கிலோகிராம் நிறையுடைய மணிக்கோபுரத்தைக் கட்டி நிறுவினார்கள்.

ஆலயத்தின் சிறுசிறு திருத்தப்பணிகளைச் செய்வித்து வர்ணம் தீட்டி 1999ஆம் ஆண்டு ஆவணிமாதம் அத்தநட்சத்திரத்தில் மகாகும்பாபிஷேகம் நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து 1989ம் ஆண்டளவில் லண்டனிலிருந்து பெரிய மணி கொண்டு வரப்பட்டாலும் நாட்டில் ஏற்பட்ட யுத்த அனர்த்தத்தின் காரணமாக 1991ம் ஆண்டு விஜயதசமிஎன்று தீவுப்பகுதியிலிருந்து எல்லோரும் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணப் பகுதியிலும் தென்மராட்சிப் பகுதியிலும் வடமராட்சிப் பகுதியிலும் என நாட்டின் பல பக்கங்களில் வாழ்ந்தாலும் அன்னை மகாமாரியை உள்ளகோவிலில் இருத்தி வழிபட்டுவந்தனர்.எந்த அம்பாள் ஆலயத்திற்கு சென்றாலும் செருத்தனைப்பதி மகாமாரியை அகக்கண்ணில் தேன்றுவாள்.மீண்டும் 1997ம் ஆண்டு மீள்குடியமர அனுமத்தித்த பொது காலத்தில் சென்றபோது பல விலையுயர்ந்த பொருட்கள் சூறையாடப்பட்டாலும் சகடை .சப்பறம் எரியூட்டப்பட்ட நிலையிலும் காணப்படத்தைக் கண்டு மனம் வெதும்பினார்கள் . 1997ஆம் ஆண்டு தைப்பூசத்தன்று சம்புரோட்சண பிராயச்சித்த மகாகும்பாபிஷேகம் செய்வித்துத் பூசை வழிபாடுகள் ஆரம்பம் ஆகின.

தற்போது உள்ள கோவிலுக்கான திருப்பணிகள்[தொகு]

கோபுரம் ஆலயத்துக்கு எவ்வளவு முக்கியமானதோ அதேபோல் மணிக்கோபுரமும் முக்கியமானது. இறைவன் நாகத்தத்துவம் உடையபவன். கோயில் மணி ஓசை எங்கும் கேட்க வேண்டும் என்னும் தன்மையில் லண்டனிலிருந்து கொண்டுவரப்பட்ட 1000கிலோகிராம் நிறையுடைய மணிக்கோபுரத்தைக் கட்டி நிறுவினார்கள்.

ஆலயத்தின் சிறுசிறு திருத்தப்பணிகளைச் செய்வித்து வர்ணம் தீட்டி 1999ஆம் ஆண்டு ஆவணிமாதம் அத்தநட்சத்திரத்தில் மகாகுமாபாபிஷேகம் நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து 2000 வருடாந்த மகோற்சவம் சிறப்பாக நடைபெறத்தொடங்கியது. ஆலயத்தின் வசந்த மண்டபம் சுண்ணாம்புக் கல்லினால் அமைக்கப்பட்டு இருந்தது. இதனை அழகிய வசந்தமண்டபமாகத் தூபி விமானங்களுடன் அமைக்கும்படி வசந்தமண்டப திருப்பணிகளையும் 2000 ஆம் ஆண்டில் நிறைவேறியது. வருடாந்த மகோற்சவம் சிறப்பாக நடைபெறத்தொடங்கியது. ஆலயத்தின் வசந்த மண்டபம் சுண்ணாம்புக் கல்லினால் அமைக்கப்பட்டு இருந்தது. இதனை அழகிய வசந்தமண்டபமாகத் தூபி விமானங்களுடன் அமைக்கும்படி வசந்தமண்டப திருப்பணிகளையும் 2000 ஆம் ஆண்டில் நிறைவேறியது.

வழிபாட்டு முறைகள்[தொகு]

  அம்பிகையின் அருட்கடாட்ஷம் எங்கும் பிரபல்யமடையத் தொடங்கியது. நாட்டின் பல பாகங்களில் இருந்தும் அன்னையின் உற்சவ காலத்தில் விரதமிருந்து வழிபாடாற்றி காவடி, பாற்செம்பு எடுத்தல், அங்கப்பிரதிஸ்டை செய்தல், ஆதி அழித்தல், பொங்கல் பொங்குதல், மடை பரவுதல்,காஞ்சிவார்த்தல்,கண்மடல் வழங்குதல், கற்பூரச்சட்டி எடுத்தல் எனப்பல நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினார்கள்.

நந்தவனம்[தொகு]

பூந்தோட்டம் எனும் நந்தவனம் அமைத்தல் ஷரியத் தொண்டாகும் ஆலயக் கிரியைகளுக்கு உகந்த வகையில் நீர்ப்பூ,நிலப்பூ,கொடிப்பூ,கோட்டுப்பூ எனப்பல்வேறு வகையான நறுமணமலர்கள் வகைகளையும் வன்னி,கொன்றை,நெல்லி,மாவிலங்கு,முட் க்கிளுவை,கடம்பு போன்ற பத்திரமரங்களையும் கொண்டது.

மகோற்சவம்[தொகு]

நந்தன வருடத்திலிருந்து அன்னையின் பக்கதர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 10 தினங்களாக இருந்த மகோற்சவம் 18 தினங்களாக மாற்றியமைத்து 15ஆம் திருவிழா சப்பரம் 16ஆம் திருவிழா தேர்,17ம் திருவிழா தீர்த்தம்,18ஆம் திருவிழா சண்டேஸ்வரர் உற்சவம் என நடைபெறுகின்றது.


கோயிலின் சூழல்[தொகு]

இவ்வாலயத்தின் வெளிவீதியில் தென்கிழக்குப் பக்கமாக தண்ணீர்ப் பந்தலும் , ஆலய அர்ச்சகருக்குரிய வீடு, மகாமாரி சனசமூக நிலையம், வேர்கோவில்,நாகதம்பிரான் கோயில்,என்பனவும் தெற்குப் பக்கமாகவும் வடக்கு வீதியில் புளியங்கூடல் இந்து இளைஞர் வாலிபர் சங்க மண்டபம் (இதிலேயே அன்னதானப் பணிகள் நடைபெற்று வருகின்றது) வடகிழக்கு விநாயகர், முருகனுக்குரிய தேர், சப்பறத்தரிப்பிட கட்டிடங்கள், கிழக்கே அம்பிகையின் தேர்முட்டி கிழக்கே நந்தவனம், தீர்த்த தாடகம் அதன் வடகிழக்கே அர்ச்சனை விற்பனை நிலையம் என்பவற்றோடு காணப்படுகிறது.