புலோ தேவி நீதம்
தோற்றம்
புலோ தேவி நீதம் | |
|---|---|
| மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் செப்டெம்பர் 14, 2020 | |
| முன்னையவர் | மோதலால் வோரா |
| தொகுதி | சத்தீசுகர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | நயா ஆலோர், கொண்டாகான் |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| துணைவர் | துளசிதாசு |
| பிள்ளைகள் | 2 |
| வாழிடம் | பாராசுகான், கொண்டகவான் இராய்ப்பூர் தில்லி |
புலோ தேவி நீதம் (Phulo Devi Netam) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 14 செப்டம்பர் 2020 அன்று இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராக சத்தீசுகரில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] மீண்டும் இவர் 2026ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
25 மே 2013 அன்று, சுக்மா கட்சி ஏற்பாடு செய்த கூட்டத்திலிருந்து திரும்பும் போது தர்பா பள்ளத்தாக்கில் 2013 நக்சல் தாக்குதலில் குறிவைக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசு தலைவர்களின் இவரும் ஒருவராக இருந்தார். மூத்த காங்கிரசு தலைவர்கள் இருவர் உட்பட இருபதிற்கும் மேற்பட்ட பேர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் இருந்து புலோ தேவி உயிர் தப்பினார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Congress's K T S Tulsi, Phulo Devi Netam elected unopposed to Rajya Sabha from Chhattisgarh". The Economic Times. 18 March 2020. Retrieved 19 March 2020.
- ↑ "Rajya Sabha elections: 37 candidates from 10 states elected unopposed". Scroll. 19 March 2020. Retrieved 19 March 2020.
- ↑ . 26 May 2013.