புலேசுவரி ஆறு
புலேசுவரி ஆறு (Fuleswari River) இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் சிலிகுரி நகரத்தில் பாயும் ஓர் ஆறாகும். தற்பொழுது இந்த ஆறு மாசுக்கள் கலந்து மோசமான நிலையில் உள்ளது. ஆற்றின் கரை பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குப்பை மற்றும் வண்டல் படிவுகள் குவிவதால் ஆற்றின் போக்குவரத்து வசதியும் குறைந்துள்ளது.[1][2]
2024 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் மேற்கு வங்க நீர்ப்பாசனம் மற்றும் நீர்வழித் துறை, புலேசுவரி, இயோராபானி ஆறுகளை தூர்வாரி அவற்றின் இயற்கையான ஓட்டங்களை மீட்டெடுக்க ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஒரு திட்டத்தைத் தொடங்கியது. ஆறுகளில் உள்ள 17 பாலங்களில் இணைக்கப்பட்ட இரும்பு வலைகள் ஆறுகளில் இருந்து மனிதனால் உருவாக்கப்பட்ட கழிவுகளை அகற்றப் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.[3]
நகர்ப்புற சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மையை மேம்படுத்துவதற்கான ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, நகர சந்தைகளில் உள்ள இறைச்சிக் கூடங்களை நவீனமயமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. நதிக்கரையோரங்களில் வசிக்கும் மக்கள், கழிவுநீரை இந்த ஆறுகளில் விடுவதை நிறுத்துமாறு அறிவுறுத்துதல், சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க சமூக கழிப்பறைகளைக் கட்டுவது போன்ற முயற்சிகளும் விவாதிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ SNS (2024-12-13). "State allots Rs 10 cr for twin river rejuvenation". The Statesman (in ஆங்கிலம்). Retrieved 2024-12-23.
- ↑ "Siliguri: ফুলেশ্বরী ও জোড়াপানি নদী সংস্কারের উদ্যোগ সেচ দফতরের..." Zee24Ghanta.com (in Bengali). 2024-01-17. Retrieved 2024-12-23.
- ↑ Bag, Sanchita Aich (2024-12-07). "Desilting of Jorapani & Fuleswari rivers underway with Rs 10 cr budget". www.millenniumpost.in (in ஆங்கிலம்). Retrieved 2024-12-23.