புலியூர்க்குறிச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புலியூர்க்குறிச்சி (Poliyoorkurchy) என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும். இது நாகர்கோவிலிலிருந்து மார்த்தாண்டம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தக்கலைக்கு அருகில் அமைந்துள்ளது.

புலியூர்க்குறிச்சி 250 சதுர கி.மீ பரப்பைக் கொண்டுள்ளது. இங்கு சுமார் 5,853 பேர் வாழ்கின்றனர்.இவரில் ஆண்கள் 2780 பேர் ஆவர். இவரில் பெண்கள்2438 பேர் ஆவர். மொத்தக் கற்றோர் 4763 பேர். இவரில் ஆண்கள் 2331 பேர். இவரில் பெண்கள்2438 பேர். மொத்தக்கல்லாதவர் 1102 பேரகிவ்ரில் ஆண்கள் 1102 பேர். இவரில் பெண்கள் 653 பேர்.

இங்கு முதன்மையாக நெல், வாழை, தென்னை ஆகியன பயிரிடப்படுகின்றன.

இங்குள்ள உதயகிரிக்கோட்டை ஒரு சுற்றுலாத்தலமாகும். இது பத்மநாபபுரம் மன்னன் உதயணன் பெயரால் அழைக்கப்படுகிறது. தற்போது இது மரவீடு, மூலிகைத்தோட்டம், மான்கள் மற்றும் பறவைகள் புகலிடமாகத் உள்ளது.

ஊரில் ஒரு பிள்ளையார் கோயில், சிவன் கோயில் இராமர் கோயில் ஆகியன உள்ளன. சிவன் கோயிலை தமிழ்நாடு அரசு ஏற்று நடத்துகிறது.

இது உதயகிரி கோட்டைக்கு அருகில் உள்ளது. இவ்வூர் மக்கள் தங்கள் காவல் தெய்வமான மேலன் கோடிக்கு ஆண்டுதோறும் பதுக்கை எனும் நேர்த்திக்கடனை மேலக் கோயில் அம்மனுக்குச் செய்துவருகின்றனர். குமரக் கோயில் எனும் முருகன் கோயிலுக்குப் போக இவ்வூரின் வழியாகச் செல்லுதல் குறுகியதாகும். இவ்வூரின் அருகில் ஒரு பொறியியல் கல்லூரி உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

1. https://villageinfo.in/tamil-nadu/tirunelveli/nanguneri/puliyoorkurichi.html  

"https://ta.wikipedia.org/w/index.php?title=புலியூர்க்குறிச்சி&oldid=3866486" இலிருந்து மீள்விக்கப்பட்டது