புலியகுளம்
புலியகுளம் (Puliakulam) | |
— சுற்றுப்புறம் — | |
அமைவிடம் | 11°12′N 77°24′E / 11.2°N 77.4°Eஆள்கூறுகள்: 11°12′N 77°24′E / 11.2°N 77.4°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | கு. இராசாமணி, இ. ஆ. ப [3] |
நகராட்சித் தலைவர் | |
மொழிகள் | தமிழ்
|
---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
புலியகுளம் (ஆங்கிலம்:Puliyakulam) என்பது தமிழ் நாட்டின், கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கு வட்டத்தின் கீழ் வரும் 26 வருவாய் கிராமங்களில் இவ்வூரும் ஒன்றாகும். [4]
வரலாறு[தொகு]
புலியகுளம் இந்திய மாநிலம், தமிழ் நாட்டின் மாவட்டமான கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. இக்கிராமம் கோயம்புத்தூர் நகரில் பழைமையான கிராமங்களில் ஒன்றாகும். இவ்வூரில் உள்ள மக்கள் எட்டு முதல் பத்து தலைமுறைகளாக இங்கே வசித்து வருகின்றனர்.[சான்று தேவை] மேலும் இவ்வூரில் 1982 ஆம் ஆண்டு தேவேந்திர குல அறக்கட்டளையால் கட்டப்பட்ட முந்தி விநாயகர் கோவில் லோக நாயக சனீசுவரன் கோயில் மற்றும் புனித அந்தோணியார் தேவாலயம் ஆகிய வழிபாட்டுத் தலங்கள் மிகவும் பிரபலமானவைகளாகும். மேலும் இந்த முந்தி விநாயகர் கோவிலில் உள்ள விநாயகர் சிலையானது ஆசியாவிலேயே மிகப் பெரிய சிலையாகும். [5]
கலாச்சாரம்[தொகு]
புலியகுளம் கிராம மக்கள் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்டு மாதம் அதாவது தமிழுக்கு ஆடி மாதத்தில் திருவிழாக்கள் கொண்டாடுகின்றனர். இவ்வூர் மக்களுக்கு, தனித்தனியாக பன்னிரண்டு வெவ்வேறு குல தெய்வங்கள் இருந்தாலும், இவ்வூரின் மாரியம்மனை முதன்மைத் தெய்வமாகக் கொண்டுள்ளனர். மேலும் மல்யுத்தம் மற்றும் சிலம்பாட்டம் என்கின்ற பழைய தற்காப்புக் கலைகளின் நிகழ்ச்சிகளும் இன்னும் நடைமுறையில் உள்ளதுடன், அவை, கற்றும் தரப்படுகின்றன. [6]
புவியியல்[தொகு]
இவ்வூரின் அமைவிடம் 11°12′N 77°24′E / 11.2°N 77.4°E ஆகும். மேலும் கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 431 மீட்டர் (1,414 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. [7]
மக்கள் வகைப்பாடு[தொகு]
2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தோராயமாக 1,02,000 மக்கள் புலியகுளத்தில் வசிக்கின்றார்கள்.[8] மற்றும் கோயம்புத்தூர் நகரில் மிகவும் மக்கள்தொகை அடர்த்தி கொண்ட பகுதிகளில் இவ்வூரும் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பொருளாதாரம்[தொகு]
இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். தற்போது இவ்விடத்தில் தொழில் முனைவோர் வளர்ந்து வருகின்றனர். புலியகுளத்தில் அமைந்துள்ள சில பெருநிறுவனங்களின் பெயர்கள் கீழே உள்ளன.
ஆதாரம்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ http://tnmaps.tn.nic.in/taluk.php?dcode=12
- ↑ "புலியகுளம் விநாயகருக்கு ரூ.6 கோடியில் கற்கோவில் கோவைக்கு பெருமை தரும்". தினமலர் (சூலை 30, 2010). பார்த்த நாள் மே 7, 2014.
- ↑ "மல்யுத்தம் மற்றும் சிலம்பம் தற்காப்புக் கலைகள் பயிர்ச்சியகம்". scribd.com. பார்த்த நாள் மே 15, 2014.
- ↑ "புலியகுளம் அமைவிட தீர்க்கரேகை, அட்சரேகை". www.onefivenine.com. பார்த்த நாள் மே 8, 2014.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் மே 7, 2014.
- ↑ [1]
- ↑ [2]
- ↑ [3]