புலிப்பாறைப்பட்டி சுந்தராப் பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு ஸ்ரீ வரதராஜபெருமாள் கோவில்
பெயர்
வேறு பெயர்(கள்):ஸ்ரீ பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விருதுநகர்
அமைவிடம்:புலிப்பாறைப்பட்டி, சிவகாசி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சிவகாசி
மக்களவைத் தொகுதி:விருதுநகர்
கோயில் தகவல்
மூலவர்:ஸ்ரீ வரதராஜபெருமாள் தாயார் = ஸ்ரீதேவி, பூதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:ஆவணி கோகுலாஷ்டமி (கண்ணன் பிறப்பு உற்சவம்)
உற்சவர்:ஸ்ரீ வரதர்
உற்சவர் தாயார்:ஸ்ரீ பெருந்தேவி Direction_posture =
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:நாயக்கர்கள் காலம்
கோயில்களின் எண்ணிக்கை:2
வரலாறு
கட்டிய நாள்:17ஆம் நூற்றாண்டு முதல்18ஆம்நூற்றாண்டு இடையே[சான்று தேவை]

புலிப்பாறைப்பட்டி ஸ்ரீ வரதராஜபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே, புலிப்பாறைப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.

வரலாறு[தொகு]

சந்திரகேது எனும் கந்தர்வன் பிரகஸ்பதியின் சாபத்தால் புலியாகி பூலோகத்தில் சுற்றித் திரிந்தான் ஓர் முறை திருத்தங்கால் திவ்யதேசத்தின் அருகே வந்தபோது அவனுக்கு பூர்வஜென்ம நியாபகம் வர அப்புலி அங்கேயே தங்கி இருந்தது. ஓர் நாள் அத்தலம் வந்த பாண்டிய மன்னன் ஒருவன் அப்புலியை வேட்டையாட வெகுதூரம் துரத்தி வந்து ஓர் பாறையில் வைத்து அம்பினால் அதை கொன்றான் அப்புலி வைகுண்டம் சென்ற இடமாதலால் புலிப்பாறை எனவும் பின்னாளில் புலிப்பாறைப்பட்டி என்றும் பெயர் பெற்றது. இக்கோவில் நாயக்கர்களால் கட்டப்பட்டது. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ தேவி, பூ தேவி, நந்தர், கண்ணபிரான், அசோதை, நம்மாழ்வார், இராமானுஜர், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், ஆதிசேஷன், அனுமன் ஆகிய சன்னதிகளுடன் மடப்பள்ளி தீர்த்தக்கிணற்றுடன் திகழ்கிறது. விநாயகர் தனி சன்னதியில் அருள்கிறார். காவல் தெய்வமாக கருப்பசாமி குடிகொண்டுள்ளார். இந்த கோவில் இவ்வூரின் ஓர் சமுதாய அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் காலை மாலை என இரண்டுகால பூசை நடக்கின்றது. ஆவணி மாதம் கண்ணன்பிறப்பு உற்சவத் திருவிழா, மார்கழி உற்சவம் முதலியன நடைபெருகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)