உள்ளடக்கத்துக்குச் செல்

புலிச்சிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புலிச்சிங்கம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:

புலிச்சிங்கம் அல்லது வேயரிமா (ஆங்கிலம்: Tigon) என்பது ஆண்புலியும் பெண்சிங்கமும் சேர்ந்த கலப்பினத்தில் பிறந்த பூனை இனத்தைச் சேர்ந்த பேரின விலங்காகும்.[1][2] இவ்வினம் லைட்டிகான் விலங்கைப்போல் ஒரு கலப்பின விலங்கு ஆகும். இதன் வளர்ச்சி அசுர தன்மை கொண்டதாக உள்ளது. இந்த விலங்கு உயிரின தோன்றலின் போது இருந்தவை அல்ல. 19ம் நூற்றாண்டுக்கும் 20ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் மனிதனின் ஆராய்ச்சியினால் கலப்பு இனமாக பிறந்த ஒரு விலங்கு. ஜெரார்டு ஐல்ஸ் என்பவர் மூன்று டைகான் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் லிகர் பார்த்ததாக குறிப்பிடவில்லை.[3] டைகான் விலங்கைப் பார்த்தால் இரண்டு மரபணு மூலம் பிறந்தது என்று கண்டுபிடித்துவிட முடியும். ஏனெனில் இவை இரண்டு பெற்றோரின் குணங்களையும் வெளிப்படுத்தும் தன்னை கொண்டதாக உள்ளது.[4]

கருவுற்றல்

[தொகு]

ஜெர்மனி நாட்டின் மாநிலமான பவேரியாவின் தலைநகரான மீனிக் என்ற இடத்தில் உள்ள கெல்லாப்ரான் (Hellabrunn Zoo) மிருக காட்சிசாலையில் 1943ம் ஆண்டு கருச்சேர்க்கை வெற்றிகரமாக நடந்தது. இங்கு பெண் குட்டி சுகாதாரமாக பிறந்தது.[5]

ஆஸ்திரேலியாவின் கான்பரா அருகில் உள்ள மிருக காட்சிசாலையில் டைகான்

மேற்கோள்கள்

[தொகு]

மேலும் பார்க்க

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலிச்சிங்கம்&oldid=3222028" இலிருந்து மீள்விக்கப்பட்டது