புலிக்குத்தி பாண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புலிக்குத்தி பாண்டி
இயக்கம்எம். முத்தையா
தயாரிப்புஎம். முத்தையா
கதைஎம். முத்தையா
இசைஎன். ஆர். ரகுநந்தன்
நடிப்பு
ஒளிப்பதிவுவேல்ராஜ்
விநியோகம்சன் தொலைக்காட்சி
சன் நெக்ட்ஸ்
வெளியீடுசனவரி 15, 2021 (2021-01-15)(இந்தியா)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புலிக்குத்தி பாண்டி என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி சண்டை நாடகத் தொலைக்காட்சித் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு 'எம். முத்தையா' என்பவர் எழுதி, தயாரித்து மற்றும் இயக்க, விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், சமுத்திரக்கனி, சிங்கம்புலி போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[1] இப்படத்திற்கு இசையமைப்பாளர் ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

இப்படம் 15 ஜனவரி 2021 தமிழர் திருநாள் தைப்பொங்கல் மற்றும் நடிகர் விக்ரம் பிரபு பிறந்தநாள் அன்று நேரடியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.[2][3]

கதைசுருக்கம்[தொகு]

கரும்பாலைப் பாண்டி (சமுத்திரக்கனி) என்பவர் பஞ்சாயத்து மற்றும் அதிரடி செய்து வருகின்றார். இவரைச் சூழ்ச்சி செய்து ஒரு கொலை வழக்கில் மாட்டிவிடுகின்றனர். இதற்காகக் கரும்பாலைப் பாண்டிக்குத் தூக்குத் தண்டனை அளிக்கப்படுகிறது. இவரின் மகனானப் புலிப் பாண்டி (விக்ரம் பிரபு) தந்தையைப் போன்றே அதிரடி செய்து வருகிறார். ஆனால் இவர் ஒரு நல்ல நோக்கத்தோடு மற்றும் நல்லவர்களுக்காக அதிரடி செய்கிறார். இவரின் நல்ல பண்புகளைக் கண்டு காதலிச்சு அவரையே திருமணம் செய்ய்கின்றார் நாயகி பேச்சி (லட்சுமி மேனன்).

திருமணத்திற்குப் பின்னர் நல்வழியில் குடும்பத்தோடு சந்தோசமாகவும் அமைதியாக வாழ்கிறார். ஆனால் புலிப் பாண்டியின் எதிரிகள் இவரைப் பழிவாங்கத் துரத்துகின்றனர். ஒரு கட்டத்தில் எதிரிகள் புலிப் பாண்டியைச் சூழ்ச்சி மூலம் கொலைச் செய்கின்றனர். தனது கணவனின் கொலைக்குக் காரணமானவர்களை எப்படிப் பேச்சி மற்றும் அவரின் குடும்பத்தினர் பழி தீர்த்தனர் என்பது தான் கதை.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புலிக்குத்தி_பாண்டி&oldid=3660507" இருந்து மீள்விக்கப்பட்டது