புலிகடிமாஅல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புலிகடி மாஅல் சங்ககால அரசர்களில் ஒருவன். பாரி மகளிரை மணந்துகொள்ள மறுத்த இருங்கோவேளைக் சங்க காலக் கபிலர் புலிகடிமாஅல்! என விளிக்கிறார். [1] ‘மாஅல்’ என்பது திருமாலைக் குறிக்கும் பெயர். புலியின் தாக்குதலைக் கடிந்து காப்பாப்பாற்றியவன் என்று இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஹொய்சளன் கதை[தொகு]

  • தபலகர் என்னும் முனிவர் தவம் செய்துகொண்டிருந்தார். புலி ஒன்று அவரைத் தாக்க வந்தது. சளன் என்னும் யாதவ அரசன் அவ்வழியாக வேட்டையாட வந்தான். முனிவர் அவனிடம் “ஹொய் சள” (சளனே ஓட்டு) என்றார். அவன் ஓட்டினான். அதனால் அவ்வரசன் ஹொய்சளன் எனப்பட்டான். இது ஒரு கதை.
  • சளன் என்னும் அரசன் சகசபுத்தை அடுத்த காட்டிலிருந்த தன் தேவதை வாஸந்தியை வழிபடச் சென்றான். அப்போது புலி ஒன்று அவனைத் தாக்க வந்தது. தேவதை ஒரு இரும்புத் தடியை நீட்டி ‘ஹொய் சள’ என்றது. ஓட்டியவன் ‘ஹொய்சளன்’ எனப்பட்டான்.
  • ஹொய்சளன் என்பதன் தமிழ் வடிவம் ‘புலிகடிமால்’ [2]
  • வடபால் முனிவன் காட்டில் தோன்றி, துவரை ஆண்டு, 49 வழிமுறையாகப் பிரிந்து, நாடாண்டுவந்த வேளிர் குடியில் சிறப்பு மிக்கவன் இருங்கோவேள் எனக் கபிலர் குறிப்பிடுகிறார். [3]
  • கி.பி. 10-14 நூற்றாண்டுகளில் கன்னடத்தை ஆண்ட ஹொய்சள அரசர்களின் மூதாதையரின் ஒரு பிரிவினர் தமிழ்நாட்டிலும் ஆண்டுவந்தனர் என்பதைக் குறிக்கும் சான்று இது எனக் கொள்ள வேண்டும்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. புறநானூறு 202
  2. உ.வே.சாமிநாதையர், புறநானூறு பதிப்பு, 201 பாடலுக்குத் தந்துள்ள குறிப்பு
  3. நீயே, வடபால் முனிவன் தடவினில் தோன்றி செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை உவரா ஈகைத் துவரை ஆண்டு நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே – புறம் 201
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலிகடிமாஅல்&oldid=1210502" இருந்து மீள்விக்கப்பட்டது