புலாவ் இண்டா விரைவுச்சாலை
| புலாவ் இண்டா விரைவுச்சாலை | |
|---|---|
| Pulau Indah Expressway | |
| வழித்தடத் தகவல்கள் | |
| நீளம்: | 17.70 km (11.00 mi) |
| வரலாறு: | கட்டுமான தொடக்கம்: 1990 கட்டுமான நிறைவு: 1994 |
| முக்கிய சந்திப்புகள் | |
| மேற்கு முடிவு: | (இண்டா தீவு) |
| |
| கிழக்கு முடிவு: | பண்டமாரான் |
| அமைவிடம் | |
| முதன்மை இலக்குகள்: | இண்டா தீவு கம்போங் புலாவ் லூமுட் |
| நெடுஞ்சாலை அமைப்பு | |
புலாவ் இண்டா விரைவுச்சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை 118 (ஆங்கிலம்; Pulau Indah Expressway அல்லது Federal Route 181; மலாய்: Lebuhraya Pulau Indah (Laluan 181)) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமப்புற நெடுஞ்சாலை ஆகும். இந்தச் சாலை சா ஆலாம் விரைவுச்சாலையில் இருந்து பண்டமாரான் நகர்ப்புறத்தை இண்டா தீவில் உள்ள மலேசிய மேற்கு துறைமுகத்துடன் (West Port) இணைக்கிறது.[1]
இந்த 17.7 கிமீ (11.0 மைல்) விரைவுச்சாலை, நான்கு ஆண்டுகள் கட்டுமானத்திற்குப் பிறகு, 1995-ஆம் ஆண்டு போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. ஆறு வழிகளைக் கொண்ட அகலமான சா ஆலாம் விரைவுச்சாலையைப் போல் அல்லாமல், புலாவ் இண்டா விரைவுச் சாலை நான்கு வழிச் சாலையாகும். செலாட் லூமுட் பாலம் (Selat Lumut Bridge), கிள்ளான் பள்ளத்தாக்கின் மிக நீளமான நீரிணைப் பாலமாகும்.
பொது
[தொகு]
மலேசிய கூட்டரசு சாலை 181-இன் சுழிய கிலோமீட்டர் இண்டா தீவில் உள்ள மலேசிய மேற்கு துறைமுகத்தில் தொடங்குகிறது. இந்த விரைவுச்சாலையில் ஒவ்வொரு நாளும் ஏராளமான சரக்குந்துகள் பயணிக்கின்றன. இதனால் பல விபத்துக்களும் ஏற்படுகின்றன.[2]
பெரும்பாலான பிரிவுகளில்,
மலேசிய கூட்டரசு சாலை; JKR R5 சாலை தரத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது. இது மணிக்கு 90 கிமீ வேக வரம்பை அனுமதிக்கிறது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. ISSN 1985-9619.
- ↑ Camoens, Austin (11 July 2025). "The Malaysian Hauliers Association (AMH) has urged the public and stakeholders to jointly appeal to the government for infrastructure upgrades on the Pulau Indah Expressway". NST Online (in ஆங்கிலம்). Retrieved 31 October 2025.
வெளி இணைப்புகள்
[தொகு]- ANIH Berhad (Formerly known as Metramac Corporation Sdn Bhd)

