புலவர் அரசு
Appearance
புலவர் அரசு (பிறப்பு: மார்ச் 20, 1940) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கா. திருநாவுக்கரசு எனும் இயற்பெயருடைய இவர் கல்வித்துறையில் எழுத்தராக 15 ஆண்டுகளும், தமிழாசிரியராக 21 ஆண்டுகளும் பணியாறி ஓய்வு பெற்றவர். பம்மல் இலக்கிய மன்ற அமைப்பின் பொதுச்செயலாளராகவும், உலகத் திருக்குறள் மைய பம்மல் கிளையின் செயலாளராகவும் உள்ளார். இவர் எழுதிய "இராசமாதேவி" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாடகம் (உரைநடை, கவிதை ) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.