உள்ளடக்கத்துக்குச் செல்

புலவர்கள் கூறும் பெண்களின் சிகை அலங்காரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புலவர்கள் கூறும் பெண்களின் சிகை அலங்காரங்கள் என்னும் இக்கட்டுரை தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள கூந்தல் அலங்காரங்கள் பற்றியது. பண்டைத் தமிழ் நூல்களில், பெண்களின் கூந்தல் அலங்காரங்கள் பற்றிய குறிப்புக்களும் வர்ணனைகளும் இடம்பெற்றுள்ளன. இவற்றிலிருந்து பல்வேறு சமூக மட்டங்களையும் சேர்ந்த அக்காலத்துப் பெண்களின் கூந்தல் அலங்காரங்கள் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது.

கூந்தற் பெயர்கள்

[தொகு]

தமிழ் இலக்கியங்களில் கூந்தலைக் குறிப்பதற்குப் பல்வேறு சொற்கள் பயன்பட்டுள்ளன. கூழை, ஓதி, சிரியல், சுரியல், கோதை, குரல், கூரல், கொப்பு, முச்சி, சிகழிகை, மராட்டம், பரிசாரம், குந்தளம், விலோதம், மிஞ்சிகம், தம்மிலம் என்பன அவற்றுட் சில.

பழந்தமிழ்ப் பெண்களின் சிகை அலங்காரங்கள்

[தொகு]

இலக்கியங்களில் புலவர்கள் குறிப்பிட்டுள்ள சிகை அலங்காரங்களின் வகைகள் குறித்த பட்டியல்:

இவற்றுள் பொதுவாக முடி, குழல், கொண்டை, பனிச்சை, சுருள் ஆகிய வகைகள் ஐம்பால்முடி எனப்படுகிறது.