புலனடக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புலனடக்கம்[தொகு]

ஐம்புலன்களைப் பக்குவப்படுத்தி கூர்படுத்தலே புலனடக்கம் ஆகும் மாய், வாய் ,கண் ,மூக்கு,செவி ஆகியவை ஐம்புலன்களாகும் . இந்த ஐம்புலன்களே நமது இச்சைகளுக்கும் ,ஆசாபாசங்களுக்கும் அடிப்படை .புலன்கள் நம்மை ஆளும்போது துன்பங்களே மிகும் .ஆசாபாசங்கள் என்ற கடலில் மூழ்கி கரையேற முடியாமல் தவிக்க வேண்டிவரும் . புலன்களை நம் வழிக்கு கொண்டு வந்து விட்டால் அவை நமது விருப்பத்திற்கே இயங்கும் . திருக்குறள் கருத்து

    திருவள்ளுவர் அடக்கமுடைமை அதிகாரத்தில் புலனடக்கம் பற்றி கூறியுள்ளார் . 

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து . ஒரு பிறப்பில் ஒருவன் ஆமை தன் ஐந்து உறுப்புகளையும் ஓட்டினுள் அடக்கிக் கொள்வது போல பாவம் சேராமல் ஐம்பொறிகளையும் அடக்கி ஆள வல்லவனாக இருந்தால் அது அவனுக்கு ஏழு பிறப்பிற்கும் காவலாக அமையும் . திருமூலர் கருத்து புலன்களைக் கடந்தவன் ஞானி என்ற கருத்து உள்ளது. திருமூலர் கூறுவது அஞ்சும் அடக்கு அடக்கு என்பார் அறிவிலார் அஞ்சும் அடக்கில் அமரரும் அங்கு இல்லை அறிவில்லாத மூடர்களே ஞானம் பெற ஐம்புலன்களையும் அடக்கு என தவறான வழிமுறையை போதிப்பார்கள் .அமரர்களால் கூட ஐம்புலன்களையும் அடக்கிவிட முடியாது. ஐம்புலன்களும் அடங்கி விட்டால் ஞானம் என்பதை அடைய முடியாது . நமது ஐம்புலன்களும் யானையைப் போல வலுவானவை .ஒவ்வொரு புலனும் ஒவ்வொரு சக்கரத்தோடு இணைக்கப்பட்டள்ளது .எந்த சக்கரத்தில் பாதிப்பு உள்ளதோ அந்த சக்கரத்தோடு தொடர்புடைய புலன் தனது இயல்பு நிலையிலிருந்து மாறுபடும் .

ஐம்புலன்களையும் அடக்கும் பயிற்சி[தொகு]

ஐம்புலன்களையும் நம் வசப்படுத்த யோகப்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். புல ன் இச்சைகளை உலக ஆசைகளை நாம் சுருக்கிக் கொள்ள வேண்டும் .உலக வாழ்க்கையின் அடிப்படை சூத்திரம் இதுதான். மனம் பண்பாட்டால் புலன்கள் அடங்கும்.

அடக்க நினைத்தால் அலையும் . அறிய நினைத்தால் அடங்கும் என்பர் வேதாத்திரி மகரிஷி .ஐம்புலன்களையும் அடக்க எண்ணாமல் அவற்றைப் பற்றி அறிய முயல வேண்டும். அதற்கு தியானங்களும் , பயிற்சிகளும் உதவுகின்றன.

மேற்கோள் நூல் 1.சூட்சுமம் திறந்த திருமந்திரம் ,டாக்டர் ஜான் பி. நாயகம் ஆர் .எஸ்.பி. பப்ளிகேஷன்ஸ் ,2010

"https://ta.wikipedia.org/w/index.php?title=புலனடக்கம்&oldid=2377107" இருந்து மீள்விக்கப்பட்டது